Search
  • Follow NativePlanet
Share
» »1120 அடி உயரத்தில் காபி விளையும் அழகிய மலைப் பிரதேசம் #மராத்திஉலா 7

1120 அடி உயரத்தில் காபி விளையும் அழகிய மலைப் பிரதேசம் #மராத்திஉலா 7

1120 அடி உயரத்தில் காபி விளையும் அழகிய மலைப் பிரதேசம்

All Photos taken from
PC: Wiki

அமராவதி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிக்கல்தரா நகரம் இங்குள்ள காட்டுயிர் சரணாலயத்திற்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த சிக்கல்தரா பிரதேசம் கடல்மட்டத்திலிருந்து 1120 உயரத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான காப்பி விளையும் பகுதியாகவும் புகழ் பெற்றுள்ளது. இங்கு இருக்கும் சுற்றுலாத் தளங்களில் முக்கியமான ஒரு இடம்தான் காவ்லிகர் கோட்டை. இங்குதான் இன்று நாம் செல்லவிருக்கிறோம். வாருங்கள் காவ்லிகர் கோட்டை பற்றி மராத்திஉலா 7ல் காண்போம்.

 காவ்லிகர் கோட்டை

காவ்லிகர் கோட்டை

காவ்லிகர் கோட்டை சிக்கல்தரா எனும் பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமையான கோட்டை ஆகும். இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு சுற்றுலாவுக்கு செல்பவர்கள் இதனுடன் அருகாமையிலிருக்கும் வேறு பல இடங்களுக்கும் சென்று வருகிறார்கள்.

பழமை

பழமை

சிக்கல்தாரா எனும் அழகிய பீட பூமிப் பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட அற்புத கோட்டை இதுவாகும். இதன் பழமைக்காகவே இது புகழ் பெறுகிறது.

கட்டியது யார் தெரியுமா?

கட்டியது யார் தெரியுமா?

12ம் நூற்றாண்டு வாக்கில் இந்த கோட்டையானது கவாலி எனும் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.

 வரவேற்கும் அழகிய வாயில் பகுதி

வரவேற்கும் அழகிய வாயில் பகுதி

பரா தர்வாசா எனப்படும் கோட்டை வாயில் பகுதி அற்புதமான வடிவமைப்புடன் கோட்டையில் நுழைவதற்கான பிரதான வாசலாக அமைந்துள்ளது.

அருகாமையிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகாமையிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

பீம் குண்ட், கலாகுண்ட், பக்கதரி எனும் அழகிய நீர்வீழ்ச்சிகள், நார்னாலா கோட்டை, பீர் ஏரி, பாஞ்ச் போல் எனும் மலை சுற்றுலாத் தளம் என இந்த பகுதியில் இன்னும் நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. மேலும் இங்கு வருகை தருபவர்களுக்கு ஒரு நாள் முழுமைக்கும் சுற்றிப் பார்த்துவிட்டு செல்கிறார்கள்.

 பாஞ்ச்போல் பாயிண்ட்

பாஞ்ச்போல் பாயிண்ட்

பாஞ்ச்போல் பாயிண்ட் எனும் எழில் மிகுந்த இந்த மலைக்காட்சிதளம் சிக்கல்தரா பகுதியில் பீர் ஏரியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பயணிகள் சுற்றியுள்ள பகுதிகளின் இயற்கை எழிலை நன்றாக ரசிக்கலாம். இதன் ஒரு புறம் காப்பி தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மறுபுறத்தில் சுற்றிலும் ஐந்து மலைகள் சூழ்ந்திருக்க நடுவில் உருவாகியுள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கு உள்ளது. இந்த அற்புத இயற்கை அமைப்பு பிரமிப்புடன் பயணிகளால் ரசிக்கப்படுகிறது. நாம் இந்த இடத்திலிருந்து குரல் கொடுத்தால் மலைப்பாறைகளில் பட்டு தெளிவாக ஐந்து முறை எதிரொலிக்கும் என்பதாக சொல்லப்படுகிறது. இதுவே இந்த மலைக்காட்சிதளத்திற்கு பாஞ்ச்போல் பாயிண்ட் எனும் பெயர் வருவதற்கு காரணம்.

 நார்னலா கோட்டை

நார்னலா கோட்டை

நார்னலா கோட்டை சிறந்த வரலாற்று முக்கியத்துவத்தை உடைய கோட்டையாகும். சிக்கல்தரா பிரதேசத்திலுள்ள இந்த கோட்டை கடுமையான பருவநிலையைத் தாங்கும் விதத்தில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தெலியாகர், ஜஃப்ராபாத் மற்றும் இந்த நார்னலா என்ற இந்த மூன்று கோட்டைகளை உள்ளடக்கிய ஒரு கோட்டையே ஷாகனூர் கோட்டை ஆகும். நார்னலா கோட்டையானது அடர்ந்த காட்டின் நடுவே இயற்கை கொஞ்சும் பிரதேசம் நாலாபுறமும் சூழ்ந்திருக்க அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 973 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோட்டைகள் உருவான வரலாறு பற்றிய தகவல்கள் அறுதியிட்டு சொல்லமுடியாமல் உள்ளது. பல வரலாற்றாசிரியர்களும் பலவிதமாக வெவ்வேறு மன்னர்கள் மற்றும் ராஜவம்சங்களை சேர்ந்தவர்களை இந்த கோட்டைகளை உருவாக்கியவர்களாக குறிப்பிடுகின்றனர்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+