» »மனதைக் கவரும் மகராஷ்ட்ராவிலுள்ள இரட்டை மலைகள் பற்றிய தொகுப்பு !!

மனதைக் கவரும் மகராஷ்ட்ராவிலுள்ள இரட்டை மலைகள் பற்றிய தொகுப்பு !!

Posted By: Bala Karthik

சிகரங்கள், அணைகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், கோட்டைகள், குகைகள், என நாம் பெயர் சூட்டி மகிழும் அனைத்து விதமான இயற்கை அழகையும் கொண்ட ஒரு இடமாக லோனாவாலா காணப்படுகிறது. மதிமயக்கும் அழகிய மலைப்பிரதேசமான இவ்விடம், மும்பையிலிருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த லோனாவாலா என்னும் பெயரானது இரண்டு பர்கிரிட் வார்த்தைகளான லென் மற்றும் அவலியால் தரப்பட, இதற்கு ஓய்வு எடுப்பதற்காக அணிவகுக்கும் இடங்கள், கற்களால் செதுக்கப்பட்டுள்ளது' என அர்த்தமாகும். மிகவும் எளிமையான வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், குகைகள் என அர்த்தமாகும்.

மற்றுமோர் மலைப்பகுதியாக கண்டலா காணப்பட, இந்த அழகிய நகரத்தின் வலதுப்புறத்தில் இது காணப்படுகிறது. இதுவும் லோனாவாலாவை ஒத்த அழகுடன் காணப்பட, இந்த இரண்டு மலை பகுதிகளும், உயரமான மேற்கு தொடர்ச்சியை அணைத்தபடி காணப்பட, வார விடுமுறைக்கு சிறந்த இடத்தேர்வாக இது அமைகிறது. அழகிய நிலப்பரப்புகளும், இயற்கை வளங்களுமென சூழ்ந்திருக்க, மதிமயக்கும் காலநிலையும் நம்மை வெகுவாக கவர்கிறது.

சிக்கி என்பது வேர்கடலை கொண்டு தயாரிக்கப்படும் கடினமான இனிப்பு மிட்டாயாகும். லோனாவாலாவில் இம்மிட்டாய் பிரசித்திபெற்று விளங்க, சூடான, சுவையான வடா பாவ் மற்றும் மசாலா சாய்யும் கண்டலா மற்றும் லோனாவாலாவின் அழகை ரசித்தபடி சாப்பிட்டு மனமகிழ ஏதுவாக அமைகிறது.

கண்டலா

கண்டலா


சிக்கி என்பது வேர்கடலை கொண்டு தயாரிக்கப்படும் கடினமான இனிப்பு மிட்டாயாகும். லோனாவாலாவில் இம்மிட்டாய் பிரசித்திபெற்று விளங்க, சூடான, சுவையான வடா பாவ் மற்றும் மசாலா சாய்யும் கண்டலா மற்றும் லோனாவாலாவின் அழகை ரசித்தபடி சாப்பிட்டு மனமகிழ ஏதுவாக அமைகிறது.

Elroy Serrao

 கண்டலா மற்றும் லோனாவாலாவை நாம் காண சிறந்த நேரங்கள்:

கண்டலா மற்றும் லோனாவாலாவை நாம் காண சிறந்த நேரங்கள்:

இந்த இரண்டு மலை பகுதிகளில் எண்ணற்ற காட்சிகள் காணப்பட, நீங்கள் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், அணைகள் என நீரினையும் நாம் அள்ளி விளையாடலாம். பருவமழைக்காலங்களான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இந்த இடம், காண ஏதுவாக அமைய, கடுமையான அடைமழையாகவும் அமைகிறது.

இருப்பினும், இந்த பயணத்தின் மூலம் மதிமயக்கும் இயற்கை அழகால் உங்கள் மனதை அரவணைக்க நீங்கள் ஆசைக்கொண்டால், குளிர்காலமான அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் பயணத்துக்கு ஏதுவாக அமைகிறது. நீங்கள் சவுகரியமாக பயணம் மேற்கொண்டு, மழை ஊட்டப்பட்ட பசுமையான புல்வெளிகளை கண்டு பெருமூச்செறிந்து பார்க்கலாம்.

மும்பையிலிருந்து லோனாவாலாவுக்கு வழி:

மும்பையிலிருந்து லோனாவாலாவுக்கு வழி:


சேட்டா நகர் - பெங்களூரு - மும்பை நெடுஞ்சாலைவழி - கண்டலாவின் ஆசியவழி 47 - லோனாவாலா.

மும்பையிலிருந்து லோனாவாலாவுக்கு வழி எளிதாக இருக்க, லோனாவாலாவுக்கு முன்னரே கண்டலா வந்துவிடுகிறது. அதனால், இங்கே நாம் முதலில் நிறுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த நீண்ட நெடிய பயணத்தில் 83 கிலோமீட்டரை கடக்க நமக்கு 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகிறது.

நெடுஞ்சாலை வழியே ஒரு ட்ரைவ்:

நெடுஞ்சாலை வழியே ஒரு ட்ரைவ்:

மும்பையிலிருந்து லோனாவாலாவிற்கான தூரம் குறைவென்பதால், இந்த வழியில் பார்ப்பதற்கான இடங்கள் அவ்வளவாக ஒன்றும் இருப்பதில்லை. இருப்பினும் இவ்வழியில் நவி மும்பை வர, அதனை தவிர வொன்டர் பார்க், பாண்டவகடா நீர்வீழ்ச்சி, அல்லது பார்சிக் வீழ்ச்சி என நாம் பார்க்க குறைவாகவே காணப்படுகிறது.

இவற்றை கடந்து, நகரத்து போக்குவரத்து நெரிசலுக்கான மாற்றங்கள், பசுமையான இடங்களில் காணப்படும் கட்டிடங்கள், என செல்லும் வழியில் அழகிய காட்சிகளால் கண்கள் புதுவித அனுபவத்தை அடைகிறது.

மகாராஷ்டிராவின் இந்த இரட்டை மலைப்பகுதிகளில் நாம் பார்க்க என்னவெல்லாம் இருக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்.

Uday Hasrali

சிகரங்கள் மற்றும் பார்வை புள்ளிகள்:

சிகரங்கள் மற்றும் பார்வை புள்ளிகள்:


‘டைகர் லீப்' மிகவும் பிரசித்திபெற்ற சிகரமாக விளங்க, லோனாவாலாவில் காணப்படுகிறது. 2,100 அடி உயரத்தில் காணப்படும் இந்த பகுதி, இரண்டு மலைப்பகுதிகளின் ஒட்டுமொத்த காட்சியை பரிசாய் அளிக்கிறது. பருவமழைக்காலத்தில், உயிர் பெற்று விழும் நீர்வீழ்ச்சியின் நீர்களையும் நம்மால் இங்கே காண முடிகிறது.

‘லையன் பாய்ன்ட்' என்ற குன்று, புஷி அணை மற்றும் ஆம்பி பள்ளத்தாக்குடன் தழுவி காணப்பட, துங்கர்லி ஏரியின் ஒட்டுமொத்த காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது. ‘ட்யூக் நோஸ்' என்பதும் காட்சி புள்ளியாக அமைய, வெல்லிங்க்டன் நோஸின் ட்யூக்கை ஒத்த அழகுடன் இது காணப்படுவதால் இப்பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

அம்ருதன்ஜன் சிகரம் கண்டலாவில் காணப்பட, இங்கிருந்து நாம் பார்க்க ட்யூக் நோஸின் அற்புதமான காட்சி தெரிகிறது. அதோடுமட்டுமல்லாமல், கொப்புலியின் ஒட்டு மொத்த நகரத்து காட்சியையும் நம்மால் பார்க்க முடிகிறது.

Manu Jha

மலை ஏறும் பயணம் மற்றும் கூடாரமிடல்:

மலை ஏறும் பயணம் மற்றும் கூடாரமிடல்:

அட்ரனலின் சுரப்பியின் வேகத்தை அதிகமூட்டும் லோனாவாலாவில் எண்ணற்ற இடங்கள் பயணத்திற்கு ஏற்று குவிந்து கிடக்கிறது. ட்யூக் நோஸ், லயன்ஸ் பாய்ன்ட், மற்றும் டைகர் லீப் போன்ற காட்சிபுள்ளிகளை நாம் அடைய, பயணம் செல்ல வேண்டியது அவசியமாகிறது. இந்த பயணமானது எளிதாக இருக்க, கத்துக்குட்டி பயணிகளுக்கு ஒரு நாள் சிறந்த பயணமாக இது அமைகிறது.

காட்சிப்புள்ளிகளை தவிர்த்து, லோனாவாலாவில் காணப்படும் நிறைய கோட்டைகளான லோகத் கோட்டை பயணம், கோரிகாட் பயணம், கங்கட், மற்றும் டைபாலியா கோட்டை பயணம், ராஜ்மச்சி கோட்டை பயணம் ஆகியவற்றிற்கு பலரும் தினமும் வந்து செல்ல, லோனாவாலாவில் 10 முதல் 15 இடங்கள் பயணத்திற்கு ஏற்று சிறப்பாய் அமைகிறது. இந்த அனைத்து பயணங்களும், அடிவாரத்தில் தொடங்கி, ஆர அமர நாம்செல்வதன் மூலம் உச்சியை இரவில் அடைந்து கூடாரம் அமைக்கும் பணியுடன் நிறைவடைகிறது.

solarisgirl

குனே நீர்வீழ்ச்சி:

குனே நீர்வீழ்ச்சி:

கண்டலாவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சியானது அமைந்திருக்க, சுமார் 2000 அடி உயரத்தில் காணப்படுவதோடு இந்தியாவின் 14ஆவது உயரமான நீர்வீழ்ச்சி என்ற பெருமையுடனும் சிறந்து விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சியில் பசுமையானது பின்புலத்தில் சூழ்ந்திருக்க, குனே நீர்வீழ்ச்சியானது பெருமூச்செறிந்து நம்மை பார்க்க வைப்பதோடு, ‘மறந்திடாதே கண்ணே' எனவும் நம் மனதில் காட்சிகளை பதிய செய்கிறது.

இந்த நீர்வீழ்ச்சியை, குறிப்பாக பருவமழைக்காலத்தில் பெரிதும் புகழ்ந்திட, மழை அருவியின் அழகால் வேகமாக பாய்ந்து மனதினையும் இழுத்துக்கொண்டு தண்ணீருக்குள் செல்கிறது இவ்விடம்.

Kumar's Edit

துதிவார் நீர்வீழ்ச்சியில் இரண்டு கயிற்றினை கொண்டு செங்குத்தாக இறங்குமோர் பயணம்:

துதிவார் நீர்வீழ்ச்சியில் இரண்டு கயிற்றினை கொண்டு செங்குத்தாக இறங்குமோர் பயணம்:

135 அடி உயரத்தில் இந்த துதிவார் நீர்வீழ்ச்சி காணப்பட, சாகசமூட்டும் நீர்வீழ்ச்சி கயிற்று பயணத்திற்கு நம்மை வரவேற்கிறது. இரண்டு கயிற்றை பிடித்துக்கொண்டு செங்குத்தான சரிவில் நாம் இறங்குவது சாகச செயலாக அமைய, பாறைகளானது சரிவாக கீழ் நோக்கி செல்ல, கொட்டும் நீர்வீழ்ச்சியின் அழகினையும் நாம் ரசித்துக்கொண்டு, பாதுகாப்பாக கயிற்றை பிடித்து இறங்கியபடி பரவசமடைந்து மனதினை இதமாக்க முயல்கிறோம்.

நீங்கள், உள்ளூர் சேவைகள் பலவற்றை இங்கே காண... சாகச குழுக்களும் தினசரி திட்டமாக அமைந்து லோனாவாலாவிற்கு உங்களை வரவேற்கிறது.

Scarleth White

குகை ஆய்வு: பெட்சா குகைகள்:

குகை ஆய்வு: பெட்சா குகைகள்:

கி.மு 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இந்த பழமையான குகைகள், 1861ஆம் ஆண்டு வரை வழக்கமான ஓவியங்களாலும், சுத்தம் செய்தும் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆம், இவற்றை செய்தவர்கள் இந்த குகைகளுக்கு வந்து தன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்ட ஆங்கிலேய அதிகாரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கே இரண்டு முக்கிய குகைகள் காணப்பட, அவற்றுள் ஒரு குகையின் பெயர் சைத்யா அல்லது வழிபாட்டு அரங்கமாகவும், மற்றுமொன்று விஹாரா அல்லது மடாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குகைகள் செதுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்க, புத்த சமயத்து கலைகளை பிரதிபலித்த வண்ணம் இவை காட்சியளிக்கிறது.

KulkarniParimal

குகை ஆய்வு: கர்லா மற்றும் பாஜா குகைகள்:

குகை ஆய்வு: கர்லா மற்றும் பாஜா குகைகள்:

இந்த கர்லா மற்றும் பாஜா குகைகள், கம்பீரமான பாறை வெட்டு புத்த குகைகளாக காணப்பட, கி.மு 2ஆம் நூற்றாண்டு முதல் 5ஆம் நூற்றாண்டு வரை இது கட்டப்பட்டது என்றும் தெரியவருகிறது. இந்த குகையானது நினைவு சின்னமாக இந்தியாவின் தொல்பொருள் துறைக்கு கீழ் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த கர்லா குகைகள் மேற்கு தொடர்ச்சி மலைமுகட்டில் காணப்பட, பாறை மலைகளை கொண்டு இதன் ஜன்னல்கள் பெரிதாக செய்யப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டு அரங்கம் அல்லது சைத்யாவில் தூண்கள் நிறைய காணப்பட, கல்வெட்டுகளும் கண்களுக்கு புலப்படுகிறது. இந்த குகையின் சுவற்றில் அழகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பாஜா குகையில் 22 குகைகள் குழுக்களாக காணப்பட, கட்டிடக்கலை வடிவமைப்புகளை கொண்டு கர்லா குகையின் அழகை ஒத்த இதுவும் காணப்படுகிறது. பாஜா குகைகளில் காணப்படும் சிற்பங்கள், இந்திய இசைக்கருவியான தப்லாவையும் பிரதிபலிக்கிறது. இதனால் 2000 வருடங்களுக்கு முன்னதாகவே தப்லா பயன்படுத்தப்பட்டது தெரியவர, 7 கிலோமீட்டர் கடந்து இந்த இரண்டு குகைகளும் காணப்படுகிறது.

lensnmatter

ராஜ்மச்சி கோட்டை:

ராஜ்மச்சி கோட்டை:


இரண்டு கோட்டைகள் ஒன்றாக இணைந்து காணப்படுவது ராஜ்மச்சி ஆகும். மனரஞ்சன் மற்றும் ஸ்ரீவரதன் கோட்டைகள் என அதற்கு பெயர்கள் காணப்பட, வரலாற்று சுவடுகள் படி, போர்கட்டை கட்டுபடுத்தும் ஓர் கோட்டை என்றும், கொப்புலி மற்றும் கண்டலாவிற்கு இடைப்பட்ட பகுதி இது எனவும் நமக்கு தெரிய வருகிறது.

இந்த கோட்டையில் சில கோவில்கள் காணப்பட, அவற்றோடு இணைந்து பெருந்தன்மைமிக்க நுழைவாயிலும், வலிமையான சுவர்களும், நீர்த்தேக்கங்களும், என மற்றும் இன்னும் சில பிரிவுகளும் கோட்டையில் காணப்படுகிறது. ராஜ்மச்சியில் காணப்படும் இரு கோட்டைகளும் கட்டிடக்கலையின் அற்புதத்தை நமக்கு உணர்த்த, இந்த கோட்டையானது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களும் திறக்கப்படுகிறது.

இந்த கோட்டையை தவிர்த்து, வனவிலங்கு சரணாலயத்திற்கு வீடாக ராஜ்மச்சி விளங்க, இங்கே கவர்ச்சிகரமான, அரிதான தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் இந்த கோட்டைக்கு பயணம் வருவதன் மூலமாக பறவைகளையும் நம்மால் பார்த்து பரவசமடைய முடிகிறது.

Kandoi.sid

லோஹாகத் மற்றும் வைசப்பூர் கோட்டை:

லோஹாகத் மற்றும் வைசப்பூர் கோட்டை:

மற்றுமோர் அழகிய மலைக் கோட்டையான லோஹாகத், லோனாவாலாவில் காணப்பட, வைசப்பூர் கோட்டையும் லோஹாகத்துடன் இணைந்தே பங்களிப்பில் கட்டபட்டிருக்கிறது. ஆம், வைசப்பூர் கோட்டை சிறு எல்லையில் கட்டப்பட, அதன்பின்னர் லோஹாகத் கோட்டையுடன் இணைந்து கட்டப்பட்டதாம். இந்த இரு கோட்டைகளும் மராட்டிய ஆட்சிக்கு கீழ் கட்டப்பட, அதன்பின்னர் முகலாய ஆட்சியின்போது ஐந்து வருடங்கள் இந்த கோட்டை விரிவுபடுத்தப்பட்டது.

வைசப்பூர் கோட்டை, லோஹாகத்தை விட பெரிதாக காணப்பட, தண்ணீர் தொட்டிகள், குகைகள், பழைய வீடுகள் என கோட்டையின் உள்ளே காணப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியின்போது, வைசப்பூர் கோட்டையானது முகட்டு புள்ளியாக அமைய, லோஹாகத்தின் மராட்டியர்களுக்கு எதிரான தடுப்பு சுவறாகவும் இது விளங்கியது.Varun Patil

லோனாவாலாவை சுற்றி காணப்படும் மற்ற கோட்டை:

லோனாவாலாவை சுற்றி காணப்படும் மற்ற கோட்டை:

அனைத்தும் நிறைந்த இடமாக லோனாவாலா காணப்பட, நாம் பார்த்த மூன்று கோட்டைகளை தவிர்த்து, கண்டலா மற்றும் லோனாவாலாவை சுற்றி, திகோனா கோட்டை, துங்கா கோட்டை, கோரிகாத் கோட்டை ஆகியவை காணப்படுகிறது.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட மலைக்கோட்டை, இயற்கை மற்றும் சாகச பிரியர்களின் சிறப்பிடமாக அமைய, பசுமையான காட்சிகளும் மலையில் சூழ்ந்து பயணத்தை புத்துணர்ச்சி கொள்ள செய்கிறது. இந்த கோட்டையில் சின்னஞ்சிறிய, யாரும் கண்டிராத சந்தோஷங்களும் குகைகளில் நமக்காக காத்திருக்கிறது.

Elroy Serrao

 துங்கர்லி மற்றும் லோனாவாலா ஏரிகள்:

துங்கர்லி மற்றும் லோனாவாலா ஏரிகள்:

லோனாவாலாவை பார்த்துவிட்டு மட்டும் நீங்கள் திரும்புவது பயணத்தை பூர்த்தி செய்ய மறுக்க, ‘நானும் இருக்கிறேன் பார்க்க' என லோனாவாலாவின் பிரசித்திபெற்ற ஏரிகளின் சத்தம் நம் காதுகளை கிழிக்கிறது. நகரத்து மையத்திலிருந்து 1.6 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட, இந்த லோனாவாலா ஏரியானது அழகிய மற்றும் அமைதியான ஏரியாக அமைந்து சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளையும் வரவழைக்க தூண்டுகிறது.

துங்கர்லி ஏரியானது சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக அமைய, இங்கே நீரின் ஆதாரமானது லோனாவாலா மக்களுக்கு கிடைப்பதையும் நாம் பார்க்கிறோம். இந்த ஏரியானது துங்கர்லி அணைக்கு வீடாக அமைய, 1930ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இது கட்டமைக்கப்பட்டதும் தெரிய வருகிறது.

இருப்பினும், பருவமழைக்காலத்தின் மழை ஊட்டலால் மட்டும் இந்த ஏரியானது காணப்பட, மற்ற மாதங்களில் ஏரியானது வரண்டே காணப்படுகிறது.

Ramakrishna Reddy Y

லோனாவாலா அணை:

லோனாவாலா அணை:

முன்பு கூறியதை போல, லோனாவாலாவில் எண்ணற்ற இயற்கை காட்சிகள் சூழ்ந்து காணப்படுவதோடு...நகரத்தில் எண்ணற்ற அணைகளும் கொண்டிருக்க, அவற்றுள் பிரசித்திபெற்ற ஒரு அணையாக புஷி அணை காணப்படுகிறது. புஷி அணையானது புஷி ஏரியை உருவாக்க, லோனாவாலா மக்களுக்கும் வார விடுமுறைக்கு ஏற்ற சிறந்த இடமாக அமைவதோடு சுற்றுலா கூட்டமும் அவர்களுடன் சூழ்ந்துக் கொள்கிறது.

துங்கர்லி அணை, வல்வன் அணை, பாவ்னா அணை என லோனாவாலாவில் சில அணைகள் காணப்பட, சுற்றுலாவிற்கு ஏற்ற சிறந்த இடமாக இது அமைகிறது. இங்கே வருவதன் மூலம், ஒரு கப் மசாலா சாய் குடித்து இங்கே காணும் அழகிய காட்சியை நாம் ரசிக்கலாம்.

Vivek Shrivastava

Read more about: travel hills

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்