» »அகத்திய முனிவர் செய்த தங்க விக்ரகம் எங்கே இருக்கு தெரியுமா?

அகத்திய முனிவர் செய்த தங்க விக்ரகம் எங்கே இருக்கு தெரியுமா?

Written By: Udhaya

கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டைப்போலவே நிறைய உள்ளூர் வழிபாட்டு முறையை கொண்டது. அம்மனையும், சிவபெருமானையும் வணங்கக்கூடிய மக்கள் இங்கு அதிகம் வாழ்கின்றனர். அகத்தியமலையிலிருந்து வந்த அகத்திய முனிவர் நவ பாசாணங்களைக் கொண்டு சிலை செய்தவர் என்பது நமக்கு தெரியும். மேலும் அவர் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையும் கற்றுத் தேர்ந்தவர். அவரே தங்கத்தால் ஆன விக்ரகம் ஒன்றை செய்தார். அதை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலில் வைத்தார். வாருங்கள் அந்த கோயிலுக்கு செல்வோம்.

பத்ரா நதிக்கரை

பத்ரா நதிக்கரை

அன்னபூர்ணேஸ்வரி கோயில் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், பத்ரா நதியின் கரையோரமாக அமைந்திருக்கிறது. இது ஸ்ரீ ஷேத்ர ஹொரநாடு என்றும் அழைக்கப்படுகிறது.
Wind4wings

அகத்தியமுனி

அகத்தியமுனி


இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அன்னபூர்ணேஸ்வரி விக்ரகத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாக புராணம் கூறுகிறது .இந்த விக்ரகம் தங்கத்தால் செய்யப்பட்டது ஆகும்.


Gnanapiti

சிதிலமடைந்த கோயில்

சிதிலமடைந்த கோயில்

ஒரு முறை சிவபெருமானுக்கு ஏற்பட்ட சாபத்துக்கு இந்த அன்னபூர்ணேஸ்வரி அம்மன்தான் விமோச்சனம் அளித்ததாக நம்பப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்து காணப்பட்ட இந்தக் கோயில் பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

www.itslife.in

தேவியின் அமைப்பு

தேவியின் அமைப்பு

அதன் பின் இந்த அம்மனுக்கு 'ஆதி சக்த்ய மகா ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி' என்ற சிறப்பு பெயரும் வந்தது. அன்னபூர்ணேஸ்வரி அம்மன் தன் நான்கு கைகளிலும் ஸ்ரீ சக்கரத்தையும், சக்கரத்தையும், சங்கையும் , தேவி காயத்ரியையும் பிடித்த வண்ணம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

www.itslife.in

உணவுப் பஞ்சமே இல்லை

உணவுப் பஞ்சமே இல்லை

அன்னபூரணி என்னும் பெயருக்கு ஏற்றார் போல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மூன்று வேலை உணவும், உறைவிடவும் தந்து அக்ஷயப் பாத்திரமாகவே திகழ்கிறது இந்தக் கோயில். இந்த அம்மனை தரிசிப்பவர்களுக்கு வாழ்கையில் உணவுப் பஞ்சமே வராது என்று சொல்லப்படுகிறது.

Wind4wings

Read more about: travel temple karnataka

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்