Search
  • Follow NativePlanet
Share
» »இப்படியொரு இடத்திற்கு உங்கள் வாழ்கையில் சென்றிருக்கவே முடியாது. அந்த இடம் எது தெரியுமா ?

இப்படியொரு இடத்திற்கு உங்கள் வாழ்கையில் சென்றிருக்கவே முடியாது. அந்த இடம் எது தெரியுமா ?

By Staff

சிக்கிம், எங்கோ வட கிழக்கில் இருக்கும் மலைகள் சூழ்ந்த சிறிய மாநிலம் என்று அறியப்படும் இங்கே இன்னும் வெளியுலகிற்கு அதிகம் தெரிந்திராத பல அற்புதமான சுற்றுலாத்தலங்கள் மறைந்திருக்கின்றன. இமயமலைத்தொடரில் இருக்கும் இந்த மாநிலத்தில் இருக்கும் மனிதனால் அதிகம் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றுதான் குருடோங்மர் ஏரி.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத அழகை கொண்டிருக்கிறது என்பதை தாண்டி ஈராயிரம் வருட ஆன்மீக வரலாற்றையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறது இந்த குருடோங்மர் ஏரி. சர்ச்சைக்குரிய இந்திய - சீன எல்லையில் அமைந்திருக்கும் அற்புதமான இந்த சுற்றுலாத்தலதிற்கு செல்ல எந்தெந்த மாதங்களில் உகந்தவை, பயணத்திட்டம் எப்படி இருக்கவேண்டும், அருகிலிருக்கும் தங்கும் விடுதிகள் என்னென்ன என்பது போன்ற விவரங்களை விரிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

சிக்கிம் மாநிலத்தில் வடக்கு பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 17,800 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது பேரழகு நிறைந்த குருடோங்மர் ஏரி.

இமயமலைத்தொடரில் இருக்கும் அதிகம் அறியப்படாத, சற்றும் மாசுபடுத்தபடாத அற்புதமான இயற்கை பொக்கிஷங்களில் இதுவும் ஒன்றாகும்.

Neelima v

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

ஒரு சுற்றுலாத்தலம் என்பதைக்காட்டிலும் ஆன்மீக ஸ்தலமாக இந்த ஏரி புகழ்பெற்று விளங்குகிறது. திபெத்திய பௌத்த மத பிரிவை சேர்ந்தவர்களும், சீக்கியர்களும் இந்த ஏரியை புனிதமானதாக கருதி வழிபடுகின்றனர்.

பஞ்சாபில் மட்டுமே இருக்கும் சீக்கியர்கள் எங்கோ சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் இந்த ஏரியை வழிபட என்ன காரணம் என்பதை அடுத்த பக்கத்தில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Vickeylepcha

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக், 15ஆம் நூற்றாண்டில் தன்னுடைய திபெத் பயணத்தை முடித்துவிட்டு சிக்கிம் வழியாக வந்துகொண்டிருக்கும் போது குருடோங்மர் ஏரியின் அருகில் வசித்துவந்த கிராமவாசிகள் நானக் அவர்களை பற்றி கேள்வியுற்று அவரை கண்டு வழிபட்டிருக்கின்றனர்.

பின்னர் குருடோங்மர் கிராமவாசிகள் தங்களின் வாழ்வாதாரமாக இருக்கும்குருடோங்மர் ஏரியை ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க குரு நானக் அவர்கள் 'இந்த ஏரியின் நீரை பருகுபவர்கள் அதீத சக்தியை பெறுவார்கள் என்றும், கடுமையான குளிர் காலத்திலும் ஏரியின் ஒரு பகுதி உறைந்துபோகாமல் இருக்கும்' என்றும் ஆசிர்வதித்ததாக சொல்லப்படுகிறது. இதனாலேயே தங்களின் புனித குருவால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த ஏரிக்கு ஏராளமான அளவில் சீக்கியர்கள் வருகிறார்கள்.

soumyajit pramanick

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

குளிர்காலத்தில் இந்த ஏரி உறைந்து போய் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட தரையை போல காட்சியளிக்கிறது.

சீன எல்லையில் இருந்து வெறும் ஐந்து கி.மீ தொலைவில் இருக்கும் இந்த ஏரிக்கு செல்ல இந்திய ராணுவத்திடம் முறையான முன் அனுமதி பெறவேண்டியது அவசியமாகும்.

Amareshwara Sainadh

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

கோடை காலத்தில் இதமான தட்பவெட்பமும், தெளிவான வானிலையும் நிலவும் போது இந்த ஏரியில் இருந்து உலகின் மிக உயரமான சிகரமான கஞ்சன்சுங்காவை காண முடியும்.

இந்த ஏரியில் இருக்கும் தண்ணீர் மிகத்தெளிவானதாகவும், சுவையானதாகவும் இருக்கிறது.

Dipta Subhra Sarkar

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் டீஸ்டா என்னும் நதி மேற்கு வங்காளம், பங்களாதேஷ் ஆகிய இடங்களின் வழியாக பாய்ந்து இறுதியாக வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

இந்த ஏரிக்கு சுற்றுலா வர விரும்புகிறவர்கள் சிக்கிம் தலைநகரான கேங்க்டாக்கில் இருந்து பயணத்தை துவக்கி 130கி.மீ தொலைவில் இருக்கும் லசேன் என்ற இடத்தை அடையவேண்டும்.

அங்கே இரவு ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையில் பயணத்தை துவங்கினால் லசெனில் இருந்து 68 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த குருடோங்மர் ஏரி 3-4 மணிநேர பயணத்தில் சென்றடையலாம். லச்செனில் இருந்து பாதை மிகவும் கடுமையானதாக இருக்குமென்பதால் கார் ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை.

Kiran SRK

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

அருகில் மருத்துவமனைகள் எதுவும் இல்லை என்பதால் குருடோங்மர் ஏரிக்கு சுற்றுலா செல்பவர்கள் காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்கான மருந்துகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

Virtous One

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் இங்கே ஆக்சிஜென் அளவு மிகவும் குறைவாகும். எனவே, அதிகபட்சம் ஒருவரால் இங்கே ஒருமணிநேரம் மட்டுமே இருக்க முடியும். அதன் பிறகு ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் உடல் கடுமையாக சோர்வடைய ஆரம்பித்துவிடும்.

மேலும், சிறு சுவாச பிரச்சனை இருப்பவர்களும் இந்த இடத்திற்கு வருவதை தவிர்ப்பது நல்லது.

Vickeylepcha

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

மார்ச் - ஜூன் வரையிலான காலகட்டத்தில் இங்கே செல்வது உகந்ததாக சொல்லப்படுகிறது. என்னதான் மற்ற சுற்றுலாத்தளங்களை காட்டிலும் இந்த ஏரியை அடைவது கடினமாக இருந்தாலும்குருடோங்மர் ஏரியின் அழகுக்கு முன்னாள் அந்த கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் காணாமல் போய்விடும்.

Sunil

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

புதுமையான இந்தகுருடோங்மர் ஏரிக்கு வாழ்கையில் ஒருமுறையேனும் கட்டாயம் சென்று வாருங்கள்.

குருடோங்மர் ஏரி அமைந்திருக்கும் சிக்கிம் மாநிலத்தை பற்றிய தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழின் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Saran Chamling

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரியை நோக்கி செல்லும் சாலை.

Hari Ratan

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரிக்கு மிக அருகிலேயே சர்வ தர்ம ஸ்தலம் என்ற பௌத்த மடாலயம் ஒன்றும் இருக்கிறது. மத வேறுபாடுகளை கடந்து இந்த மடாலயத்தினுள் சென்று நாம் பிரார்த்தனை செய்யலாம்.

குருடோங்மர் ஏரி !!

குருடோங்மர் ஏரி !!

1938ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குருடோங்மர் ஏரியின் ஒரு அரிய புகைப்படம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X