Search
  • Follow NativePlanet
Share
» »ஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு - மனம் சிலிர்க்கும் பயணம்

ஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு - மனம் சிலிர்க்கும் பயணம்

ஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு பெயரிலேயே நம்மை மகிழ்வாக்கும் இந்த இடத்துக்கு செல்வது முசூரியிலிருந்து எளிதுதான். முசூரியின் லைப்ரரி பாய்ண்டுக்கு மேற்கு திசையில் அமைந்துள்ளது இந்த ஹேப்பி வ

By Udhaya

ஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு பெயரிலேயே நம்மை மகிழ்வாக்கும் இந்த இடத்துக்கு செல்வது முசூரியிலிருந்து எளிதுதான். முசூரியின் லைப்ரரி பாய்ண்டுக்கு மேற்கு திசையில் அமைந்துள்ளது இந்த ஹேப்பி வேலி எனும் மகிழ்ச்சிப் பள்ளதாக்கு. இது கிளவுட்ஸ் எண்ட் வரை தொடர்கிறது. இங்கு நகராட்சித் தோட்டமும், திபெத்திய கோயில்களும் அமைந்துள்ளன. இந்த இடத்தில் பயணிகள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மேலும் இங்குள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும், என்னென்ன காணவேண்டும், என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

எங்கே இருக்கிறது?

எங்கே இருக்கிறது?

இந்தியாவின் வடக்கு எல்லையில் இமயமலை அருகே அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் இருக்கும் முசூரி அருகே அமைந்துள்ள பள்ளத்தாக்கு ஹேப்பி பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. தலாய் மலைகளுக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள இந்த சுற்றுலாத் தளம் மிகவும் அழகானதாகவும், அமைதியானதாகவும் காணப்படுகிறது.

RajatVash

பொதுவான தகவல்கள்

பொதுவான தகவல்கள்


எதற்காக செல்லலாம் - இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், வரலாற்றுக்காகவும், மதத்துக்காகவும், புகைப்படமெடுக்கவும், ஷாப்பிங்க் செய்யவும் இந்த இடத்துக்கு பயணம் செய்யலாம்.

கட்டணம் - நுழைவுக் கட்டணம் என்று எதுவும் இல்லை. அதேநேரத்தில் பார்க்கிங் உள்ளிட்ட சில கட்டணங்கள் சில இடங்களில் இருக்கலாம்.

பார்வைக்கான நேரம் - பொதுவாக சுற்றுலாப் பயணிகள் பகல் நேரங்களில் வருகை தந்து இரவு ஆவதற்குள் கிளம்பிவிடுகின்றனர். பகலில் ஹேப்பி வேலியின் அழகை கண்டு சிலிர்க்கின்றனர். எனினும் இரவு நேரங்களில் பார்க்கவும் அழகாக தோற்றமளிக்கிறது இந்த இடம்.

பொழுதுபோக்கும் நேரம் - இங்கு தாராளமாக 2 முதல் 3 மணி நேரங்கள்

Mohithdotnet

ஹேப்பி வேலி எப்படி உருவானது

ஹேப்பி வேலி எப்படி உருவானது

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் தொழில்நுட்பம் வளரத் தொடங்கியதிலிருந்து மக்கள் இடம்பெயர ஆரம்பித்தார்கள். இதிலிருந்து முசூரி நல்ல நகரமாக மாறத் தொடங்கியது. இந்த இடம் காண்பதற்கு அழகாகவும், சிறப்பாகவும் இருப்பதனால், இந்த இடத்துக்கு அடிக்கடி சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர். இதனால் இங்கு மகிழ்ச்சி நிறைந்திருந்தது. சோகமான நேரங்களிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும் இங்கு வந்து மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்கியதால், இந்த இடத்துக்கு ஹேப்பி வேலி என்றே பெயரிட்டு அழைத்தனர். இப்படியாகத்தான் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு உருவாகியது.

Acabashi.

பயணிகளே விழிப்பாய் இருங்கள்

பயணிகளே விழிப்பாய் இருங்கள்


சுற்றுலாப் பிரியர்களே உங்களுடன் தண்ணீர் நிறைய எடுத்துச் செல்லுங்கள். அல்லது நீங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும். முடிந்தவரை பெரிய பாட்டிலில் நீர் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் சுற்றுலாவை நீண்ட வரிசையில் வீணாக இழப்பதை தவிர்க்கலாம்.

ஆர்க்கிட் மலர்கள் பூத்துக்குலுங்கும் பிரதேசம் இதுவாகும். எனவே தயவு செய்து இங்கு பூக்களை பறிக்காதீர்கள். இது இந்த இடத்தின் அழகை கெடுத்துவிடும்.

Woodstockschool

 ஒருநாளில் என்னவெல்லாம் செய்யலாம்

ஒருநாளில் என்னவெல்லாம் செய்யலாம்

புத்த கோயில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இதை தலாய் லாமா நிறுவியுள்ளார். இந்த இடத்துக்கு சென்று வழிபடுங்கள். மனதில் அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

மகிழ்ச்சி பள்ளத்தாக்கின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம். உங்கள் நண்பர்கள் அல்லது மனம் விரும்பும் ஒருவருடன் இந்த இடங்களில் அலைவது என்பது மிக வித்தியாசமான அனுபவத்தை தரும்.

ஆர்க்கிட் உட்பட பல மலர்களை அருகிலிருந்து பாருங்கள். அவற்றின் அழகில் மெய் மறந்துவிடுவீர்கள்.

ஷாப்பிங் செல்லுங்கள். இங்குள்ள கடைகளில் அழகழகான பொருள்கள் முசூரியின் நினைவாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் குடும்பத்தால் மனம் விரும்பும் நபர்களுக்கு கொடுத்து மகிழுங்கள்.

திபெத்திய இந்திய கலாச்சார உணவுக் கலவைகளை சுவைத்துப் பாருங்கள். பரவசப்படுத்து சுவைகளை அனுபவியுங்கள்.

Articlelives

சுற்றுலா வழிகாட்டிகள்

சுற்றுலா வழிகாட்டிகள்

நம் தளமே சுற்றுலா வழிகாட்டி போலத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விமானங்கள், ரயில்கள், கார்கள் புக்கிங் செய்ய இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நம் தளத்தின் முகப்பு பக்கத்துக்கு சென்று மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். அதே நேரத்தில் இந்த இடத்தைப் பற்றி தெரிந்த நன்கு பயிற்சி பெற்ற நபர் ஒருவர் உங்களுடன் இருந்தால் சிறப்பு என கருதினால், இங்கு அரிதாக அவர்கள் கிடைப்பார்கள். அல்லது வல்லவனுக்கு வாய்ச்சதெல்லாம் ஆயுதம்னு நினச்சா, உங்க சுய திறமை நிச்சயமா உதவும்.

Harshanh

எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

ஒவ்வொரு சீசனிலும் முசூரி வித்தியாசமான காட்சிகளுடன் தோற்றமளிக்கிறது. ஒவ்வொரு முறை செல்லும்போதும் பல அரிய காட்சிகளையும், நினைவுகளையும் சுமந்து திரும்பலாம். அதே நேரத்தில் டிசம்பர் மாதம் இந்த இடத்துக்கு வந்தால் நிச்சயமாக உங்கள் வாழ்நாளில் இதுவரை கொண்டாடாத அளவுக்கு ஒரு செலிபிரேசனை காண்பீர்கள். மற்றபடி வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லலாம்.

Sabhay3

 அருகிலுள்ள இடங்கள்

அருகிலுள்ள இடங்கள்

கெம்ப்டி நீர்வீழ்ச்சி

ஷெடப் சோபெல்லிங் கோயில்

மோசி நீர்வீழ்ச்சி

சர் ஜார்ஜ் எவரெஸ்ட் ஹவுஸ்

லான்டர் மணிக்கூண்டு

முசூரி ஏரி

கிறிஸ்துவ தேவாலயம்

ஜவஹர் அருங்காட்சியகம்

பட்டா நீர்வீழ்ச்சி

மேலும் அருகில் தங்கவும், தூங்கவும், உணவு அருந்தவும் நிறைய விடுதிகள் உள்ளன.

CompanyGarden

Read more about: travel mussoorie பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X