Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் வலுவான கட்டிடம் இது தானாம் – வெடிகுண்டால் கூட அழிக்கமுடியாது!

சென்னையின் வலுவான கட்டிடம் இது தானாம் – வெடிகுண்டால் கூட அழிக்கமுடியாது!

இந்த நவீன உலகில் எல்லாமே சாத்தியம், ஆனால் 1600 களிலேயே சென்னையின் மிக அரிய படைப்பான "துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு துளைக்காத கட்டிடம்" கட்டப்பட்டுள்ளது. 1680 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி புனிதப்படுத்தப்பட்ட சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் கட்டப்பட்டிருக்கும் செயின்ட் மேரி தேவாலயம் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் சேதம் அடையாத வகையில் கட்டப்பட்டுள்ளது. இதுவே சென்னையில் இருக்கும் பிரிட்டிஷ் காலகட்டத்தின் மிகப் பழமையான மற்றும் மிக சக்தி வாய்ந்த கட்டிடம் என்று ASI தெரிவித்துள்ளது.

350 வருட பழமையான சக்திவாய்ந்த கட்டிடம்

17 ஆம் நூற்றாண்டிலேயே இப்படி ஒரு படைப்பா என்று நமக்கு வியப்பாக இருக்கிறது அல்லவா? ஆம், வங்காள மாகாணத்தின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஆன மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ் தான் இந்த செயின்ட் மேரி தேவாலயத்தைக் கட்டியிருக்கிறார். இந்த தேவாலயத்தில் தான் மார்கரெட் மாஸ்கெலினை ராபர்ட் கிளைவ் திருமணம் செய்து கொண்டாராம். இதனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கேக் காண்போம்!

bombproofchurchinchennai1

முக்கிய ஆவணங்கள் பத்திரப்படுத்தவே இந்த கட்டமைப்ப்பு

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு அடித்தளமிட்டதற்காக கிளைவ் சென்னையில் முக்கியமான பதிவுகள், கட்டுரைகள், பளிங்கு தகடுகள் மற்றும் பல பொக்கிஷங்களை சேமித்து வைக்க சென்னையில் இந்த தேவாலயத்தை எழுப்பியுள்ளார். ஞானஸ்நானம், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளின் பதிவுகள், மெட்ராஸ் ஐரோப்பிய படைப்பிரிவுகளின் வண்ணங்கள் மற்றும் பழைய வெள்ளிப் பொருட்கள் ஆகியவை இந்த தேவாலயத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு துளைக்காத வடிவமைப்பு

தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக சேமித்து வைப்பது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்த கிளைவ், தேவாலயத்தை வெடிகுண்டு, துப்பாக்கிகள் போன்றவை துளைக்காத வண்ணம் கட்ட வேண்டுமென்று தொலைநோக்குடன் இதனை கட்டியுள்ளார். உள்ளூர் ஆட்சியாளர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே இருந்த பகைமைகள் அந்த நாட்களில் பொதுவானவை. அதனால் எந்த ஒரு தீய வேலையும் இந்த கட்டிடத்தை சேதம் செய்துவிடக்கூடாது என்கிற காரணத்திற்காக இவ்வாறு கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

stgeorge church

தேவாலயத்தின் குண்டு புகாத கட்டிடக்கலை

1. இந்திய தொல்லியல் துறையின் (ASI) தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் தேவாலயத்தின் தனித்துவமான அம்சம் அதன் அடர்த்தியான கொத்து சுவர்கள் தான் என்று கூறினார்.

2. தேவாலயத்தின் கொத்து சுவர்கள் கிட்டத்தட்ட 4 அடி அகலம் கொண்டவை. அவை 2 அடி தடிமன் கொண்ட கூரை சுவர்களால் மூடப்பட்டுள்ளன.

3. இந்த வடிவமைப்பு தேவாலயத்தை குண்டுவீச்சுகளிலிருந்து காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.

4. கடல் மற்றும் நிலத்தில் இருந்து வரும் துப்பாக்கிச் சூட்டை தாங்கும் வகையில் கூரையின் வடிவமைப்பு உள்ளது.

5. செங்கல் மற்றும் கற்களால் ஆன வளைந்த மூன்று இடைகழிகளில் வெடிகுண்டு தடுப்பு கொண்ட வால்ட் கூரை அமைப்பில் உள்ளது.

6. தேவாலயத்தின் உட்புறத்தில் பிரிட்டிஷ் காலத்து பிரமுகர்களுக்கான நினைவு தகடுகள் உள்ளன.

7. பலிபீடத்தில் கடைசி இரவு உணவின் ஓவியம் மற்றும் கலைநயமிக்க மரவேலைப்பாடுகள் உள்ளன.

8. தேவாலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கல்லறைகள் முக்கியமானவை. 1894 இல் வழங்கப்பட்ட தேவாலயத்தின் உறுப்பு இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

9. இந்த தேவாலயத்தை கட்டிய ராபர்ட் கிளைவ் மார்கரெட் மாஸ்கெலினுடன் இங்கேயே தான் திருமணம் செய்து கொண்டாராம்.

பொதுமக்கள் செல்லலாமா?

சென்னை ராஜாஜி சாலையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே அமைந்து இருக்கும் இந்த பழமையான தேவாலயம் வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கிறது. எனவே நீங்கள் வாரத்தின் எந்த நாளிலும் இங்கு செல்லலாம். இந்த தேவாலயம் சென்னையின் மிக பிரதான சாலையில் அமைந்துள்ளதால் மாநகர பேருந்துகள், மெட்ரோ மற்றும் டாக்சிகள் மூலமாக எளிதில் அடையலாம்.

More News

    Read more about: chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+