Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் உள்ள இந்த விசித்திர கோயில் பற்றி தெரியுமா – முருகனின் ஆறு படைவீடுகளும் ஒரே இடத்தில்!

சென்னையில் உள்ள இந்த விசித்திர கோயில் பற்றி தெரியுமா – முருகனின் ஆறு படைவீடுகளும் ஒரே இடத்தில்!

ஆம்! நீங்கள் யோசிப்பது சரி தான். தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளும் சுவாமி மலை, பழநி, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர் என வெவ்வேறு இடங்களில் உள்ளன. ஆனால் இந்த ஆறு கர்ப்பகிரங்களில் உள்ள வெவ்வேறு முருகப்பெருமானை நீங்கள் சென்னையில் ஒரு அற்புதமான கோயிலில் ஒரே இடத்தில் வழிபடலாம். இந்த ஒரு கோயிலுக்கு சென்று வந்தாலே முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளுக்கும் சென்று வந்ததற்கான புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்! இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் எங்கே உள்ளது? எப்படி செல்வது என்று பார்ப்போம்!

மகத்துவம் வாய்ந்த முருகப்பெருமானின் ஆறு படைவீடு

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு எண்ணற்ற கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன, ஆனால் ஆறு கோயில்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன - முருகனின் அறுபடை வீடுகள். அவை;

1. மதுரைக்கு அருகிலுள்ள பழனி (தண்டாயுதபாணி) - கோபக் குழந்தையாக காட்சி தருகிறார்

2. சுவாமிமலை (சுவாமிநாதசுவாமி) - தந்தைக்கு உபதேசம் செய்கிறார்

3. திருச்செந்தூர் - (பால சுப்ரமண்ய சுவாமி மற்றும் செந்திலாண்டவர்) - சூரபத்மனை அழித்து திருச்செந்தூரில் சிவனை வழிபட்டார்

4. திருப்பதி மற்றும் சென்னைக்கு அருகிலுள்ள திருத்தணி (பால சுப்ரமணிய சுவாமி) - திருத்தணியில் சூரபத்மனை அழித்த பிறகு அமர்ந்திருந்தார்

5. மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றம் (சுப்ரமணியசுவாமி) - தெய்வயானையை மணந்தார்

6. மதுரை அருகே உள்ள அழகர் கோயிலுக்கு அருகிலுள்ள பழமுதிர்சோலை (சோலைமலை முருகன்) - வள்ளி & தெய்வயானையுடன் தம்பதியாக அருள் பாலிக்கிறார்.

இக்கோயில்களில் உள்ள தெய்வங்கள் முருகப்பெருமானின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை சித்தரிக்கின்றன.

சென்னையில் ஆறுபடை வீடு உருவான கதை

1984 ஆம் ஆண்டு காஞ்சி பரமாச்சார்யா முனிவர் கர்நாடக மாநில எல்லையில் உள்ள குல்பர்காவில் முகாமிட்டிருந்தபோது முன்னாள் ஐநா அதிகாரியான டாக்டர் அழகப்ப அழகப்பன் தரிசனம் செய்யச் சென்றார். அவர் ஆச்சாரியாரிடம், "முருகப்பெருமானின் ஆறு படைவீடு கோவில்களுக்கும் இடத்தில் ஒரு கோவில், அதுவும் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டால் எப்படி இருக்கும்"? என்று கேட்டார். உடனே மகா பெரியவர் நல்ல யோசனை தான் நான் உனக்கு சென்னையில் நிலத்தைப் பெற்று தருகிறேன் என கூறி அப்போது முதலமைச்சராக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆரிடம் பேசி பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகே ஒரு ஏக்கர் நிலத்தைப் பெற்று தந்தார்.

arupadaiveedumurugantemple1

ஒரே சன்னதியில் முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளும்

திரு.அழகப்பன் அவர்கள் இந்த இடத்தில் முழுவதும் கிரானைட்டை கொண்டு கோயிலை காட்டினார். காஞ்சி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அறிவுறுத்தலின் படி நடுவில் மஹாவல்லப கணபதி கோயிலும் அவரை சுற்றி அறுபடை முருகன் குடிகொண்டிருக்கும் திசைகளின் படி அறுபடை முருகனுக்கு தனி தனி சன்னதிகளில் கட்டப்பட்டன . இக்கோயிலானது 1995 முதல் 2002 வரை கட்டப்பட்டன. ஒரே சன்னதியில் ஆறு முருகர்களையும் பக்தர்கள் வழிபடும் வாய்ப்பை வழங்கும் ஒரே நோக்கத்துடன் இந்த கோயில் சென்னை பெசன்ட் நகரில் எழுப்பப்பட்டது.

பிரமாண்டமாக கொண்டாடப்படும் முருக பெருவிழாக்கள்

இக்கோயிலுக்குள் வடகிழக்கில் சுவாமிமலை கோயில், கிழக்கில் திருச்செந்தூர், தெற்கில் பழமுதிர்சோலை மற்றும் திருப்பரங்குன்றம், மேற்கில் பழனி மற்றும் வடமேற்கில் திருத்தணி ஆகியவை அமைந்துள்ளன. மஹாவல்லப கணபதி கோவில் நடுவில் உள்ளது. வழக்கமான பூஜைகள் மற்றும் தினசரி சடங்குகள் தவிர, தை பூசம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, ஸ்கந்த ஷஷ்டி சிறப்பு பூஜைகள் உள்ளன. காவடி, பால்குடம் போன்றவற்றுடன் பாரம்பரிய முறைப்படி இவ்விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

arupadaiveedumurugantemple

கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் செல்லும் வழி

இக்கோயிலானது காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை , மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை திறந்து இருக்கிறது. இந்த கோயில் சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ளது. பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிமீ தொலைவிலும், அஷ்டலக்ஷ்மி கோயிலில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவிலும் உள்ளது.

ஒரே இடத்தில் ஆறு படை வீடுகளையும் தரிசிக்க இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று பாருங்கள்!

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+