Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

இந்தியாவின் மார்பிள் சிட்டி என்று பிரபலமாக அறியப்படும் கிஷன்கர் அஜ்மீரின் புறநகரில் அமைந்துள்ள ஒரு அழகான நகரமாகும். ராஜஸ்தானின் மறைக்கப்பட்ட புதையல்களில் ஒன்றான கிஷன்கர் அஜ்மீரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த இடத்தின் பண்டையக்கால வசீகரம் அதன் வரலாற்று கோட்டைகள், பழமையான கோவில்கள் மற்றும் கிஷன்கர் ஓவியங்களில் அப்படியே உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

இந்திய அரசாங்கத்தால் தபால் தலைகளில் ஒன்றில் செதுக்கப்பட்ட பனி தானி எனப்படும் பண்டைய ஓவியக் கலைக்காக இந்த நகரம் பரவலாக அறியப்படுகிறது. என்பது இதன் கூடுதான் சிறப்பம்சம். கிஷன்கருக்கு எப்படி செல்வது? எப்போது செல்வது? அங்கே உள்ளே சுற்றுலாத் தலங்கள் என்னென்னன என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

கிஷன்கர் கோட்டை

கிஷன்கர் கோட்டை

1649 ஆம் ஆண்டு மகாராஜா ஸ்வரூப் சிங்கால் கட்டப்பட்ட கிஷன்கர் கோட்டை கிஷன்கரில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ராஜபுத்திரம் மற்றும் முகலாயக் கட்டிடக்கலை நுட்பத்தின் சரியான கலவையாகும். அழகாக செதுக்கப்பட்டுள்ள கோட்டையின் வசீகரிக்கும் உட்புறம் ரத்தோர் ஆட்சியாளர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலையில் அஜ்மீர் நகரத்திலிருந்து 27 கி.மீ தொலைவில் இந்த கோட்டை அமைந்துள்ளதால், இக்கோட்டை முக்கியமான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் கோட்டைக்குள் நுழைவது கண்டிப்பாக அனுமதி அடிப்படையில் மட்டுமே உள்ளது மற்றும் வெளியாட்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் பூல் மஹால் அரண்மனையில் தங்கியிருக்கும் விருந்தினர்கள் கோட்டையின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

மோகம் விலாஸ்

மோகம் விலாஸ்

ஜன்னத் என்றும் அழைக்கப்படும் மோகம் விலாஸ் கோண்டுலாவ் ஏரியின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மாவுக்கு விருந்தளிக்கும் இந்த இடம் பல புலம்பெயர் பறவைகளின் இருப்பிடமாகும். ஆதலால், இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலம். நகர்ப்புற குழப்பங்களிலிருந்து சற்று ஓய்வெடுக்க ஒரு அமைதியான இடத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், கிஷன்கரில் உள்ள இந்த சுற்றுலாத்தலத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

பூல் மஹால் அரண்மனை

பூல் மஹால் அரண்மனை

கிஷன்கரில் உள்ள சிறந்த பாரம்பரிய ஹோட்டல்களில் ஒன்றான பூல் மஹால் அரண்மனை குண்டலாவ் ஏரியின் ஓரத்தில் அமைந்துள்ளது. இது ராஜஸ்தானின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ராஜஸ்தானின் வளமான கட்டிடக்கலை, அழகு மற்றும் பாரம்பரியம் நிறைந்த தங்குமிடங்கள் உயர்தர வசதிகளுடன் இங்கு நிறுவப்பட்டுள்ளன. அந்த இடத்தைச் சூழ்ந்திருக்கும் மாயஜாலமான அமைதி, பறவைகளின் சத்தம், அழகிய ஏரி ஆகியவை ஒன்று சேர்ந்து, இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த இடம் ஒரு பேரின்பமாக காட்சியளிக்கிறது.

கோடா கணேஷ் கோயில்

கோடா கணேஷ் கோயில்

250 ஆண்டுகளுக்கு முன்பு கிஷன்கர் அரச குடும்பத்தால் கட்டப்பட்ட இக்கோவில், கிஷன்கரில் பார்க்க வேண்டிய மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கிஷன்கர் உள்ளூர் மக்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படும் இந்த கோவிலுக்கு, விநாயகப் பெருமானின் ஆசிர்வாதத்தைப் பெற புதுமணத் தம்பதிகள் வருகை தருகின்றனர். புதன்கிழமை விநாயகப் பெருமானின் நாளாகக் கருதப்படுவதால், இந்த குறிப்பிட்ட நாளில் நகரத்திலிருந்து உள்ளூர் கூட்டத்தால் கோயில் நிரம்பி வழிகிறது.

கோண்டுலாவ் ஏரி

கோண்டுலாவ் ஏரி

புரானா ஷெஹர் என்று அழைக்கப்படும் பழைய நகரத்திற்கும் புதிய நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ள கோண்டுலாவ் ஏரி, படகு சவாரி மற்றும் மீன் உணவுகளை அனுபவிப்பவர்களின் முக்கிய ஈர்ப்பாகும். கிஷன்கரில் நீங்கள் பார்க்க வேண்டிய நல்ல இடங்களில் ஒன்றைத் தேடுகிறீர்களானால், கோண்டுலாவ் ஏரியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏரியில் படகு சவாரி செய்வதோடு சில அற்புதமான புகைப்படங்களையும் நீங்கள் எடுத்து மகிழலாம்.

Ajmer Sharif Dargah

Ajmer Sharif Dargah

முகலாய பேரரசர் ஹுமாயூனால் கட்டப்பட்ட புனித கோவிலான அஜ்மீர் ஷெரீப் தர்கா கிஷன்கருக்கு அருகில் பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இது மதிப்பிற்குரிய பாரசீக சூஃபி துறவியான குவாஜா மொய்னுதீன் சிஸ்டியின் சூஃபி ஆலயமாகும். தர்காவிற்குள் நுழைய எண்ணற்ற வாயில்கள் உள்ளன, அவை அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவை. மாலை நேரத்தில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் அந்தக் கோவிலின் வேலைப்பாடுகளும் வடிவமைப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

FAQ's
  • கிஷன்கரை எப்படி அடைவது?

    ராஜஸ்தானில் உள்ள இந்த அழகிய சிறு நகரம் அதன் இயற்கை, வசீகரம், பண்டைக்கால வரலாறு, ஓவியம் மற்றும் கலாச்சாரத்திற்கு பெயர் போனது. கிஷன்கர் நெடுஞ்சாலைகள், ரயில்கள் மற்றும் விமானங்களின் நெட்வொர்க் மூலம் மற்ற இந்திய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது டெல்லியிலிருந்து 35௦ கிமீ தூரத்திலும், ஜோத்பூரில் இருந்து 2௦௦ கிமீ தூரத்திலும், ஜெய்ப்பூரில் இருந்து 9௦ கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. நீங்கள் நீண்ட கார் பயணமாகவோ அல்லது விமானம் மற்றும் ரயில் மூலமாகவோ கிஷன்கரை அடையலாம்.

Read more about: kishangarh ajmer rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X