» »நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத தென்னிந்தியாவின் அற்புதமான மலைப்பிரதேசங்கள் போலாமா

நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத தென்னிந்தியாவின் அற்புதமான மலைப்பிரதேசங்கள் போலாமா

Posted By: Udhaya

கோடைவிடுமுறைக்கு யாருக்கும் தெரியாத இந்த இடங்களுக்கு போய் வாங்களேன்!

இந்தியா இந்த கோடையில் வெய்யிலும் வேட்கையுமாக அனல் தகித்து கொதித்துக் கொண்டிருக்கிறது. இதை தவிர்க்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு குறிப்பாக வட இந்தியாவுக்கு செல்கின்றனர். கோடை விடுமுறையை இன்பச் சுற்றுலாவாக கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், பட்ஜெட் போட்டு வாழும் நாங்கள் எப்படி போவது என்கிறீர்கள் சரிதானே.

இருக்கும் ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை முறைதான் செல்வது. வாருங்கள் நீங்கள் இதுவரை கேள்விபடாத ஒரு சிலஇடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

நெல்லியம்பதி, பாலக்காடு, கேரளம்

நெல்லியம்பதி, பாலக்காடு, கேரளம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே அமைந்துள்ளது நெல்லியம்பதி மலைப் பகுதி. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த பகுதி கோடை சுற்றுலாவுக்கு மிக உகந்த பகுதியாகும்.

5000 அடி உயரமுள்ள இந்த மலைப்பகுதியில் பொதுன்டி அணை மற்றும் பல்வேறு கண்குளிரும் காட்சிகள் காணலாம்.

Kjrajesh

என்னவெல்லாம் செய்யலாம்

என்னவெல்லாம் செய்யலாம்

பொதுன்டி அணைக்கட்டு பகுதியில் படகு சவாரி செய்யலாம். தேயிலை தோட்டத்தைப் பார்வையிடலாம். பாலக்காடு அருகேயுள்ள ஆரஞ்சு தோட்டங்களுக்கு சென்று வரலாம். நெல்லியம்பதியிலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள சீதர்குண்டு எனும் அழகிய மலைக்கு டிரெக்கிங் செல்லலாம். அங்குள்ள 100 அடி உயர நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


நெல்லியம்பதி, கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இதற்கு அருகேயுள்ள ரயில் நிலையம் பாலக்காடு (56கிமீ) ரயில் நிலையம்.

சாலை மார்க்கமாக வந்தால், நென்மராவிலிருந்து பொதுன்டி நோக்கி வரவேண்டும்.

லக்கிடி, வயநாடு, கேரளம்

லக்கிடி, வயநாடு, கேரளம்


வயநாட்டின் நுழைவுவாயில் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் லக்கிடி மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்துக்கே உரித்தான மலைகளும், நீர் நிலைகளும் நிறைந்து காணப்படுகிறது.

Ashwin Kumar

என்னலாம் செய்யலாம்

என்னலாம் செய்யலாம்

லக்கிடியிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள பூக்கோட் ஏரியை கண்டு மகிழலாம். இந்த ஏரி கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரந்துள்ளது.

இந்த இடம் வயநாடு வனத்துறைக்குட்பட்டது. இங்கு நீங்கள் அரிய வகை விலங்குகளைக் காணலாம்.

எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?

கோழிக்கோடு பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது இந்த இடம்.

அருகில் உள்ள ரயில் நிலையம் கோழிக்கோடு ரயில் நிலையம் (40கிமீ)

சொந்த வாகனத்தில் செல்வதாக இருந்தால் தமரசேரியிலிருந்து லக்கிடி நோக்கி தேசிய நெடுஞ்சாலை எண் 212ல் செல்லவேண்டும்.

லம்பாசிங்கி, விசாகப்பட்டணம், ஆந்திரப்பிரதேசம்

லம்பாசிங்கி, விசாகப்பட்டணம், ஆந்திரப்பிரதேசம்

இது விசாகப்பட்டணத்தில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். இது செல்லமாக ஆந்திரத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலங்களில் இங்கு வெப்பநிலை சுழியம் (0 டிகிரி) செல்சியஸாக இருக்கும்.

IM3847

என்னவெல்லாம் செய்யலாம்

என்னவெல்லாம் செய்யலாம்

இந்த கிராமம் எப்போதுமே அதிக வெப்பம் அடையாதாம். கோடையில் கூட ஜிலு ஜிலுவென்று இருக்கும். இங்கு பல்வேறு வகையான அரிய செடிகள், மலர்கள் காணப்படுகின்றன.

ஆந்திரத்தின் மிக குளுமையான பகுதி இதுவாகும். இங்கு விளையும் காஃபி உலகம் முழுவதும் பிரபலம். இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. 27கிமீ தொலைவில் கொத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி இருக்கிறது.

vijay chennupati

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


இதன் அருகிலுள்ள விமான நிலையம் விசாகப்பட்டினம் 107கிமீ தொலைவில் உள்ளது.

ரயில் நிலையம் சின்டப்பள்ளி 19கிமீ. அல்லது தேசிய நெடுஞ்சாலை எண் 5 ல் பயணிக்கவேண்டும்.

வாகாமன், திருவாங்கூர், கேரளம்

வாகாமன், திருவாங்கூர், கேரளம்

கோட்டயம் - இடுக்கி எல்லையில் அமைந்துள்ளது வாகாமன் என்னும் சிற்றூர்.

பசுமையான மரங்கள் நிறைந்த குன்றுகள், பாரகிளைடிங் செய்ய ஏற்ற இடங்கள் இவை.

இங்கு நடைபெறும் பாராகிளைடிங் திருவிழாவுக்கு உலகம் முழுவதிலுமிருந்தும் வீரர்கள் வருகின்றனர்.

Visakh wiki

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


விமான நிலையம் கொச்சின் பன்னாட்டு விமான நிலையம் 75 கிமீ

ரயில் நிலையம் கோட்டயம் 64 கிமீ

சாலை வழியாக கொச்சியிலிருந்து மாநில நெடுஞ்சாலை 14ல் வாகமன் நோக்கி பயணிக்கவேண்டும்.

Anand2202

அரக்கு, விசாகப்பட்டணம், ஆந்திரப் பிரதேசம்

அரக்கு, விசாகப்பட்டணம், ஆந்திரப் பிரதேசம்

காலிகொண்டா மற்றும் சிட்டமோகொண்டி மலைகளுக்கு நடுவே உள்ளது அரக்கு பள்ளத்தாக்கு. இது மிகச்சிறந்த கோடை வாழிடமாகும்.

இங்கு காஃபி பயிரிடப்படுகிறது. இங்கிருந்து 30 கிமீ தொலைவில் சாப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அதனருகில் ஆனந்தகிரி நீர்வீழ்ச்சியும் உள்ளது.

Adityamadhav83

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

விமான நிலையம் விசாகப்பட்டணம் 109கிமீ

ரயில் நிலையம் அரக்கு 3கிமீ

சாலை விசாகப்பட்டணம் - அரக்கு சாலையில் பயணிக்கவேண்டும்.

Imahesh3847

 கோத்தகிரி, நீலகிரி, தமிழ்நாடு

கோத்தகிரி, நீலகிரி, தமிழ்நாடு

தமிழகத்தின் மிக சிறந்த கோடை வாழிடமான ஊட்டிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த கோத்தகிரி.

கேத்தரின் நீர்வீழ்ச்சி, தொட்டபெட்டா சிகரம், ரங்கசாமி தூண் போன்ற எண்ணற்ற இடங்கள் பார்க்கவேண்டியவை.

Hari Prasad Sridhar

எப்படி செல்வது

எப்படி செல்வது

விமான நிலையம் கோயம்புத்தூர் 76 கிமீ

ரயில் நிலையம் கோயம்புத்தூர் 21 கிமீ

மைசூரு - ஊட்டி சாலையில் பயணித்தால் 4 மணி நேரத்தில் கோத்தகிரியை அடையலாம். அல்லது கோயம்புத்தூரிலிருந்தும் வரலாம்.

Shareef Taliparamba

 பொன்முடி, திருவனந்தபுரம், கேரளம்

பொன்முடி, திருவனந்தபுரம், கேரளம்

அமைதியான மலைப் பிரதேசம், சாரல் காற்று என்று இயற்கை எழில் கொஞ்சும் இந்த பிரதேசம் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ளது.

இந்த மலை மீது 22 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சாலை சாகச பயணத்துக்கு மிகச்சிறந்த இடம் இதுவாகும்.

Balachand

எப்படி செல்வது

எப்படி செல்வது

விமான நிலையம் திருவனந்தபுரம் விமான நிலையம் 60கிமீ

ரயில் நிலையம் திருவனந்தபுரம் 57 கிமீ

திருவனந்தபுரம் - பொன்முடி சாலைமார்க்கமாக 2 மணிநேரத்தில் அடையலாம்

Riju K

கெம்மனகுன்டி, சிக்கமகளூர், கர்நாடகம்

கெம்மனகுன்டி, சிக்கமகளூர், கர்நாடகம்

கிருஷ்ணராஜ மன்னர் செல்வ செழிப்பாக கோடைக்காலத்தில் வாழ இந்த இடத்தை தேர்வு செய்திருந்தார். அதுதான் கெம்மனகுடி.

கர்நாடகத்தின் இரண்டாவது உயரமான சிகரம் இதுவாகும். களத்தி மற்றும் காளகஸ்தி நீர்வீழ்ச்சிகள் இதன் அருகே உள்ளன.

எப்படி செல்வது

எப்படி செல்வது

மங்களூரு விமான நிலையம் 150 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

தரிக்கரே ரயில் நிலையம் 35கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பெங்களூர் - சிமோகா சாலையில் 6 மணி நேரப் பயணத்தில் கெம்மனகுடியை அடையலாம்.

Read more about: travel, trek