Search
  • Follow NativePlanet
Share
» »கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!

கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!

பெரும்பாலான இந்திய மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்துகளில் முதன்மையான ஒன்றான ரயில் போக்குவரத்தை மேம்படுத்த இந்திய ரயில்வே கேட்டரிங் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அவ்வப்போது பல வசதிகளை செய்து வருகிறது. அதிகப்படியாக ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தெரியும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை (Confirmed ticket) பெறுவது எவ்வளவு கடினமாக காரியம் என்று. ஆனால் ஏதோ ஒரு அவசர காரணத்தினால் புக் செய்த தினத்தில் ரயிலில் பயணிக்க முடியாமல் போனால் என்ன ஆவது? நம் நேரம், பணம் அனைத்தும் வீணாகி விடும் அல்லவா. ஆனால் கவலை வேண்டாம்! நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயண தேதியை மாற்றி வேறு தேதியில் பயணிக்கலாம். அதற்கு IRCTC வழிவகை செய்துள்ளது. எப்படி என்று கீழே பார்ப்போம்!

IRCTC, Indian railways

IRCTC இன் பல்வேறு வசதிகள்

இந்திய ரயில்வே அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒரு ஸ்டேஷன் கவுண்டரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டின் பயணத்தின் தேதியை முன்கூட்டியே ஒத்திவைக்கும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது. உறுதிசெய்யப்பட்ட/ஆர்ஏசி (ரத்துசெய்யப்படுவதற்கு எதிரான முன்பதிவு)/காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளின் பயணத் தேதியை, அதே/உயர் வகுப்பில் அல்லது அதே இலக்குக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி முன்பதிவு செய்யலாம் அல்லது ஒத்திவைக்கலாம்.

IRCTC, Indian railways

ஆஃப்லைன் டிக்கெட் தேதியை எப்படி மாற்றுவது?

நீங்கள் ஆஃப்லைன் டிக்கெட்டை (இந்திய இரயில்வே) முன்பதிவு செய்திருந்தால், புறப்படுவதற்கு குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன்பு நீங்கள் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வேலை நேரத்தில் முன்பதிவு கவுன்டருக்குச் சென்று கட்டணத்தைச் செலுத்திய பின்னரே டிக்கெட்டை மாற்றி அமைக்கவும். டிக்கெட்டை அவர்களிடம் ஒப்படைத்த பின்னர், விருப்பட்ட தேதியில் இயங்கும் ரயிலில் பயணிக்க புது டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

IRCTC, Indian railways

ஆன்லைன் டிக்கெட்டு தேதியை எப்படி மாற்றுவது?

இந்த வசதி ஆஃப்லைன் முன்பதிவுகளுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன்பதிவு அலுவலகத்தில் இருக்க வேண்டும். டிக்கெட்டுகளை மாற்றியமைக்க நீங்கள் புறப்படும் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், இந்த வசதி சிறப்பு டிக்கெட்டுகளில் இல்லை.

டிக்கெட்டுகளை மாற்றியமைக்க அனுமதிப்பது பல காரணங்களுக்காக, குறிப்பாக கொரோனா காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

IRCTC, Indian railways

உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை எப்படி மாற்றுவது?

இது தவிர, இந்திய ரயில்வேயின் பயணிகளுக்கு இன்னும் சில வசதிகள் உள்ளன. தாய், தந்தை, சகோதரி, சகோதரர், மனைவி, மகன் அல்லது மகள் உள்ளிட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பயணிகள் டிக்கெட்டுகளை மாற்றலாம். இருப்பினும், நீங்கள் குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்பே கோரிக்கையை விடுவிப்பதை உறுதிசெய்ய வேண்டும் மற்றும் இந்த வசதி சிறப்பு டிக்கெட்டுகளில் இல்லை.

IRCTC, Indian railways

போர்டிங் பாயிண்டை மாற்றி அமைப்பது எப்படி?

அசல் போர்டிங் நிலையத்தின் நிலைய மேலாளருக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிப்பதன் மூலமோ அல்லது எந்தவொரு கணினி முன்பதிவு மையத்தைத் தொடர்புகொள்வதன் மூலமோ, ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன், ஆஃப்லைன் டிக்கெட்டுகளுக்காக பயணிகள் பயணத்தின் போர்டிங் நிலையத்தை மாற்றலாம். இருப்பினும், பயணத்தின் பயன்படுத்தப்படாத பகுதிக்கு பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கும் இந்த வசதி உள்ளது.

அதோடு இந்த பயண தேதியை மாற்றியமைக்கும் வசதியை நீங்கள் ஒரு டிக்கெட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஏற்கநேவ் ஒரு முறை நீங்கள் தேதியை மாற்றி இருந்தால், மறுபடியும் இரண்டாவது முறை தேதியை மாற்ற முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பயணிகளே!

Read more about: irctc indian railways
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X