» »முற்றிலும் எலும்புகள்; ஆந்திராவை அலறவிட்ட ஆதிமனிதனின் குகை மர்மங்கள்

முற்றிலும் எலும்புகள்; ஆந்திராவை அலறவிட்ட ஆதிமனிதனின் குகை மர்மங்கள்

Posted By: Udhaya

கம்மம் பூபாளபள்ளி அதிஅற்புதமான காடுகளின் கட்டமைப்பு. அருகில் மயான அமைதி பின்தொடர்ந்து சென்றால் திடீரென எழும் சலசலப்பு.

அழகிய இதமான காற்று நம்மை மெய்மறக்க செய்யும். அடடே இது சுற்றுலாத்தளமா என்றால், ஆம்.. ஆனால் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன்..

ஆராய்ச்சியாளர்களே குழம்பிப் போன மர்மங்கள் பல நிறைந்த சுற்றுலாத் தளம்.

மர்மமான தொட்டி

மர்மமான தொட்டி


காட்டுக்குள் ஒரு இடத்தில் பயன்படுத்தி நீண்ட நாட்களான தொட்டி ஒன்று உள்ளது. அது பாறையில் செதுக்கப்பட்ட தொட்டியாகும்.

பெரிய குகை

பெரிய குகை

இந்த தொட்டி, 10 அடி, 15 முதல் 20 அடி அகலம், ஒரு அடி பருமன் கொண்ட ஒரு குகையில் உள்ளது. இதைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவரும் உள்ளது.

விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள்

சான் டியாகோ, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் இங்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். இதை பற்றிய ஒரு தெளிவில்லாமல் இதை கைவிட்டுவிட்டனர். ஆனால் அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் பூதாகரமான ஒரு செய்தி கிளம்பியது.

திடுக்கிடும் உண்மைகள்

திடுக்கிடும் உண்மைகள்

அந்த நதிக்கரையில் தனி ஒரு நபரின் தடையங்கள் பல காணப்படுகின்றன என்றும், அவர் சாதாரணமான மனிதராக இருக்கமுடியாது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த தொட்டியில் எலும்புகளை ஆராய்ச்சி செய்யவும் முடிவு செய்தனர்.

ஆய்வு செய்யவில்லை

ஆய்வு செய்யவில்லை


ஆனால் மத்திய மாநில அரசுகள் அப்போது இதை ஆய்வு செய்யவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கம்மம் வட்டத்தில்

கம்மம் வட்டத்தில்


இந்த கம்மம் சுற்றுவட்டாரத்தில், தட்வாயி, தமரவாயி, ஜனம்பேட்டை, டாங்கலட்டோவ், காகனபள்ளி கலபா முதலிய இடங்கள் உள்ளன.

மர்மம் என்ன தெரியுமா?

மர்மம் என்ன தெரியுமா?

இதுவரை நாம் பேசி வந்த மர்மம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எலும்புகள். நம் முன்னோர்களின் எலும்புகள் அந்த தொட்டியில் கிடைத்துள்ளன.

இடம்பெயர்வு

இடம்பெயர்வு

மனித இனம் நாடோடியாக வாழ்ந்த போது இருந்த அடையாளங்களும், இந்த எலும்புகளும் சில ஒத்துப் போயிருந்ததாம். அப்படியானால்

மூதாதையர்களா?

மூதாதையர்களா?


நம் மனித இனத்தின் மூதாதையர்கள் என்று கூறப்படும் குரங்கின் அடுத்தநிலை உயிரினங்கள் இங்கு காணப்படுகிறதா?

ஒருவழியாக ஆய்வுக்கு வந்தது ஐதராபாத் மத்திய பல்கலை

ஒருவழியாக ஆய்வுக்கு வந்தது ஐதராபாத் மத்திய பல்கலை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள மத்திய பல்கலைகழகம் கம்மம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் டிஎன்ஏ ஆய்வை மேற்கொண்டது. பேராசிரியர் கேபிரவு என்பவர் இதற்கு தலைமை தாங்கினார்.

கண்டுபிடிக்கப்பட்ட உண்மை

கண்டுபிடிக்கப்பட்ட உண்மை


இதன் மூலம் ஒருவழியாக அந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது அந்த எலும்புகள் இந்த பகுதியில் வாழ்ந்த மிகமிக பழமையான நம் மூதாதையர்களின் எலும்புகள்தான் எனத் தெரியவந்தது.

எல்லா கல்லறைகளும் திறக்கப்படுகின்றன

எல்லா கல்லறைகளும் திறக்கப்படுகின்றன

ஏதோ ஆய்வுக்காக ஒருசில கல்லறைகள் மட்டும் திறக்கப்படவில்லை அனைத்து கல்லறைகளையும் திறந்து அதிலுள்ள எலும்புகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

உலகிலேயே இங்கு மட்டும்தான்

உலகிலேயே இங்கு மட்டும்தான்


இந்தமாதிரியான எச்சங்கள் இந்தியா அல்ல உலகிலேயே இங்கு மட்டும்தான் இருக்கின்றன.

எக்ஸ்பெரிமன்ட்

எக்ஸ்பெரிமன்ட்

இந்த சோதனையில் தெரியவந்தது.. இது வெறும் மூதாதையர்கள் மட்டுமல்ல. இதன் பின்னர் பல பல மர்மங்கள் அடங்கியுள்ளன என்று.

அப்பாவி கிராமத்தினர்

அப்பாவி கிராமத்தினர்


இவர்களின் கல்லறைகள் என்று அறியாத மக்கள் இதன் கற்களை எடுத்து சென்று தொட்டியாக பயன்படுத்தியுள்ளனர்.

இது முடிவல்ல ஆரம்பம்

இது முடிவல்ல ஆரம்பம்

இங்கு நாம் பார்க்கும் இந்த குழி வெறும் குழி மட்டுமல்ல இதன் உள்ளே செல்ல செல்ல பல்வேறு மர்மங்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அடடே என்று வாயை பிளக்கவைக்கும் ஒரு உண்மை உங்களுக்கு தெரியுமா

ஆதிகால மனிதன்

ஆதிகால மனிதன்

ஆதிகால மனிதன் வாழ்ந்த இடம்தான் இது... என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம்.. ஆதிகாலத்தில் மனிதன் நாடோடியாக இருந்து சமைக்க கற்றுக்கொண்டு ஒரு இடத்தில் தங்கி வாழ்ந்துள்ளான்.. கோதாவரி நதிக்கரைதான் அது... அங்குதான் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆதிமனிதன் கல்லறை கட்டினானா?

ஆதிமனிதன் கல்லறை கட்டினானா?

ஆதி மனிதன் மொழி உருவாவதற்கு முன் சைகை மொழியில் பேசியிருப்பான் என்பது அறிஞர்களின் கருத்து. அப்படி பட்ட அக்காலத்திய மனிதர்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது மிகவும் முக்கியமான ஒரு ஆய்வு.

எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

ஹைதராபாத்திலிருந்து 4 மணி நேரத்தில் சென்றடையலாம்.

சுற்றுலாத்தளங்கள்

சுற்றுலாத்தளங்கள்

அருகிலுள்ள ராஜமுந்திரியில் சித்ராங்கி பவன், கொணசீமா, கோடிலிங்கேஸ்வரா கோயில், பால் சௌக், மரேடிமல்லி சூழல் சுற்றுலா, புஷ்கர்காட் என பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன.

ஹைதராபாத்தில் ஆனந்த புத்த விகாரம், ஆஸ்மன் கர், பிர்லா மந்திர், சார்மினார், பலக்னமா கோட்டை, சில்கூர் பாலாஜி கோயில் என பல இடங்கள் உள்ளன.

Read more about: travel mystery