Search
  • Follow NativePlanet
Share
» »20 நாட்களில் இலவசமாக சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாம் - இந்தியாவின் சமஸ்கிருத கிராமம்!

20 நாட்களில் இலவசமாக சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாம் - இந்தியாவின் சமஸ்கிருத கிராமம்!

இந்தியாவின் பிராந்திய மொழிகள் பல உயிர்வாழ்வதற்காகப் போராடும் இந்த நேரத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு சமூகம் இன்னும் சமஸ்கிருதம் பேசும் தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. துங்கா நதிக்கரையில் வளமான கலாச்சார பாரம்பரியம் கொண்ட கர்நாடக கிராமமான மேட்டூர் இன்று "சமஸ்கிருத கிராமம்" என்று அறியப்படுகிறது. இந்த கிராமத்திற்கு வரும் அனைவர்க்கும் இலவசமாக சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது!

அழிந்து வரும் இந்திய பிராந்திய மொழிகள்

தாய் மொழியில் வெளிப்படையாக பேசுவது என்பது கூட இந்த காலத்தில் சிலரால் அறியாமை என்று பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தின் மீது கொண்ட மோகத்தால், பலரும் நம் பிராந்திய மொழிகளை எழுத படிக்க கூட தெரியாமல் இருக்கின்றனர். இந்தியாவின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திற்கும் இதே நிலை தான்.

mattur culture

சமஸ்கிருதத்தை காக்கும் மேட்டூர் கிராமம்

கர்நாடகவின் ஷிமோகா கிராமத்தில் அமைந்துள்ள மேட்டூர் எனும் கிராமம் முழுவதும் சமஸ்கிருதம் பேசுவது கட்டாயமாக உள்ளது. பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்ட மொழி பலகைகளில் இருந்து, தினசரி தொடர்பு ஊடகம் வரை, சமஸ்கிருத வார்த்தைகள் காற்றில் ஊடுருவுகின்றன. அழிந்து வரும் மொழியை தலைமுறை தலைமுறையாகக் காக்கக் கொண்டாடும் இந்தியாவின் அரிதான இடங்களில் இதுவும் ஒன்று.

40 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய முயற்சி

கர்நாடகாவின் மலைப்பாங்கான ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் கிராமம், தினசரி தகவல் தொடர்புக்கு சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் அரிதான இடங்களில் ஒன்றாகும். இதற்குக் காரணம், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்கான ஒரு அமைப்பு, சமஸ்கிருத பாரதி இங்கு 10 நாள் பயிலரங்கை நடத்தியது.

அனைவரும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டும்

அதில் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன், தொன்மையான மொழியைப் பாதுகாத்து சமஸ்கிருத கிராமமாக மாற்றும் எண்ணத்தால் உடனடியாக உந்தப்பட்டது. அப்போதிருந்து, 10 வயது நிறைவடைந்த குழந்தைகள், வேதங்களைக் கற்று, சமஸ்கிருதத்தில் கடுமையான பயிற்சி பெறுகிறார்கள்.

ஜாதி, மத பேதமின்றி சமஸ்கிருதம் கற்கும் மக்கள்

இங்கு காய்கறி வியாபாரிகள் கூட சமஸ்கிருதம் பேசுகிறார்கள். இந்த கிராமத்தில் பூஜைக்கு மட்டுமின்றி அன்றாட தகவல் தொடர்புக்கும் சமஸ்கிருதம் பயன்படுத்தப்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கல்வியறிவு அல்லது படிப்பறிவு இல்லாத அனைவரும் சமஸ்கிருதம் பேசுகிறார்கள். முஸ்லீம் குடும்பங்கள் கூட சமஸ்கிருதத்தை தயக்கமின்றி, இந்துக்கள் பேசுவது போல் வசதியாக சமஸ்கிருதம் பேசுகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

mattur dam

இந்தியாவின் சமஸ்கிருத கிராமம் - மேட்டூர்

பண்டைய நூல்களும், வேதங்களும், இதிகாசங்களும் சமஸ்கிருதத்தில் தான் எழுதப்பட்டுள்ளன. இன்றைய நாளில் சமஸ்கிருதம் அறிந்த நபர்களைப் பார்ப்பது மிகவும் அரிதாக உள்ளது. ஆனால் மேட்டூர் கிராமம் அழிவின் விளிம்பில் இருந்த சமஸ்கிருத மொழியை காப்பாற்றி வந்துள்ளது என்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும்.

பண்டைய வாழ்க்கை முறையை பின்பற்றும் கிராம மக்கள்

இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இங்குள்ள குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் வேட்டி துண்டு அணிந்து எளிமையாகவே இருக்கின்றனர். அனைவரும் காலையில் எழுவது, குளிப்பது, பூஜை செய்வது, சமஸ்கிருதம் கற்றுக் கொள்வது என குருகுல கல்வி முறையைப் பின்பற்றுகின்றனர்.

mattur village

இலவச சமஸ்கிருத பயிற்சி

சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இந்த கிராமத்திற்கு வருகை தரும் அனைவர்க்கும் இலவசமாக இங்கு சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. மேட்டூர் கிராமத்தின் சமஸ்கிருத குருமார்கள் வெறும் இருபதே நாட்களில் சரளமாக நம்மை சமஸ்கிருதம் பேச வைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்

சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள ஆசையாக இருந்தால் நீங்கள் எந்த நேரத்திலும் இந்த கிராமத்திற்கு வருகை தரலாம். ஆனால் இங்கு ஹோட்டல்கள், காட்டேஜ்கள் போன்ற வசதி எதுவும் கிடையாது. இந்த ஊர் மக்களின் வீடுகளில் தங்கி தான் கற்றுக் கொள்ள வேண்டும். பண்டைய காலத்தில் வீட்டுக்கு வருபவரை உபசரித்து வேண்டியவற்றை செய்து கொடுப்பது ஒரு புண்ணியமாக கருதப்பட்டது, அதை இந்நாளிலும் இந்த ஊர் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

இந்த அசாதாரண கிராமத்திற்கு சென்று இந்தியாவின் தொன்மையான மொழியைக் கற்றுக் கொள்ள உங்களுக்கும் ஆசை இருக்கிறதா?

More News

    Read more about: travel india karnataka
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+