» »இந்தியாவின் மிகச்சிறந்த மசூதிகள்

இந்தியாவின் மிகச்சிறந்த மசூதிகள்

Written By: Staff

ரமலான் மாதம்: இஸ்லாமியர்கள், நாள் முழுக்க நோன்பு விரதத்திலும், தொழுகையிலும், இன்னும் பிற நற்காரியங்களிலும் ஈடுபடும் மாதம்.

மசூதிகளில், மாலை நேரங்களில், தராவீ ஹ் பிரார்த்தனைகள் நடைபெறும். முழு நாளும், மதகாரியங்களிலும், இஸ்லாமிய குறிப்புகளை வாசிப்பதுமாக கழியும்.

இச்சமயத்தில், ரமலான் மாதத்தில் செல்ல வேண்டிய‌, இந்தியாவின் தலைசிறந்த ஐந்து மசூதிகளைப் பார்க்கலாம்.

Jama_Masjid

Photo CourtesyShashwat_Nagpal

1. ஜம்மா மசூதி, டெல்லி

டெல்லியில் உள்ள ஜம்மா மசூதி, இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று. செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் இம்மசூதி, ஷாஜகானின் கடைசி படைப்புகளில் ஒன்றானதாக நம்பப்படுகிறது. மஸ்ஜித்-ஐ-ஜகான்-நுமா என்று அழைக்க‌ப்படும் இம்மசூதி, 5000 தொழிலாளிகளைக் கொண்டு, சிவப்பு மணற்கற்களாலும், மார்பிள்களாலும், கட்டப்பட்டது.

மசூதியின் முற்றத்தில், ஒரே சமயத்தில், 25000 பேர் தொழுகை செய்யலாம்.

மசூதிக்கு, மூன்று நுழைவாயில்களும், இரண்டு தூபிகளும், நான்கு கோபுரங்களும் உள்ளன. ஐந்தடுக்கு கொண்ட தூபிகளில், நுண்ணிய வேலைப்பாடு செதுக்கல்களும், Calligraphy என்று சொல்லப்படுகின்ற கையெழுத்துக் கலையும் கொண்டது. மசூதியின் தரை, பிரார்த்தனை விரிப்பை போன்ற‌ கருப்பு வெள்ளை மார்பிள்களால் வடிவமைக்கபட்டிருக்கின்றன.

2. தர்கா ஷரீஃப், அஜ்மீர்

இது ஒரு சூஃபி ஸ்தலம். சூஃபி துறவியான மொய்னுதீன் சிஷ்டியின் ஸ்தலம். இந்தியாவில் பக்தர்களை அதிகம் ஈர்க்கும் மசூதிகளில் இதுவும் ஒன்று. எவரேனும் தூய நம்பிக்கையோடு இந்த தர்காவிற்கு சென்று பிரார்த்தனை செய்தால், அவர்களின் ஆன்மா விடுதலை பெறும் என்று நம்பப்படுகிறது.அக்கால மொகலாய கட்டுமானத்தை ஒத்த கட்டுமானம் என்று இத்தர்காவில் தெளிவாகத் தெரிகிறது.

பல லட்ச பக்தர்கள், சூஃபி துறவியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அவரின் ஆசியைப் பெருவதற்கும், இம்மசூதிக்கு வருகின்றனர். ஜெய்ப்பூரிலிருந்து மூன்று மணி நேரப்பயணம் இம்மசூதி.

Bara_Imambara

Photo CourtesySharad.iiita


3. பாரா இமாம்பாரா, லக்னோ

இஸ்லாமிய வழிப்பாட்டு ஸ்தலங்களில் ஒன்றான இது, ரமலான் மற்றும் முகரம் சமயங்களில் அதிகம் பேர் வருகின்றனர். இந்த நினைவுச்சின்னம், நிவாரண திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. அக்கால, ஆவாத் பேரரசர், நவாப் அசாஃப்-உத்-தெளல்லா, ஆவாத்தின் தலைந‌கர், லக்னோவில் ஒரு பிரார்த்தனை மண்டபத்தை அமைக்க, சிறந்த கட்டிட கலைஞர்களைப் பணித்தார். இதன் மூலம், பணக்கார மற்றும் ஏழ்மை நிலையில் இருக்கும் வேலையில்லா திண்டாட்ட‌த்தை களைய விரும்பினார்.

அக்காலத்தின் சிறந்த கட்டுமானத்தில் ஒன்றான இந்த பிரார்த்தனை மண்டபத்தை கட்டி முடிக்க 11 ஆண்டுகள் ஆனது; திறமைமிகு எந்தவொரு தொழிலாளியும் வேலையில்லாமல் இருக்ககூடாது என்று 20,000 தொழிலாளர்கள் அம்ர்த்தப்பட்டனர் இந்த கட்டுமானத்திற்கு.

4. தாஜ்-உல் மஸ்ஜித், போபால்

இந்தியாவின் மிகப்பெரிய மசூதி. தாஜ்-உல் மஸ்ஜித் என்ற வார்த்தைக்கு மசூதிகளின் மகுடம் என்று பொருள். இளஞ்சிவப்பு வண்ணத்தில், இருபக்கமும், 18 அடுக்குகள் கொண்ட உயர் தூபிகளும், மார்பிள் குவிமாடமும் கொண்ட மசூதி. மசூதியின் தரை, டெல்லி, ஜம்மா மசூதியின் தரையை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். முக்கிய மண்டபத்தில், அழகாக கட்டப்பட்ட தூண்கள் உள்ளது.

5. ஹஸ்ரத்ப‌ல் மஸ்ஜித், ஸ்ரீ நகர்

இஸ்லாமியர்களின் முக்கிய மத இடங்களில் இதுவும் ஒன்று. மிரட்சி தரும் வெண்ணிற மார்பிளின் கட்டுமானத்தில் ஒரு ஏரிக்கு அருகில் இருக்கிறது. முகமது நபியின் முடி இங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. முக்கியமான பண்டிகை தருணங்களில், மக்களின் பார்வைக்கு இது வைக்கப்படுகிறது.