Search
  • Follow NativePlanet
Share
» » 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் புதிதாகப் பிறந்த சிறுத்தை குட்டிகள் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் புதிதாகப் பிறந்த சிறுத்தை குட்டிகள் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

இந்தியாவில் சிறுத்தைகள் கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு முன் அழிந்து விட்டன என்று கூறப்பட்டது. ஆனால் வன விலங்குகளின் சங்கிலியில் நிச்சயம் சிறுத்தைகள் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், பாரத பிரதமர் பல முயற்சிகள் எடுத்து, சிறுத்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். நமீபியாவில் இருந்து கொண்டு வந்த சிறுத்தைகள் கடந்த செப்டம்பர் 17 அன்று மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடுவிக்க்கப்பட்டன. இப்போது இவற்றில் ஒரு பெண் சிறுத்தை நான்கு சிறுத்தைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தியாவில் 70 வருடங்களுக்கு பிறகு சிறுத்தைக் குட்டிகள் பிறந்துள்ளன. இவற்றின் அழகான புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

Kuno national park

70 வருடங்களுக்கு முன் இந்தியாவில் முற்றிலுமாக அழிந்த சிறுத்தைகள்

இந்த பூமி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. நமக்கு இந்த பூமியில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவிற்கு பிற உயிர்களுக்கும் இந்த பூமியில் உரிமை இருக்கிறது. நம் சுயநலத்தினால் இந்தியாவில் பல விலங்குகளும், தாவரங்களும் அழிக்கப்பட்டன. அப்படி தான் இந்தியாவில் சிறுத்தைகளும் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு, காடு அழித்தல், மரபணுக்கள், உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் அழிந்து போயின. இந்தியாவிற்கு சிறுத்தைகளை கொண்டு வர பலரும் முயற்சி செய்தனர். அதே போல கடந்த ஆண்டு இந்தியாவிற்கு சிறுத்தைகள் சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன.

Kuno national park

தீவிர முயற்சியால் இந்தியாவிற்கு திரும்பிய சிறுத்தைகள்

சிறுத்தை இனம் சுமார் 8.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த விலங்குகள் ஒரு காலத்தில் ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் ஆசியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. ஆனால் இப்போது ஆப்பிரிக்காவில் கணிசமாகவும் ஈரானில் ஒரு சிறிய எண்ணிக்கையைத் தவிர, வேறு எங்கும் சிறுத்தைகள் இல்லை. கடந்த நான்கு தசாப்தங்களில் அவற்றின் எண்ணிக்கை 8000 க்கும் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வன விலங்கு சங்கிலியில் சிறுத்தைகள் இருப்பது தான் மற்ற விலங்குகளுக்கும் நல்லது. அவற்றை திரும்பவும் கொண்டு வருவது இன்றியமையாத விஷயமாகும்.

Kuno national park

மத்தியப்பிரதேசத்தில் அறிமுகம்

எந்தவொரு உயிரினத்தின் பிறப்பும் படைப்பின் அழகு மற்றும் புதிய ஒன்றின் தொடக்கமாகும். குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரின் வருகை ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை உருவாக்கும். இந்த மகிழ்ச்சி மனிதர்களுக்கு மட்டுமில்லை, விலங்குகளுக்கும் உண்டு. 70வருடங்களுக்கு பிறகு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிறந்த நான்கு புதிய அழகான சிறுத்தை குட்டிகளின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளன என்று தான் சொல்ல வேண்டும்.

இணையத்தை ஆக்கிரமித்த புதிதாக பிறந்த சிறுத்தை குட்டிகள்

இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வான், புதிதாகப் பிறந்த சிறுத்தை குட்டிகளின் மிகவும் அழகான படத்தை ட்வீட் செய்துள்ளார். சியாயா என்ற சிறுத்தை நான்கு அழகான மகிழ்ச்சி மூட்டைகளைப் பெற்றெடுத்ததாக அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்தியாவில் சிறுத்தை குட்டிகள் பிறந்து ஏழு தசாப்தங்களுக்கு மேலாகிறது. இந்த அழகான புகைப்படங்களைப் பார்த்த எவராலும் பரவசமடையாமல் இருக்க முடியாது. மிகவும் சிறியதாகவும் மென்மையாகவும் காணப்படும் அந்த அழகு முகத்தை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது தானே!

Kuno national park

லைக்ஸ்ளை அள்ளிய புகைப்படங்கள்

ட்விட்டரில் இந்த புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்திலேயே லைக்ஸ் மற்றும் ஷேர்களை அள்ளியது. இந்த அழகிய புகைப்படங்களை பலரும் ரசித்து அவற்றிற்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தப் பிறப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்திய அரசுக்கு இது ஒரு புதிய மைல்கல். இது போன்ற பல அழகிய சிறுத்தை குட்டிகள் இனி இந்தியாவில் பிறக்கப் போகிறது, இந்த அழகான குட்டிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+