Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியர்கள் தற்போதைக்கு மியான்மருக்கு செல்ல வேண்டாம் – போர் காரணமாக இந்திய அரசு வேண்டுகோள்!

இந்தியர்கள் தற்போதைக்கு மியான்மருக்கு செல்ல வேண்டாம் – போர் காரணமாக இந்திய அரசு வேண்டுகோள்!

மியான்மரில் அரசுப் படைகளுக்கும், ஜுண்டா எதிர்ப்புப் பிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வரும் நிலையில், இந்திய அரசு இந்தியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. மியான்மரின் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் இந்தியர்கள் அந்நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும், ஏற்கனவே மியான்மரில் வசிக்கும் இந்தியர்கள் யாங்கூனில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்யுமாறு இந்திய அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது!

மியான்மருக்கு செல்வதை தவிர்க்கவும்

இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, 'மியான்மரில் உருவாகி வரும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து இந்திய பிரஜைகளும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே மியான்மரில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

myanmarsecurity

இந்திய தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது

வெளியுறவுத்துறை அதன் சமீபத்திய ஆலோசனையில், சாலை வழியாக மியான்மருக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும், மியான்மரில் வசிக்கும் இந்திய பிரஜைகள் அவசரகால படிவத்தை பூர்த்தி செய்து யாங்கூனில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், இந்தியா-கனடா பதற்றம் மற்றும் சூடான் மோதல் போன்ற முந்தைய நிலைகளில், புது தில்லி இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது மற்றும் அவசரகால படிவத்தை பூர்த்தி செய்யுமாறு தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டது.

அவசரகால படிவத்தை பூர்த்தி செய்யவும்

கூடுதலாக, ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் இரண்டு வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும், ஒவ்வொரு நபரின் பாஸ்போர்ட்டின் முதல், கடைசி மற்றும் தற்போதைய விசா பக்கங்களின் ஒரு நகலையும் சரிபார்ப்பதற்காக கோரப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணம் கிடையாது என அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பதாரர் ஒரு மாதத்திற்குள் அஞ்சல் மூலம் பதிவுச் சான்றிதழைப் பெறுவார். ஆவணங்களை நேரிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளாலோ சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சகம் மேலும் கூறியது, அவர்கள் அதிகாரக் கடிதம் மற்றும் அடையாளச் சான்றுகளை வெளிப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த 90,000 பேர்

மியான்மரில் தற்போதைய மோதல் 2021 இல் தொடங்கியதிலிருந்து, அண்டை நாட்டைச் சேர்ந்த ஏராளமான குடிமக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஐ.நா.வின் கூற்றுப்படி, கடந்த மாதம் முதல் மியான்மரில் தீவிரமடைந்த சண்டையில் சுமார் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சுமூகத் தீர்வு காண வேண்டும்

மேலும் வன்முறையைத் தொடர்ந்து, மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து 26,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அவர்களில் சுமார் 5,000 பேர் இந்திய மாநிலமான மிசோரமுக்குள் நுழைந்தனர். இனியும் இரத்தக்களரி ஏற்படக்கூடாது என்றும் பிரச்சினைகளுக்கு சுமுகமாகத் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா கோரியுள்ளது.

கோரிக்கை வைத்த இந்தியா

கடந்த வாரம், மியான்மரில் அரசாங்கத் துருப்புக்கள் மற்றும் இராணுவ எதிர்ப்புப் பிரிவுகளுக்கு இடையேயான சண்டையை நிறுத்தும் வகையில், போருக்கு முடிவு கட்டவும், ஆக்கப்பூர்வமான உரையாடலையும் இந்தியா வலியுறுத்தியது. சமீபத்திய சண்டை தொடர்பான விசாரணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மியான்மரின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, அந்த நாட்டில் ஜனநாயகம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவர்களின் அழைப்பை மீண்டும் கூறினார்.

ஆனால் தற்போதைக்கு மியான்மர் மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதால் இந்தியர்கள் அந்நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும், ஒருவேளை மியான்மரில் இருந்தால் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

More News

    Read more about: travel news myanmar
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+