இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் சின்ன சின்ன அடையாளங்கள், வளமான வரலாறு மற்றும் பல கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும். இங்கு பிரமிக்க வைக்கும் அழகுடைய பல நகரங்கள் உள்ளன. ஆனால் எப்படிப்பட்டவர்களின் மனதையும் கட்டி இழுக்கும் வகையிலான அற்புதமான சில நகரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஹவாமஹால், ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது "பிங்க் சிட்டி" (Rose City) என்று அழைக்கப்படுகிறது. ஹவாமஹால் - 953 ஜன்னல்கள் காற்றை உள்ளே அனுமதித்து, நகரத்தின் வெப்பத்தைக் குறைக்க உதவுகின்றன.பழங்காலத்தில் ராஜ குடும்பத்தினர் வெளியில் செல்ல முடியாததால், அவர்கள் இந்த ஜன்னல்கள் மூலம் வெளி நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு பயன்படுத்தினர்.இந்த அரண்மனை ஒரு கோவில் கோபுரத்தை ஒத்ததாக கட்டப்பட்டுள்ளது.

தசாஷ்வமேதக் காட்,வாரணாசி
இந்த காட், வராணாசியின் பழமையான மற்றும் முக்கியமான காட்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் மாலையில் தீபங்கள், வேத மந்திரங்கள், மற்றும் இசையுடன் நடைபெறும் புனித கங்கா ஆரத்தி இங்கு பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இங்கு பக்தர்கள் கங்கை நீரில் ஸ்நானம் செய்வதால் பாவங்களை நீங்கும் என்று நம்பப்படுகிறது.

மரைன் டிரைவ், மும்பை
"குயின்ஸ் நெக்லேஸ்" (Queen's Necklace) என அழைக்கப்படும் அழகிய கடற்கரை சாலை ஆகும்.அரபிக்கடல் அருகே அமைந்திருக்கும், மும்பையின் கண்கொள்ளா இடம். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வாக்கிங், ஜாக்கிங், மற்றும் சைக்கிளிங் செய்வதற்காக நிறைய மக்கள் இங்கு வருவார்கள். கடற்கரை அருகில் உள்ள பல புகழ்பெற்ற கடற்கரை உணவகங்களில் மும்பை சிறப்பு உணவுகளை அனுபவிக்க சிறந்த இடமாகும்.

பிச்சோலா ஏரி,உதய்பூர்
பிச்சோலா ஏரி அற்புதமான கட்டிடக்கலை, இயற்கை, மற்றும் வரலாற்று தொன்மையின் கலவையாக இருக்கிறது.தீவுகளில் அமைந்த அரண்மனைகளான - ஜக்நிவாஸ் (Jag Niwas) மற்றும் ஜக்மந்திர் (Jag Mandir) ஆகியவை பிரபலமானவைகள்.அழகிய அரண்மனைகளை சுற்றி பார்க்க அருமையான படகு பயணங்களும் உள்ளன.நீர் அருகே அமர்ந்து பாரம்பரிய ராஜஸ்தானி உணவுகளை சுவைக்கலாம்.

விக்டோரியா மெமோரியல்,கோல்கத்தா
விக்டோரியா மெமோரியல், ராணி விக்டோரியாவின் நினைவாக உருவாக்கப்பட்டது.103 மீட்டர் உயரம் கொண்ட பாரம்பரிய நினைவுச் சின்னம் ஆகும். பிரிட்டிஷ் மற்றும் இந்திய வரலாற்று பொருட்களான ஏராளமான ஓவியங்கள், ஆயுதங்கள், நாணயங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இங்கு உள்ளன.

இந்தியா கேட், டில்லி
இந்தியா கேட் என்பது வெறும் சுற்றுலா தலம் அல்ல; அது இந்திய வீரர்களின் தியாகத்துக்கான நினைவுச் சின்னம் ஆகும். ஜனவரி 26 அன்று இந்தியாவின் மிகப்பெரிய அணிவகுப்பு இங்கு நடைபெறும். தலைநகர் டில்லியில் அழகிய புகைப்படங்களை எடுக்க சிறந்த இடம்.

சார்மினார்
சார்மினார், இந்தோ-இஸ்லாமிக் மற்றும் பாரசீக ஸ்டைல் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும்.ஹைதராபாதின் முக்கியமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று.நான்கு உயரமான மினாரங்கள், ஒவ்வொன்றும் 56 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது.பாரம்பரிய ஹைதராபாதி பேங்கிள்ஸ், பர்ஃப்யூம், மற்றும் கை தையல் பொருட்களுக்கு புகழ்பெற்ற சந்தையான நகாச் மார்க்கெட் இங்கு உள்ளது.

லால்பாக் தாவரவியல் தோட்டம்
லால்பாக் தாவரவியல் தோட்டம் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பிரம்மாண்டமான தாவரவியல் தோட்டங்களில் ஒன்று. .1,800-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு அபூர்வ மரங்கள், செடிகள், மற்றும் பூக்கள் உள்ளன.பிரிட்டனின் கிரிஸ்டல் பேலஸ் (Crystal Palace) அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட கண்ணாடி அரங்கம் உள்ளது.

மெரினா கடற்கரை
இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும்.தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா இடமாக விளங்குகிறது, சென்னை மெரினா கடற்கரை.மணற்கோபுரங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் - அங்கே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டாக்ஸ் மற்றும் மகாபாரத சிற்பம் போன்ற நினைவுச்சின்னங்களை பார்வையிடலாம்.வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த இடம்.



Click it and Unblock the Notifications






