Search
  • Follow NativePlanet
Share
» »இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?

இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?

நான் இந்துவாக இருப்பதில் பெருமைக் கொள்கிறேன் எனவும், எனக்கு இந்து மதம் பற்றியும், தமிழகத்தில் உள்ள கோயில்கள் பற்றியும் அனைத்தும் தெரியும் என மார் தட்டி கொள்வார்கள். ஆனால், உண்மையில் இந்துக்களே கூட அறியாத பல விஷயங்கள் இருக்கின்றன. 1000 வருடங்களாக ஸ்ரீராமனுஜரின் உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வருவதில் இருந்து சிக்கல் சிங்காரவேலருக்கு வேர்ப்பது வரை பல அதிசயங்களில் இந்து கோயில்களில் உள்ளன. அவற்றில் நீங்கள் கேள்விப்பட்டது ஏதேனும் உண்டா என பாருங்களேன்!

Temples of Tamil Nadu

1000 வருடங்களாக பாதுகாக்கப்படும் உடல்

ஒரு தத்துவஞானி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்து மதத்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரும் பங்காற்றிய ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 1000 வருடங்களாக கெடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவரது உடல் இங்கு அமர்ந்த நிலையில் மம்மியாக பாதுகாக்கப்ட்டு வருகிறது.

குளிர்காலத்தில் வெப்பம், வெயில் காலத்தில் குளிர்

தஞ்சை பெருவுடையார் கோயிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் கோயில் கருவறை உள்ளே குளிர்காலத்தில் வெப்பமாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

இளநீரால் எரியும் தீபம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

சிற்பங்களாக வடித்து வைக்கப்பட்ட கருவின் வளர்ச்சி

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோயிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்தந்த விதமான வடிவத்தில் இருக்கும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளி

வட சென்னையில் உள்ள 5000 வருடம் பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோயிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவா லிங்கத்தின் மீது மாலை போல வந்து விழுகிறது.

Temples of Tamil Nadu2

தெப்பக்குளத்தில் மீன்கள் வளராது

மதுரை மீனாட்சியம்மன் தெப்பக்குளத்தில் எந்த வேளையிலும் எந்த காலத்திலும் மீன்கள் வளர்ந்தது இல்லையாம். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் மீன்கள் மீனாட்சியம்மன் தெப்பக்குளத்தில் மீன்கள் வளராது.

மலைக்கு மேல் பறக்காத காகங்கள்

குளித்தலை அருகில் உள்ள ரத்தினகிரி மலை மேல் காகங்கள் பறப்பது இல்லை. அதற்கு எந்த காரணம் என்று இன்று வரை தெரியவில்லை, ஆனால் ரத்தினகிரி மலை மீது காகங்கள் பறக்காது.

Temples of Tamil Nadu2

புளிக்காத தயிர்

சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் ஒரு நாளும் புளித்த சுவையில் இருப்பது இல்லை.

மறுநாள் வரும் தண்ணீர்

தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீர் இல்லாமல் இருக்கும் போது பிரார்த்தனை செய்து பால் அல்லது இளநீர் விட்டால் மறுநாள் ஊற்றில் தண்ணீர் வந்து விடுகிறது.

நீலநிறமாக மாறும் பால்

திருநாகேஸ்வரம் சிவன் கோயிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகப்பால் நீல நிறமாகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் சங்கு

திருக்கழுக்குன்றத்தில் உள்ள தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றுகிறது. சிவ பெருமானுக்கு படைக்கப்பட்ட கழுகு உண்ணும் அதிசயமும் இந்த கோயிலில் அரங்கேறுகிறது.

Temples of Tamil Nadu4

வேல் வாங்கும் போது வியர்க்கும் முருகன்

சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும் போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

கல்லில் இருந்து எழும் இசையொலி

தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் 'சரிகமபதநி' என்ற இசையொலி கேட்பதை நீங்கள் உணரலாம்

More News

    Read more about: temples of tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+