» »இந்த வருட ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் - ஒரு சிறப்பு பார்வை

இந்த வருட ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் - ஒரு சிறப்பு பார்வை

Posted By: Staff

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா மீண்டும் வந்துவிட்டது. நம்ம தல தோனி தலைமையில் இந்தமுறையும் கோப்பையை வென்றெடுக்க திரும்பி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. வாய்ப்புக்காக ஏங்கித்தவிக்கும் திறமைவாய்ந்த இந்திய இளைஞர்களுக்கு ஐ.பி.எல் போட்டிகள் ஒரு வரப்பிரசாதம். இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பெற்று தன் வாழ்நாள் கனவை வாழ்ந்தவர்கள் நிறைய பேர். அப்படிப்பட்ட இந்த ஐ.பி.எல் போட்டிகள்  இந்தியா முழுக்கவும் 11 நகரங்களில் 12 மைதானங்களில் இவ்வருடம்  நடைபெறவிருக்கின்றன. அந்த மைதானங்கள் சிலவற்றைப்பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். 

அகமதாபாத் :

அகமதாபாத் :

பெரிய பெரிய ஸ்டார் வீரர்கள் யாரும் இல்லாமலேயே துடிப்பான இளைஞர்களை கொண்டு சாதிக்கும் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சரிபாதி போட்டிகளை விளையாடவுள்ள மைதானம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் அமைந்திருக்கும் 'சர்தார் பட்டேல் ஸ்டேடியம்' ஆகும். 54,000 பேர் அமரும் வசதி கொண்ட இந்த மைதானம் அகமதாபாத் நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கிறது.

Photo:Hardik jadeja

அகமதாபாத் :

அகமதாபாத் :

மோதேரா பகுதியில் அமைந்திருப்பதால் 'மோதேரா ஸ்டேடியம்' என்றும் அங்குள்ள மக்களால் இந்த மைதானம் அழைக்கப்படுகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற என்றும் மறக்க முடியாத போட்டியென்றால் அது 2011 உலகக்கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவை காலிறுதியில் வென்றதுதான்.

Photo:Amidtb994

அகமதாபாத் :

அகமதாபாத் :

இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரமான அகமதாபாத் நகரை பற்றிய இன்னும் சுவாரஸ்யமான தகவல்களையும், அங்குள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழின் No.1 பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Amidtb994

அகமதாபாத் :

அகமதாபாத் :

சர்தார் படேல் மைதானத்தின் நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் இரும்பினால் ஆனா எருதின் சிற்பம்.

Photo:Hardik jadeja

அகமதாபாத் :

அகமதாபாத் :

இந்த மைதானம் அமைந்திருக்கும் மோதேரா நகரம்.

Photo:Chintan Varma

பெங்களுரு - சின்னஸ்வாமி ஸ்டேடியம் :

பெங்களுரு - சின்னஸ்வாமி ஸ்டேடியம் :

இந்தியாவில் இருக்கும் குட்டியான கிரிக்கெட் மைதானமாக சொல்லப்படும் சின்னஸ்வாமி ஸ்டேடியம் பெங்களுரு நகரில் அதிமுக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. இந்த மைதானத்திற்கு வெகு அருகிலேயே கர்நாடக அரசின் சட்டப்பேரவையான 'விதான் சௌதா', கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் கப்பன் பூங்கா போன்றவை அமைந்திருகின்றன. 36,760 அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும்.

Photo:Royal Challengers Bangalore

பெங்களுரு - சின்னஸ்வாமி ஸ்டேடியம் :

பெங்களுரு - சின்னஸ்வாமி ஸ்டேடியம் :

இந்த மைதானத்தில் தான் புனே அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிரிஸ் கெய்ல் 175* ரன்கள் விளாசினார். உலக அளவில் டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த மைதானத்துக்கு வந்து போட்டிகளை பார்த்துவிட்டு அப்படியே பெங்களுருவையும் சுற்றிப்பார்த்துவிட்டு திரும்புங்கள்.

Photo:Royal Challengers Bangalor

பெங்களுரு - சின்னஸ்வாமி ஸ்டேடியம் :

பெங்களுரு - சின்னஸ்வாமி ஸ்டேடியம் :

சின்னஸ்வாமி மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகளை கண்டுகளிக்கும் ரசிகர்கள்.

Photo:Zahid H Javali

பெங்களுரு - சின்னஸ்வாமி ஸ்டேடியம் :

பெங்களுரு - சின்னஸ்வாமி ஸ்டேடியம் :

இந்த மைதானத்துக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கும் பேரழகும் பசுமையும் நிறைந்த கப்பன் பூங்கா.

Photo:prashantby

சென்னை - எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் :

சென்னை - எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் :

ஐ.பி.எல் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிவரும் ஒரே அணி எதுவென்றால் அது சென்னை சூப்பர் கிங்க்ஸ் தான். அந்த சென்னை அணியின் தாய்வீடு சேப்பாக்கம் மைதானம் என்று அழைக்கப்படும் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் ஆகும். 1916ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் இந்தியாவில் இருக்கும் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும்.

Photo:Chandrachoodan Gopalakrishnan

சென்னை - எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் :

சென்னை - எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் :

இங்கு பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன. இந்த மைதானத்தில் தான் 1934ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி விளையாடப்பட்டது, இங்கே தான் 1952ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது, இங்கே தான் டெஸ்ட் வரலாற்றில் 'டை' முடிவடைந்த 2ஆவது டெஸ்ட் நடந்தது, இங்கு தான் பாகிஸ்தான் வீரர் இந்தியாவுக்கு எதிராக 194 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

Photo:Aravind Sivaraj

சென்னை - எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் :

சென்னை - எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் :

இந்த மைதானம் சென்னையின் புகழ்மிக்க அடையாளமான மெரினா கடற்கரையை ஒட்டியே அமைந்திருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளை இதுவரை நேரில் கண்டிராதவர்கள் இந்த வருடம் கண்டிப்பாக ஒரு போட்டியையாவது சென்று பார்த்து விட்டு அப்படியே சென்னையையும் சுற்றிப்பாருங்கள்.

Photo:Sayowais

 டெல்லி - பெரோஷாஹ் கோட்லா :

டெல்லி - பெரோஷாஹ் கோட்லா :

ஐ.பி.எல் போட்டிகளில் அதிகம் சோபிக்காத அணிகளில் டெல்லியும் ஒன்று. என்னதான் பெரிய பெரிய வெளிநாட்டு வீரர்கள் அணியில் இருந்தாலும் எப்படியோ பெரும்பாலான போட்டிகளில் தோற்றுிடுகின்றனர். இவர்கள் டில்லியில் அமைந்திருக்கும் பெரோஷாஹ் கோட்லா மைதானத்தில் சரிபாதி போட்டிகளை விளையாட உள்ளனர்.

Photo:Kinshuk1005

 டெல்லி - பெரோஷாஹ் கோட்லா :

டெல்லி - பெரோஷாஹ் கோட்லா :

இந்த மைதானம் புதுதில்லி நகரின் பிராதான பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த மைதானத்தில் தான் அனில் கும்ப்ளே ஒரு இன்னிங்க்சில் 10 விக்கெட்டுகளையும் அள்ளி சாதனை படைத்தார். டெல்லி நகரை பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் நேடிவ் பிளானட் தளத்தில் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்.

கொல்கத்தா - ஈடன் கார்டென்ஸ் :

கொல்கத்தா - ஈடன் கார்டென்ஸ் :

இந்தியாவில் இருக்கும் மிகப்பிரபலமான கிரிக்கெட் மைதானம் எதுவென்றால் சந்தேகமே இல்லாமல் அது ஈடன் கார்டென்ஸ் மைதானம் தான். இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான கிரிக்கெட் மைதானமான இங்கு தான் இரண்டு முறை ஐ.பி.எல் பட்டம் வென்ற கொல்கட்டா அணி தனது உள்ளூர் போட்டிகளை விளையாடுகிறது.

Photo:Madho Agarwal

கொல்கத்தா - ஈடன் கார்டென்ஸ் :

கொல்கத்தா - ஈடன் கார்டென்ஸ் :

முன்பு 100,000 பேர்களுக்கு மேல் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் மிக பிரமாண்டமான மைதானமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த மைதானத்தில் விளையாட வேண்டும் என்று கனவு காண்பர். இந்த மைதானம் அமைந்திருக்கும் பாரம்பர்யம் மிக்க கொல்கத்தா நகரை பற்றிய மேலதிக தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Saumyadipta

கொல்கத்தா - ஈடன் கார்டென்ஸ் :

கொல்கத்தா - ஈடன் கார்டென்ஸ் :

ஈடன் கார்டென்ஸ் மைதானத்தின் நுழைவு வாயிலும், கொல்கத்தா நகரின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாக மஞ்சள் நிற டேக்சியும்.

Photo:Royroydeb

மற்ற மைதானங்கள் :

மற்ற மைதானங்கள் :

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மைதானங்கள் தவிர மும்பையில் உள்ள வான்கடே மைதானம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி கிரிக்கெட் மைதானம், ராய்பூர், புனே போன்ற நகரங்களிலும் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo:Royal Challengers Bangalore

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் முன்னர் விசாகா சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானத்தின் இருக்கை வசதியை 65,000-ஆக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மொகாலி கிரிக்கெட் மைதானம்

மொகாலி கிரிக்கெட் மைதானம்

மொகாலி கிரிக்கெட் மைதானம் பஞ்சாப்பில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 27 ஆயிரம் நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டிகளை ரசிக்கும் வகையில் கொள்ளளவு கொண்டது.


wiki

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்