Search
  • Follow NativePlanet
Share
» »இனி இரவு ரயில் பயணத்தில் நீங்கள் இவற்றையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்!

இனி இரவு ரயில் பயணத்தில் நீங்கள் இவற்றையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்!

IRCTC இரவில் பயணிக்கும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்வதற்காக பெரும்பாலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. IRCTC ஆல் வெளியிடப்பட்ட புதிய விதிகள், பயணிகள் எதிர்கொள்ளும் கோவிட் மற்றும் இரவு நேரப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

பயண டிக்கெட் பரிசோதகரால் (TTE) இரவு 10 மணிக்குப் பிறகு டிக்கெட்டுகளை சரிபார்க்க முடியாது. நடுத்தர பெர்த்தில் ஒதுக்கப்பட்ட பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கலாம். மேலும், ரயிலைத் தவறவிட்ட பயணிகளின் காலி இருக்கைகளை ரயில் அதிகாரிகள் அல்லது TTE ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் ஒதுக்க முடியும். மேலும், ரயில் இரண்டு நிலையங்களைக் கடந்த பிறகு தான் அந்த இருக்கைகள் வெவ்வேறு பயணிகளுக்கு ஒதுக்கப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை நீங்கள் இரவு நேர பயணம் செய்யும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டும்!

irctcnewguidelinesfornighttravel-2022

IRCTC வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Ø பயணம் முழுவதும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். நீங்கள் ஒரு சானிடைசரையும் எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் பயணம் முழுவதும் உங்கள் கைகளை சுத்தப்படுத்தி வைத்திருப்பது உங்களுக்கு நல்லது.

Ø அனைத்து நிலையான கோவிட்-19 நெறிமுறைகளையும் அனைத்து பயணிகளும் ரயில் ஊழியர்களும் கடைபிடிக்க வேண்டும். உங்கள் ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் ரயில் நிலையத்தை அடைந்தால் அது உதவியாக இருக்கும்.

Ø பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை எரிய வைத்து, கோச் மற்றும் அருகிலுள்ள பெட்டிகளில் அனைவரின் தூக்கத்தையும் தொந்தரவு செய்வதாக பல புகார்கள் எழுந்ததால் இரவு 10 மணிக்கு மேல் விளக்கை அணைக்க வேண்டும்.

Ø அதே போல இரவு 10 மணிக்கு மேல் தங்கள் இருக்கையில் இருந்துக்கொண்டோ அல்லது பெட்டிக்கு உள்ளேயே மொபைல் போனிலோ அல்லது நண்பர்களுடனோ சத்தமாக பேசி சிரித்து மற்ற பயணிகளை தொந்தரவு செய்யக் கூடாது.

Ø இரவு 10 மணிக்கு மேல் ஸ்பீக்கர் வைத்தோ, அல்லது மொபைல் போனிலோ பிறருக்கு தொல்லை செய்யும் வகையில் சத்தமாக பாட்டு, வீடியோ கேக்க கூடாது. ஆனால் ஹெட்செட் போட்டுக் கொண்டு கேக்கலாம்.

Ø நீங்கள் எது செய்தாலும் அது உங்களுடன் பயணிக்கும் பிற பயணிகளின் இரவு தூக்கத்தை தொந்தரவு செய்யாத வகையில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

இந்த விதிகள் அமலில் இருக்கும் போது, இரவு நேர பணியாளர்கள் அமைதியாக செயல்படுவார்கள். இருப்பினும், ஒரு பயணியாக, இந்த விதிகள் ஏதேனும் மீறப்படுவதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இரவு ஊழியர்களை அணுகலாம். பிரச்சனை சரியான நேரத்தில் தீர்க்கப்படுவதை அவர்கள் உறுதி செய்வார்கள்.

More News

    Read more about: irctc new guidelines
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+