Search
  • Follow NativePlanet
Share
» »ஊட்டி, குன்னூர், முதுமலைக்கு சுற்றுலா போகலாமா – IRCTCயின் அசத்தல் சென்னை to ஊட்டி டூர் பேக்கேஜ்!

ஊட்டி, குன்னூர், முதுமலைக்கு சுற்றுலா போகலாமா – IRCTCயின் அசத்தல் சென்னை to ஊட்டி டூர் பேக்கேஜ்!

பருவமழை தொடங்கும் இந்த நேரத்தில் 'மலைவாசஸ்தலங்களின் ராணி' என்று செல்லமாக அழைக்கப்படும் ஊட்டிக்கு சென்று, ஏரி, பூங்கா, வியூபாயின்ட்கள் போன்ற ஊட்டியின் அழகிய சுற்றுலாத் தலங்களுடன், பல அரிய வனவிலங்களுக்கு புகலிடமாக இருக்கும் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தையும், அழகிய குன்னூரையும் பார்வையிட்டு வந்தால் நன்றாக இருக்கும் தானே, ஆனால் அதற்கு நீங்கள் சிரமப்பட வேண்டாம். IRCTC உங்களுக்காகவே ஒரு பிரத்யேக சுற்றுலா பேக்கேஜை வழங்குகிறது!

1

IRCTCயின் மலிவான சுற்றுலா

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மலிவான விலையில் பயணிகளுக்கு நிறைவான சுற்றுலாவை வழங்கும் நோக்கில் அவ்வப்போது பேக்கேஜ்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் இப்போது சென்னையிலிருந்து ஊட்டி, முதுமலை மற்றும் குன்னூருக்கு 4 இரவு 5 பகல் கொண்ட டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேக்கேஜின் கீழ் நீங்கள் எந்தெந்த இடங்களை சுற்றிப் பார்ப்பீர்கள், கட்டணம், புக்கிங் மற்றும் இதர விவரங்கள் கீழே!

ஒரே பேக்கேஜில் ஊட்டி, முதுமலை, குன்னூர்

அடர்ந்த தாவரங்களால் மூடப்பட்ட மலைகள், சிறிய மலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் யூகலிப்டஸ் மரங்களால் மூடப்பட்ட பீடபூமிகளால் நிறைந்த ஊட்டி எப்பொழுதுமே நமக்கு ஒரு உற்சாகத்தை தரும் ஊட்டியை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம். அதனுடன் ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்' எனப்படும் குறும்படம் எடுக்கப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம், மற்றும் அழகிய குன்னூர் சுற்றுலாத் தலங்களையும் கண்டு மகிழலாம்.

2

சென்னை to ஊட்டி, முதுமலை, குன்னூர் டூர் பேக்கேஜ் விவரங்கள்

நாள் 1: முதல் நாளன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் எண் 12671, நீலகிரி எக்ஸ்பிரஸில் 21.05 மணிக்கு உங்களது பயணம் தொடங்கும்.

நாள் 2: காலை 06.15 மணி மேட்டுப்பாளையம் வந்தடைந்தவுடன் சாலை மார்க்கமாக ஊட்டிக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். ஊட்டியில் உள்ள ஹோட்டலில் செக் இன் செய்து பிரஷ் ஆன பின்னர், காலை உணவு முடித்து சைட்சீயிங்கிற்கு செல்லுவீர்கள். தொட்டபெட்டா சிகரம், தேயிலை அருங்காட்சியகம், ஊட்டி நகர சுற்றுலா, ஊட்டி ஏரி மற்றும் தாவரவியல் பூங்காவைப் பார்வையிடுவீர்கள்.

நாள் 3: மூன்றாம் நாள் காலையில் படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் ஏரி போன்றவற்றைப் பார்வையிட்டுவிட்டு, முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்குச் செல்லுவீர்கள். அங்கே, யானைகள் முகாம், ஜங்கிள் சவாரி ஆகியவை முடித்து இரவு ஊட்டியில் தங்குவீர்கள்.

நாள் 4: நான்காம் நாள் காலையில் குன்னூருக்கு கிளம்பி சிம்ஸ் பூங்கா, லாம்ப்ஸ் ராக் மற்றும் டால்பின்ஸ் நோஸ் ஆகியவற்றைப் பார்வையிட்டுவிட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தடைவீர்கள். ரயில் எண். 12672 - நீலகிரி விரைவு வண்டியில் 21.20 மணிக்கு சென்னை நோக்கிய பயணம் தொடங்கும்.

நாள் 5: சென்னை சென்ட்ரல் 06.20 மணிக்கு வந்தடைந்தவுடன் உங்களது பயணம் இனிதே முடிகிறது.

இந்த பேக்கேஜில் வரக்கூடிய சலுகைகள்

1. ஸ்லீப்பர் வகுப்பில் ரயில் பயணம்

2. ஊட்டியில் இரண்டு இரவு தங்கக்கூடிய ஹோட்டல் வசதி

3. தனிப்பட்ட வாகனம் மூலம் சாலை போக்குவரத்து

4. பயணத்திட்டத்தின்படி அனைத்து பார்வையிடல்

5. பயண காப்பீடு

6. ஜிஎஸ்டி

மேற்கூறியவை தவிர்த்து, முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் சஃபாரிக்கான கட்டணம் இதர பிற சேவைகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்

3

பேக்கேஜின் கட்டணங்கள்

1-3 நபர்கள் தங்கக்கூடிய ஸ்டாண்டர்ட் (Standard) பிரிவின் கீழ், தனி நபருக்கு ரூ.20,750, டபுள் ஷேரிங்கில் நபருக்கு ரூ.10,860, ட்ரிபிள் ஷேரிங்கில் நபருக்கு ரூ.8,300, 5-11 வயதுள்ள குழந்தைக்கு படுக்கை வேண்டுமென்றால் ரூ.4,550, படுக்கை வேண்டாமென்றால் ரூ.3,700 கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதே போல 4-6 நபர்கள் தங்கக்கூடிய ஸ்டாண்டர்ட் (Standard) பிரிவின் கீழ், ட்ரிபிள் ஷேரிங்கில் நபருக்கு ரூ.7,900, 5-11 வயதுள்ள குழந்தைக்கு படுக்கை வேண்டுமென்றால் ரூ.6,400, படுக்கை வேண்டாமென்றால் ரூ.5,550 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த டூர் பேக்கேஜ் ஜூலை 20 ஆம் தேதி துவங்கவுள்ளதால் நீங்கள் முந்திக் கொள்வது அவசியம்.

எப்படி புக்கிங் செய்வது?

நீங்கள் இந்த டூர் பேக்கேஜில் மைசூர் மற்றும் குடகை சுற்றிப்பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMR007 ஐ பார்வையிட்டு புக் செய்து கொள்ளவும். அல்லது 8287931964 / 8287931972 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

More News

    Read more about: ooty irctc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+