Search
  • Follow NativePlanet
Share
» »ஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான் இருக்கு தெரிஞ்சிக்கணுமா?

ஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான் இருக்கு தெரிஞ்சிக்கணுமா?

By Udhay

ராஜஸ்தானில் உள்ள எல்லா பாலைவன நகரங்களையும் போலவே ஜெய்சல்மேர் நகரமும் இங்குள்ள ராஜகம்பீர கோட்டைகள், கோட்டை மாளிகைகள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கோயில்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. ஜெய்சல்மேரின் பெருமைக்குரிய சின்னமாக கருதப்படும் ஜெய்சல்மேர் கோட்டை இந்த தங்க நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். ஜெய்சல்மர் கோட்டைக்கு போய்விட்டு அப்படியே நகரத்தை சுற்றிவிட்டு வருவோம் சரியா?

 தங்க கோட்டை

தங்க கோட்டை

சூரியன் மறையும் அந்தி நேரத்தில் இந்த மஞ்சள் நிற மணற்பாறைகளால் ஆன கோட்டை தங்க நிறத்தில் ஜொலிக்கின்றது. அதனாலேயே இது தங்க கோட்டை அல்லது சோனார் குய்லா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கோட்டைக்கு அக்காய் போல், ஹவா போல், சூரஜ் போல் மற்றும் கணேஷ் போல் என்ற வாசல்கள் உள்ளன. ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக்கலையை இணைத்து இந்த கோட்டை உருவாக்கப்பட்டிருப்பதால் இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த கோட்டையில் பல அரசகுடும்ப அரண்மனைகளையும், ஏழு ஜெயின் கோயில்களையும் மற்றும் எண்ணற்ற கிணறுகளையும் காணலாம்.

Jesse Gillies

 அரண்மனை அருங்காட்சியகம்

அரண்மனை அருங்காட்சியகம்

ஏழு ஜெயின் கோயில்களில் ஷாந்திநாத் கோயில், சந்திரபிரபு கோயில் மற்றும் ஷீதல்நாத் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மஹாராஜா அரண்மனை அல்லது ஜெய்சல்மேர் கோட்டை அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் பண்பாட்டு மையம் போன்றவை ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இந்த அரண்மனை உச்சியிலிருந்து ஜெய்சல்மேர் நகரக்காட்சிகளை பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.

Ajsp2495

 குறிப்பிடத்தக்க அம்சங்கள்

குறிப்பிடத்தக்க அம்சங்கள்

வெள்ளி அரியாசனம், அரச கட்டில், பாத்திரங்கள், முத்திரைகள், பணம் மற்றும் ராஜ குடும்பத்தினரின் சிலைகள் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் இந்த அரண்மனையில் பயணிகள் பார்ப்பதற்கென்று உள்ளன. 180 வருடங்கள் பழமையை உடைய ‘அகால் மரப்படிவ பூங்கா'வும் ஜெய்சல்மேரில் பார்க்க வேண்டிய பிரசித்தமான இடமாகும். தொல் படிவங்களாக காட்சியளிக்கும் பிரம்மாண்டமான மர அடிவாரத்துண்டுகளும், புராதனமான கடற் சங்குகளும் இந்த பூங்காவில் காணப்படும் முக்கியமான விசேஷ அம்சங்களாகும்.

Pradeep717

 பாலைவன தேசிய பூங்கா

பாலைவன தேசிய பூங்கா

பூனைப்பருந்து, பருந்து, புள்ளிக்கழுகு, ஆளிப்பருந்து, கழுகு, சிவப்பு வல்லூறு, புள்ளி வல்லூறு மற்றும் மணற் கௌதாரி போன்ற அதிசயமான பறவை வகைகள் ஜெய்சல்மேரிலுள்ள பாலைவன தேசிய பூங்காவில் காணப்படுகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தின் அரிய வகைப்பறவையான கான மயில் அல்லது காட்டு மயில் என்றழைக்கப்படும் பறவை இனம் இந்த தேசியப்பூங்காவை உறைவிடமாக கொண்டிருப்பது விசேஷமான ஒன்றாகும். நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் இந்த தேசிய பூங்காவுக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.

Dhruvmakwana1998

தவறாமல் காணவேண்டியவை

தவறாமல் காணவேண்டியவை

நத்மல்ஜி-கி-ஹவேலி, சலீம் சிங் - கி -ஹவேலி, பட்வோன்-கி-ஹவேலி, ஹவேலி ஷீநாத், மனக் சௌக் போன்ற ஹவேலிகள் (கோட்டை மாளிகைகள்) அவற்றின் தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுக்காக புகழ்பெற்று அறியப்படுகின்றன. மேலும் ஜெய்சல்மேருக்கு வருகை தரும் பயணிகள் மூல் சாகர், கோபா சௌக், ஜெய்சல்மேர் நாட்டுப்புறக்கலை அருங்காட்சியகம், டாசியா டவர், காட்ஸிசார் ஏரி, படா பாக், கூரி சந்த் மணற் குன்றுகள், சாம் மணற் குன்றுகள் மற்றும் குல் தாரா போன்ற இடங்களை தவறாமல் பார்த்து மகிழலாம்.

Ritesham

 வரலாற்று பொருள்கள்

வரலாற்று பொருள்கள்

ஜெய்சல்மேரில் அமர் சிங் ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள அமர் சிங் அரண்மனை ஒரு அழகான ராஜ மாளிகை ஆகும். இந்த அரண்மனை 17ம் நூற்றாண்டில் ராஜா மஹரவால் அகாய் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் உட்புறத்தை அற்புதமான சுவரோவியங்கள் அலங்கரிக்கின்றன. இப்படிப்பட்ட அழகான அரண்மனைகளுடன் சில அருங்காட்சியகங்களும் ஜெய்சல்மேரில் அமைந்துள்ளன.

இங்குள்ள பாலைவன பண்பாட்டு மையம் மற்றும் அருங்காட்சியகத்தில் பல அரிதான வரலாற்று சாதனங்கள், அரிய தொல்படிவங்கள், புராதன பிரதிகள், புராதன நாணயங்கள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று கால வீட்டு உபயோகப்பொருட்கள், பாறைக்கற்களில் செய்யப்பட்ட குவளைகள், பாண்டங்கள் மற்றும் ஆபரணங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Ritesham

விமானம் மூலம் பயணம்

விமானம் மூலம் பயணம்

ஜெய்சல்மேருக்கு செல்ல பயண வசதிகள் விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும் விதத்தில் ஜெய்சல்மேர் அமைந்துள்ளது. இந்த நகரத்துக்கு அருகாமையில் உள்ள விமானத்தளமாக ஜோத்பூர் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இது புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் பல விமான சேவைகளை கொண்டுள்ளது. தவிர இதர முக்கிய இந்தியப் பெருநகரங்களான கொல்கத்தா, சென்னை, மும்பை மற்றும் பெங்களூருவிலிருந்து தினசரி விமான சேவைகள் ஜோத்பூர் விமான நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன. ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்தே பிரிபெய்ட் டாக்சிகள் ஜய்சல்மேருக்கு கிடைக்கின்றன.

Arunmeena228

 ரயில் பயணம்

ரயில் பயணம்

பயணிகள் ரயில் மூலமாகவும் ஜெய்சல்மேரை வந்தடையலாம். ஜெய்சல்மேர் ரயில் நிலையத்தை ஜோத்பூர் மற்றும் முக்கிய இந்திய நகரங்களுடன் இணைக்கும் ரயில் சேவைகள் தினசரி உள்ளன. இவை தவிர டெல்லி, ஜெய்ப்பூர், அஜ்மேர், பிக்கானேர் போன்ற நகரங்களிலிருந்து டீலக்ஸ் மற்றும் செமிடீலக்ஸ் பேருந்து வசதிகள் ஜெய்சல்மேர் நகருக்கு இயக்கப்படுகின்றன. தங்க நகரமான ஜெய்சல்மேர் வருடமுழுவதும் வறண்ட வெப்பமான பருவ நிலையைக் கொண்டுள்ளது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவையே இங்கு முக்கியமான பருவ காலங்களாகும். அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் இங்கு விஜயம் செய்ய மிகவும் ஏற்ற காலமாகும்.

Arnav grover

Read more about: travel forts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more