Search
  • Follow NativePlanet
Share
» »தங்கம் ஜொலிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா ?

தங்கம் ஜொலிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா ?

வறண்ட நிலப்பரப்புகள் சூழ அமைந்துள்ள பாலைவனத்தை நோக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பயணிக்கக் காரணம் இந்த தங்க நகரம் தான். அது என்ன தெரியுமா ?

வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவின் பாலைவன நகரமாக அறியப்படுகிறது. இருப்பினும், இங்குள்ள புராதானமிக்க கோட்டைகளும், வரலாற்று நினைவிடங்களும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமாக ராஜஸ்தான் மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளை வைத்துள்ளது. வறண்ட நிலப்பரப்புகள் சூழ அமைந்துள்ள இப்பகுதியை நோக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பயணிக்கக் காரணம் ராஜஸ்தானிற்கு உட்பட்ட இந்த தங்க நகரம் தான். அது என்ன தெரியுமா ?

தங்க பாலை வனம்

தங்க பாலை வனம்


ராஜஸ்தானின் தங்க நகரம் என அறியப்படும் பகுதி ஜெய்சால்மர். இங்கே கடல் போல் காணப்படும் பாலைவன மணற்பரப்புகள் யாவும் சிதறிய தங்கத் துகள்கள் போல மிளிர்ந்து காற்றில் படரும். அதன் மேலே ஓட்டகத்தில் பயணிக்கும் போது இதை முழுவதுமாக நாம் உணரலாம்.

Murali K

ஜெய்சால்மர் கோட்டை

ஜெய்சால்மர் கோட்டை


ஜெய்சல்மரின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது ஜெய்சல்மேர் கோட்டை. இந்த தங்க நகரத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் இக்கோட்டை புகழ்பெற்றுள்ளது. மாலை நேரப் பொழுதில் சூரியன் மறையும் அந்நேரம் படரும் ஒளி கோட்டையையும், சுற்றுவட்டாரத்தையும் தங்க முலாம் பூசியதைப் போல காட்சியளிக்க வைக்கிறது.

Suresh Godara

கட்டமைப்பு

கட்டமைப்பு


ஜெய்சால்மர் கோட்டையின் உள்ளேயே ஓர் அரண்மனை அருங்காட்சியகமும், பண்பாட்டு மையமும் செயல்பட்டு வருவது கூடுதல் சிறப்பு. பிரம்மாண்டமான கலைநயமிக்க கோட்டையான இது 95க்கும் மேற்பட்ட காவல் கோபுரங்களுடன் காணப்படுகிறது. தற்சமயம் இக்கோட்டை வளாகத்திலேயே ஜெய்சால்மர் மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேர் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Shitha Valsan

காட்ஸிஸார் ஏரி

காட்ஸிஸார் ஏரி


செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்ஸிஸார் ஏரியின் கரையில் பல சிறிய ஆன்மீகத் தலங்கள் அமைந்துள்ளன. பருவ காலத்தில் உள்நாட்டுப் பறவைகளின் சரணாலயமாக இது காட்சியளிக்கும். குறிப்பாக, பரத்பூர் பறவைகள் சரணாலயத்திற்கு இடம் பெயரும் பறவைகள் சில இந்த ஏரிப்பகுதியில் தஞ்சமடைவது வழக்கம்.

Terry Presley

படா பாஃப் பூங்கா

படா பாஃப் பூங்கா


ஜெய்சால்மர் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவரவிடக் கூடாத தலங்களில் ஒன்று படா பாஃப் பூங்கா. இத்தோட்டம் சுமார் 16-ம் நூற்றாண்டில் மஹர்வால் ஜெய்த்சிங் என்னும் அரசரால் உருவாக்கப்பட்டது. தோட்டத்தின் ஒரு பகுதியாக பெரிய அணை கட்டமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் சுற்றுலாத் தலங்களில் இது முக்கிய அம்சம் பெற்றுள்ளது.

Rajmeena.cse

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X