Search
  • Follow NativePlanet
Share
» » வரம் அருளும் கந்த சஷ்டி – சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய முருகன் கோவில்கள்!

வரம் அருளும் கந்த சஷ்டி – சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய முருகன் கோவில்கள்!

நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கைக்கூட வைக்கும் ஒரு அற்புத விரதம் இந்த கந்த சஷ்டி! திருமணம் நீங்க, குழந்தைப்பேறு உண்டாக, தொழிலில் மேன்மை அடைய, கடன் தொல்லை நீங்க, வேலைவாய்ப்பு கிடைக்க என வேண்டுவன எல்லாம் இந்த சஷ்டி விரதத்தில் கிடைக்கும்! இந்த கந்த சஷ்டியில் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆலயங்களுக்கு சென்று வாருங்கள்! முருகப்பெருமானின் அருளைப் பெற்றிடுங்கள்!

வரங்களை வாரி வழங்கும் கந்த சஷ்டி

வரங்களை வாரி வழங்கும் கந்த சஷ்டி

முருகப்பெருமானை வழிப்படக்கூடிய அற்புதமான விரத நாட்கள் பல இருந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த மகா கந்த சஷ்டி மிகவும் விசேஷமானது. மாதந்தோறும் வரும் சஷ்டி விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த ஐப்பசி கந்த சஷ்டியில் விரதமிருந்தால் ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை எண்ணி விரதமிருந்தற்கான புண்ணியமும் ஆசியும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்! இந்த கந்த சஷ்டி நாட்களில் முருகப்பெருமானை எண்ணி வழிபட்ட அனைவர்க்கும் வேண்டுவனவற்றை கொடுத்து வரம் அருள்வான் அந்த அழகு குமரன்!

ஐப்பசி மாத மகா கந்த சஷ்டி 2022

ஐப்பசி மாத மகா கந்த சஷ்டி 2022

ஒவ்வொரு ஆண்டும் பிரதமையில் இருந்து தான் ஐப்பசி கந்த சஷ்டி தொடங்குகிறது. ஆனால் இந்த வருடம் பிரதமை அன்று சூரிய கிரகணம் வருகிறது, இருப்பினும் பிரதமையும் அன்றே வருவதால் அக்டோபர் 25 ஆம் தேதி தான் கந்த சஷ்டி விரதம் இருக்க தொடங்க வேண்டும். அடுத்த ஏழு நாட்களும் சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். சஷ்டியின் ஏழாம் நாள் அதாவது அக்டோபர் 30 அன்று சூரசம்ஹாரம் நடைபெறும். இந்த ஏழு நாட்களும் உபவாசம் இருந்தோ அல்லது ஒரு வேலை மட்டும் உணவு உட்கொண்டோ அல்லது பால் பழங்கள் சாப்பிட்டோ விரதத்தை கடைபிடிக்கலாம்.

சென்னையில் பார்க்க வேண்டிய முருகர் கோவில்கள்

சென்னையில் பார்க்க வேண்டிய முருகர் கோவில்கள்

1. வடபழனி முருகன் கோவில் - சென்னையில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்றான இந்த வடபழனி முருகன் கோவில் 1890 இல் அண்ணாசாமி நாயக்கரால் கட்டப்பட்ட ஒரு எளிய கொட்டகையாகும். ஆனால் நாளடைவில் இங்கு வந்து செல்லும் அனைவர்க்கும் முருகன் வேண்டியவற்றை தந்து அருள் பாலித்ததால் இது மிக பிரபலமான ஸ்தலமாக உருவெடுத்தது. வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து எளிதில் கோவிலை அடைந்திடலாம்.

2. அறுபடை வீடு முருகன் கோவில் - முருகப்பெருமானின் 'அறுபடை வீடு' சன்னதிகளில் குடி கொண்டிருக்கும் முருகனை இந்த ஒரே கோவிலில் நம் தரிசிக்கலாம். ஒவ்வொரு சுவாமிக்கும் தனி சன்னதி உள்ளது. இந்த கோவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாக்ஷேத்ரா காலனியில் உள்ளது. முருகனின் ஆறு படைவீடுகளையும் இந்த ஒரே இடத்தில் நாம் காணலாம்.

3. சிறுவாபுரி பால முருகன் கோவில் - இக்கோயில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள முருகனை வழிபடும் எவருக்கும் உடலில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கி விடுகிறதாக நம்பப்படுகிறது. தீராத நோய்கள் விலக சிறுவாபுரி பால முருகன் கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

4. திருப்போரூர் கந்தசுவாமி கோவில் - சென்னையில் உள்ள பிரபலமான முருகன் கோவில்களில் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் இன்றியமையாத கோவிலாகும். திருமணம் தடை நீங்க, குழந்தை வரம் பெற, கடன் தொல்லை நீங்க திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வந்தால் திருப்பம் கிடைக்கும் என்ற ஒரு ஐதீகமே உள்ளது.

5. குன்றத்தூர் முருகன் கோவில் - சென்னையில் உள்ள முருகன் கோவில்களிலேயே குன்றத்தூர் முருகன் கோவில் தான் மிகவும் பழமையானது. திருப்போரூரில் வதம் முடிந்து திருத்தணிகை செல்லும் போது முருகன் இந்த குன்றில் சற்று நேரம் அமர்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இது மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகும்.

6. சிவ சுப்ரமணிய சுவாமி கோவில் - முருகன் இங்கு கல்யாணக் கோலத்தில் வள்ளி மற்றும் தெய்வநாயகியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது

7. குமரன் குன்றம் கோவில் - குரோம்பேட்டையில் மலைமீது அமைந்துள்ள இந்த கோவில் பல அதிசயம் நிகழ்த்தும் அற்புதக் கோவிலாகும். இந்த கோவிலுக்கு வந்து செல்லும் அனைவர்க்கும் மலைமீது நின்ற கோலத்தில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார் முருகர்.

8. வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவில் - புராணத்தின் படி, வல்லன் என்ற அரக்கனை அழித்து முருகன் இப்பகுதியில் அமைதியை நிலைநாட்டினார் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது. இக்கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சிலை இந்தியாவில் உள்ள அனைத்து முருகன் சிலைகளிலும் மிக உயரமானது. தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து இக்கோவிலை எளிதில் அடைந்திடலாம்.

Read more about: chennai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X