» »மகாராஷ்டிராவில் இருக்கும் விசித்திர கடற்கரை நகரம் எது தெரியுமா?

மகாராஷ்டிராவில் இருக்கும் விசித்திர கடற்கரை நகரம் எது தெரியுமா?

Written By: Balakarthik Balasubramanian

கான்கீரீட் காடுகளில் வாழ்ந்து அலுத்துபோன நகரத்து வாசிகள், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் திண்டாடி தான் தவிக்கின்றனர். அதனால், கிடைக்கும் நேரத்திலெல்லாம் எங்காவது வெளியில் செல்ல அவர்கள் ஆசைப்படுவதும் வழக்கமாகிறது. விசித்திரமான இடத்தை தேடி சென்று இயற்கை தாயவள் மடியில் தவளவே நாம் அனைவரும் ஆசைக்கொள்கிறோம். அப்பேற்ப்பட்ட உங்கள் ஆசைக்கு அட்டவணை தயார் செய்ய நீங்கள் விருப்பம் கொண்டால், இதோ உங்களுக்கான விடுமுறைக்கு ஏற்ற இடப்பட்டியலை இந்த ஆர்டிக்கலின் மூலமாக நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.

கொங்கன் கடற்கரையை மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையில் கொண்டிருக்க, இரண்டு குன்றுகளிற்கு இடையில் செட்டில் ஆகியிருக்கிறது. மகாராஷ்டிராவில் காணப்படும் கடற்கரை நகரமான காஷித் அழகிய காட்சிகளை நம் கண்களுக்கு வழங்குகிறது. மும்பையிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், பூனேவிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படும் இந்த காஷித், வார விடுமுறையில் மகிழ்ச்சியால் நம் மனதினை வருடும் ஒரு இடமாக காணப்படுகிறது.

இரத்தின நீல நிற நீரை கொண்டு மிளிரும் இந்த காஷித் கடற்கரை, கரையின் விளிம்பில் வெள்ளை நிற மணல்களையும் கொண்டிருக்கிறது. சவுக்கு மரங்களால் எங்கும் சிதறி காணப்படும் இந்த இடம் 3 கிலோமீட்டர் நீண்ட கடற்கரை தோற்றத்தை நம் கண்களுக்கு தருகிறது.

மகாராஷ்டிராவில் இருக்கும் விசித்திர கடற்கரை நகரம் எது தெரியுமா?

Abhijit Tembhekar

இந்த நீண்ட நெடிய கடற்கரையில் நாம் நடந்து செல்ல, புத்துணர்ச்சிகொண்டு, புதியதோர் வார பயணத்திற்கும் நம் மனம் தயாராகிறது. அற்புதமான ஹோட்டல்களும், ஓய்வு இடங்களும் இந்த காஷித் கடற்கரையில் காணப்பட, வாரவிடுமுறை நாட்களில் இவ்விடம் சற்று கூட்ட நெரிசலுடனே காணப்படுகிறது. வார நாட்களில் பாலைவனம் போலும் கூட்டமற்று இந்த இடம் காணப்படுகிறது.

இந்த அமைதியான கடற்கரையை தவிர்த்து, காஷித்தின் 15 கிலோமீட்டர் தூரம் வரை எத்தகைய இடங்களெல்லாம் காண்கிறது? வாருங்கள் பார்க்கலாம்.

ரேவ்தன்டா கோட்டை:

இந்தியாவில் போர்த்துகீசியர்களின் படையெடுப்பை நமக்கு நினைவுபடுத்தும், இந்த ரேவ்தன்டா கோட்டையானது காஷித்திலிருந்து 13 கிலோமீட்டர்கள் தொலைவில் காணப்படுகிறது. 'ரேவ்தன்டா அகர்கோட்' என்றழைக்கப்படும் இந்த கோட்டை, கி.பி 1558 இல் கட்டப்பட்டதாகும். இந்த தனிமைப்படுத்தப்பட்ட கோட்டையானது கருப்பு நிற மணலால் சூழ்ந்திருக்க, அந்த கோட்டைகளானது இன்று இடிபட்ட நிலையில் காணப்படுகிறது. போர்த்துகீசியர்களின் அழகிய வாழிடத்தை நினைவுப்படுத்தும் இந்த இடம், கிராமிய கடற்கரை நெருக்கத்தையும் நமக்கு தருகிறது.

மகாராஷ்டிராவில் இருக்கும் விசித்திர கடற்கரை நகரம் எது தெரியுமா?

Damitr

பன்சாத் வனவிலங்கு சரணாலயம்:

காஷித்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் காணப்பட, மேற்குதொடர்ச்சியின் கடலோர சுற்றுசூழல் இதற்கு பாதுகாப்பாக அமைகிறது. இந்த சரணாலயமானது 1986ஆம் ஆண்டு நிறுவப்பட, இந்த சரணாலயமானது சாம்பார், காட்டுப்பன்றி, கழுதைப்புலி ஆகியவற்றிற்கு வாழிடமாக காணப்படுகிறது. அதோடுமட்டுமல்லாமல், கவர்ச்சிகரமான பறவைகளும் இங்கே பறந்து பறவை ஆர்வலர்கள் மனதினை தூக்கி கொண்டு செல்கிறது.

கொரலை கோட்டை:

ரேவ்தான்டா கோட்டையை ஒத்த அழகுடன் காணப்படும் கொரலை கோட்டை போர்த்துகீசியர்களின் காலத்தில் கட்டப்பட்ட மற்றுமொரு மதில் கோட்டையாகும். ரேவ்தான்டா சிற்றோடைக்கு இந்த கோட்டையானது பாதுகாப்பாக இருக்க, 1521ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரியவருகிறது. இந்த கோட்டையில் பதினொன்று கதவுகள் காணப்பட, 4 வெளிக்கதவுகளும், 7 உள் கதவுகளுமென அது பிரிக்கப்படுகிறது. இந்த கோட்டையானது பல தாக்குதல்களை தாங்கிகொண்டு இன்று இடிபட்ட நிலையில் காணப்பட, கடற்கரைக்கு அழகினை தந்து இன்றும் இவ்விடம் கம்பீரமாக நிற்கிறது.

மகாராஷ்டிராவில் இருக்கும் விசித்திர கடற்கரை நகரம் எது தெரியுமா?

Abhijit Tembhekar

காஷித்தை நாம் காண சிறந்த நேரங்கள்:

வெப்பமண்டல காலநிலையை வருடமுழுவதும் இந்த காஷித் கடற்கரை நகரமானது கொண்டிருக்க, கோடைக்காலத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் காணப்படுகிறது. அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் குளிர்காலத்தின்போது இந்த காஷித்தை நாம் பார்க்க ஏதுவாக அமைய, கால நிலையும் சிறப்பாகவும், மென்மையானதாகவும் இந்த நேரங்களில் இருக்கிறது.

காஷித் கடற்கரையில் காணும் தண்ணீர் விளையாட்டுகள்:

இங்கே கடற்கரையில் எழுந்துவரும் அலைகளானது, தண்ணீர் விளையாட்டான வாழை படகு சவாரி, பாராசைலிங், ஜெட் பனிச்சறுக்கு, ஆழ்கடல் நீச்சல், கடல் கயாகிங், வேக படகு ஆகிய நீர்விளையாட்டுக்களை விளையாட நம்மை அழைக்க, மேலும் இங்கே உள்ளூர் சேவைகளானவையும் கடற்கரை விளையாட்டுக்காக கரைகளில் காணப்படுகிறது.

காஷித் கடற்கரையில் கூடாரம் அமைக்கலாம்:

காஷித் கடற்கரையில் கூடாரங்களை அமைக்கும் நாம், அலைத் தாக்கம் தன்னை வந்து தீண்டுகிறதா என்பதனையும் உறுதி செய்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். நீங்கள் பார்பெக்யூ பார்டி செல்ல திட்டமிட்டிருந்தாலும், உங்கள் தோழர்களுடனோ அல்லது இங்கே கூடும் பெரும் கூட்டத்துடனோ மனதினை இதமாக்கி மகிழ்ந்து இன்புறலாம்.
இங்கே முகாமில் நெருப்பை மூட்டி, பார்பெக்யூ மூலமாகவும் மனமகிழலாம். உங்களுக்கு பிடித்த ஒருவருடன் செல்வதன் மூலமாக, இங்கே காணும் அமைதியான நீரானது அவரை சூழ, இயற்கையின் மடியில் நாம் தவழ்ந்து இதமானதோர் உணர்வினை இந்த விடுமுறையின் மூலமாக நாம் பெறுகிறோம். இங்கே கூடாரத்திற்கு என்றே தனித்தனி தொகுப்புகள் (Package) காணப்பட, உள்ளூர் சேவைகளின் மூலம் நமக்கு புதுவித அனுபவமும் கிடைக்கிறது.

மகாராஷ்டிராவில் இருக்கும் விசித்திர கடற்கரை நகரம் எது தெரியுமா?

jayesh phatarpekar

காஷித்தை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக:

காஷித்துக்கு அருகில் காணப்படும் ஒரு விமான நிலையம் தான், சத்ரபதி சிவாஜி விமான நிலையமாகும். இங்கிருந்து முக்கிய நகரங்களான, தில்லி, பெங்களூரு, கொல்கத்தா என பல இடங்களுக்கு சேவை இயக்கப்பட, இங்கிருந்து காஷித்துக்கு 4 மணி நேரங்கள் ஆகிறது.

தண்டவாள மார்க்கமாக:

காஷித்துக்கு அருகில் காணப்படும் ஒரு இரயில் நிலையம், மும்பையில் காணப்படும் சத்ரபதி சிவாஜி இரயில் நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களான பூனே, அஹமதாபாத் என பல இடங்களுக்கு சேவை இணைக்கப்பட்டிருக்கிறது.

சாலை மார்க்கமாக:

காஷித்திலிருந்து 128 கிலோமீட்டர் தொலைவில் மும்பையும், 171 கிலோமீட்டர் தொலைவில் பூனேவும் காணப்படுகிறது. இந்த இரு நகரங்களிலிருந்தும் கடற்கரைக்கு செல்ல 4 மணி நேரம் ஆகிறது., அல்லது இங்கிருந்து வாடகை காரின் மூலமாகவோ, அல்லது சொந்தமாக நமது வண்டியிலோ, அல்லது உள் நகரத்து பேருந்துகளின் மூலமாகவோ நாம் காஷித்தை அடையலாம்.

Read more about: travel temple