» »கும்பகோணம் மகாமகம் திருவிழாவை பற்றிய சுவாரஸ்யமிக்க தகவல்கள் !!

கும்பகோணம் மகாமகம் திருவிழாவை பற்றிய சுவாரஸ்யமிக்க தகவல்கள் !!

Posted By: Staff

கோயில் நகரமான கும்பகோணத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா கும்பமேளாவுக்கு இணையான மிகப்பெரும் ஆன்மீக ஒன்றுகூடல் ஆகும். இவ்விழாவின் போது கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடி தங்கள் பாவங்களை போக்கிட இந்தியா முழுக்க இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 

பெருஞ்சிறப்பு கொண்ட இத்திருவிழாவை பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.  

கும்பகோணம் - புராண வரலாறு:

கும்பகோணம் - புராண வரலாறு:

முழு யுக சக்கரத்தின் முடிவில் ஏற்படும் பெரும் பிரளயத்திலிருந்து தன்னுடைய படைப்புகளையெல்லாம் பாதுகாக்க அவற்றையெல்லாம் பிரம்ம தேவர் ஒரு குடத்திலிட்டு இமய மலையின் உச்சியில் வைத்தார் என்றும், பிரளயத்தில் இமயமலை உச்சி வரை சென்ற கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டு தெற்கே அக்குடம் தரைதட்டிய இடம் தான் 'கும்பகோணம்' என்றழைக்கப்படுகிறது.

Ryan

கும்பகோணம் - புராண வரலாறு:

கும்பகோணம் - புராண வரலாறு:

அப்படி கரைதட்டிய அமிர்தம் நிரம்பிய குடத்தை அம்பெய்தி உடைத்து அந்த அமிர்தத்தில் நனைந்த மணலை கொண்டு லிங்கம் ஒன்றை செய்து சிவபெருமான் அதனுள் ஆதிகும்பேஸ்வரராக ஐய்யிக்கியமானர் என்றும் சொல்லப்படுகிறது.

simianwolverine

கும்பகோணம் - புராண வரலாறு:

கும்பகோணம் - புராண வரலாறு:

மேலும் அக்குடத்தில் இருந்து வெளிப்பட்ட அமிர்தமே மகாமக குளமாக மாறியது என்றும் அதோடு ஐந்து குரோசம் தொலைவு அதாவது கிட்டத்தட்ட 24கி.மீ அளவுக்கு பரவியதென்றும் கூறப்படுகிறது.

இந்த 24கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் ஆகிய இடங்கள்பஞ்சகுரோசத்தலங்கள் என்றழைக்கப்படுகின்றன.

Ssriram mt

ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்:

ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்:

கும்பகோணம் நகரின் பிராதன கோயிலாக இருப்பது ஆதிகும்பேஸ்வரர் கோயிலாகும். அப்பர், சம்பந்தர் ஆகிய சைவக்குரவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய சிவாலயமாகும்.

காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இக்கோயில் 1300ஆண்டுகள் பழமையானதாகும்.

Arian Zwegers

ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்:

ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்:

இக்கோயிலின் திருக்குளமாக இருக்கும் மகாமக குளத்தில் தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் மகாமகத் திருவிழா நடக்கிறது.

மாசி மகக்குளம் கும்பகோணம் நகரின் மையத்தில் 6.2ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

Ssriram mt

மகாமகக் குளம் :

மகாமகக் குளம் :

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும் அன்று மகாமகத் திருவிழா கும்பகோணத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் இக்குளத்திற்கு வந்து புனித நீராடி செல்வதாக நம்பப்படுகிறது.

Ssriram mt

மகாமகக் குளம் :

மகாமகக் குளம் :

தேவர்கள் மட்டுமில்லாது கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னியர் ரூபமாக வந்து மகாமகக்குளத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம்.

Ssriram mt

மகாமகக் குளம் :

மகாமகக் குளம் :

மகாமகக் குளத்தை சுற்றிலும்பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என 16 சிவலிங்கங்கள் மற்றும் 21 கிணறுகள் அமைந்துள்ளன.

மகாமகக் குளம் :

மகாமகக் குளம் :

குளத்தை சுற்றியிருக்கும் 21கிணறுகளில் வாயு தீர்த்தம்,கங்கா தீர்த்தம்,பிரும்ம தீர்த்தம்,யமுனா தீர்த்தம்,குபேர தீர்த்தம்,கோதாவரி தீர்த்தம்,ஈசான தீர்த்தம்,நர்மதை தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,அக்னி தீர்த்தம்,காவிரி தீர்த்தம்,யம தீர்த்தம்,குமரி தீர்த்தம்,நிருதி தீர்த்தம்,பயோஷினி தீர்த்தம்,தேவ தீர்த்தம் சிவன்,வருண தீர்த்தம், சரயு தீர்த்தம்,கன்யா தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இருக்கின்றன.

இவற்றில் நீராடுவது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.

Ryan

மகாமகக் குளம் :

மகாமகக் குளம் :

12ஆண்டுகள் கழித்து இவ்வருடம் நடக்கும் மாசி மகத்தில் கலந்துகொண்டு ஆதிகும்பேஸ்வரரை வழிபட்டு மகாமக குளத்தில் நீராடி பெறற்கரிய ஆன்மீக அனுபவத்தை பெற்றிடுங்கள்.

கும்பகோணம்:

கும்பகோணம்:

கும்பகோணம் நகரை எப்படி சென்றடைவது?

கும்பகோணம் ஹோட்டல்கள்