Search
  • Follow NativePlanet
Share
» »பிரம்மாண்டத்துக்கு பேர் போன 2.0 இயக்குநர் ஷங்கரோட ஊர் எப்படி இருக்குது பாருங்க!

பிரம்மாண்டத்துக்கு பேர் போன 2.0 இயக்குநர் ஷங்கரோட ஊர் எப்படி இருக்குது பாருங்க!

பிரம்மாண்டத்துக்கு பேர் போன 2.0 இயக்குநர் ஷங்கரோட ஊர் எப்படி இருக்குது பாருங்க!

2.0 இந்தியாவோட திரைப்பட வரலாற்றுல பிரம்மாண்டமான ஒரு படம்னா இன்னிக்கு தேதிக்கு இதுதான். ஜென்டில்மேன்ல ஆரம்பிச்ச ஷங்கர், ரஜினிகாந்த் படங்கள இயக்க ஆரம்பிச்சதுக்கு அப்றமா உலக அளவுல பிரபலமாயிட்டாரு. அதுலயும் அவரோட திரைப்படங்கள்ல வர்ற இடங்கள் மிகவும் பிரம்மாண்டமா ஹாலிவுட் தரத்துல இருக்கும். இது எல்லாருக்கும் தெரியும். அவரு பொறந்த ஊரு எப்படி இருக்கு தெரியுமா? வாங்க இயக்குநரோட பிறந்த ஊருக்கு ஒரு சுற்றுலா போயிட்டு வரலாம்.

குடந்தை

குடந்தை

குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் என்னும் குட்டி நகரமானது, இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக்கவரும் இனிமையான நகரமாகும். தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் இது. கும்பகோணத்தின் இரண்டு புறங்களிலும் காவிரி மற்றும் அரசலாறுகள் பாய்கின்றன.

எல்லைகள் பேசும் வரலாறு

எல்லைகள் பேசும் வரலாறு

கும்பகோணத்தின் வடபகுதியில் காவிரியும், தென்பகுதியில் அரசலாறும் ஓடுகின்றன. கும்பகோணம் பல மிகச் சுவையான வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது. 2500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்திலேயே இந்நகரம் இருந்ததாக நம்பப்படுகிறது.

சோழர்களின் தலைநகரம்

சோழர்களின் தலைநகரம்

தென்னிந்தியாவை ஆண்ட பண்டைக் கால அரச வம்சங்களான, சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஆகியோரது ஆட்சிக் கட்டுப்பாட்டில் கும்பகோணம் இருந்துள்ளது.

7ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கும்பகோணத்தைத் தம் தலைநகரமாக ஆக்கினர். அதன் பிறகுதான் இந்நகரம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

ஆங்கிலேய ஆட்சி

ஆங்கிலேய ஆட்சி

வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில்தான், கும்பகோணம் வளத்திலும், சிறப்பிலும் உச்சத்தை அடைந்தது. மதம் சார்ந்த கல்வி மற்றும் கலாச்சாரக் கல்வி ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க மையமாக இந்நகரம் திகழத்தொடங்கியது

தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்

தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்

இந்த நகரம் "தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்" என்று அழைக்கப்படுகிறது. கோவில் நகரம் கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது.

கோவில்களின் எண்ணிக்கை

கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவில், ஸ்ரீ சாரங்கபாணி கோவில், ஸ்ரீ ராமசாமி கோவில் ஆகியவை இங்குள்ள கோவில்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மகாமக திருவிழா

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற மகாமக திருவிழா இந்நகரத்தில்தான் கொண்டாடப்படுகிறது. மகாமகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கும்பகோணத்திற்கு வருகிறார்கள்.

கோவில்களை கட்டுவதே நோக்கம்



கும்பகோணத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும், தமது ஆட்சிக்காலத்தில், இங்கு பல கோவில்களை கட்டுவதில் குறியாக இருந்துள்ளனர். எனினும் கும்பகோணத்தை தமது தலைநகரமாக கொண்டு இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சி செய்த இடைக்காலச் சோழர்கள்தான் இங்கு கோவில்களை அமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர்.

சோழப்பேரரசு

ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவிலானது, இடைக்காலச் சோழர்களின் காலத்தில், கி.பி.7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவன் கோவிலான இதுதான் இங்குள்ள கோவில்களிலேயே மிகப் பழமையானது ஆகும்.

முன்னதைவிட சிறப்பாக

ஒவ்வொரு ஆட்சியாளரும் தாம் கட்டும் கோவில்கள் தமக்கு முன்னவர்களால் கட்டப்பட்ட கோவில்களை விடச் சிறப்பானதாக அமைய வேண்டும் என்று விரும்பி பெரிதும் முயன்றுள்ளனர். இனி கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்களைக் காண்போம்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய கும்பகோணம்

கும்பகோணத்தின் அழகிய புகைப்படங்கள்

Read more about: travel temple kumbakonam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X