Search
  • Follow NativePlanet
Share
» »சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில்! புரட்டாசியில் பயணிப்போம் வாங்க!

சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில்! புரட்டாசியில் பயணிப்போம் வாங்க!

சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில்! புரட்டாசியில் பயணிப்போம் வாங்க!

இந்த பதிவில் நாம் விஷ்ணு கோவிலாக இருந்து சிவன் கோவிலாக மாறிய ஒரு கோவிலைப் பற்றியும், அங்கு எப்படி செல்வது, அருகில் காண வேண்டிய இடங்கள், பூசை நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

புராணக் கதைகள்

புராணக் கதைகள்

புராணக் கதைகளின் படி, கைலாயத்தில் சிவ பெருமானுக்கு திருமணம் நடந்த போது அங்கு நிறைய பேர் இருந்ததால், வடபகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்தும் போய் விட்டதாம். இதைச் சரி செய்ய சிவ பெருமான் வேண்டுதலுக்கு இணங்க, அகத்திய முனிவரும் உலகம் சமநிலையை அடைய தென் பகுதிக்கு நடந்து வந்தாராம். இங்கு வந்த அகத்தியர் குற்றாலம் பகுதியில் ஒரு கோவில், முதலில் விஷ்ணு கோவிலாக இருந்ததைப் பார்த்தாராம்.

பின் அதனை சிவன் கோவிலாக மாற்றியுள்ளார் அகத்தியர். அகத்தியர் மாற்றிய அந்த கோவில்தான் குற்றாலத்தின் பெரிய அருவி பக்கத்தில் அமைந்துள்ள திரு குற்றால நாதர் கோவில். தென் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற 14 சிவ தலங்களில் இதுவும் ஒன்று.

 சங்கு வடிவில் கோவில்

சங்கு வடிவில் கோவில்

உலகில் எங்கு கோவில் அமைக்கப்பட்டாலும், சதுரம் அல்லது செவ்வக வடிவில்தான் அமைக்கப்படுவது வழக்கம். சில கோவில்கள் வட்ட வடிவிலும் அமைக்கப்படுவதாக தெரிகிறது. ஆனால், உலகில் சங்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ள முதலும் இதுவரையில் கடைசி கோவிலும் இதுதான்.

 சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்

சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்

குற்றால நாதர் கோவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் அவரது பெயரான திருக்குற்றால நாதர் என்ற பெயரினால் அறியப்படுகிறது. சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் பல்வேறு கல்வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன. இந்த கோவிலானது ஆறுகள், மலைகள் மற்றும் பிரபலமான சிவமதுகை நீர்வீழ்ச்சியின் மத்தியில் அமைந்துள்ளது. கோவில் தேவஸ்தானத்தின் மூலம் இந்த கோவிலானது நிர்வகிக்கப்படுகிறது.

சித்திர சபா

சித்திர சபா

அகஸ்திய முனிவர் இந்த கோவிலில் வழிபாடு நடத்தினார் என்று சொல்லப்படுகிறது, எனவே இந்த கோவிலுக்கு இப்பெயர் ஏற்பட்டது. கோவிலுக்கு அருகில் ஒரு அறை உள்ளது. இந்த அறையானது சித்திர சபா என்று அழைக்கப்பபடுகிறது. புராண கதைகள், தெய்வங்கள் மற்றும் பல முக்கிய சமய நிகழ்வுகளின் சிற்பங்கள் இங்கு உள்ளன.

 எப்படி செல்வது

எப்படி செல்வது

தென்காசியிலிருந்து 7 கிமீ தொலைவில் அழகிய பாதையில் அமைந்துள்ளது இந்த கோவில். தென்காசியிலிருந்து நெடுஞ்சாலை எண் 40 வழியாக குற்றாலத்தை அடையலாம். இங்கு குற்றாலநாதர் கோவிலும், சித்ர சபையும் அமைந்துள்ளது.


All photos taken from courtrallanathar.tnhrce.in

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X