» »இமயமலை அடிவார ஏரிகளின் இந்த சிறப்பு உங்களுக்கு தெரியுமா?

இமயமலை அடிவார ஏரிகளின் இந்த சிறப்பு உங்களுக்கு தெரியுமா?

Written By:

ஏரி என்பது முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர் நிலை.. நான்கு புறமும் நிலம் இருந்தாலும் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு கடக்க சில கிமீ தூரம் பரந்து விரிந்திருக்கும் நீர் ஆதாரங்கள்தான் ஏரி என்று அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு கடல் போல அதிக அளவு நீரைக் கொண்டிருக்கும் இந்த ஏரிகள் கோடைக்காலங்களில் நல்ல சுற்றுலா அம்சமாக இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலும் ஏரிகள் காணப்படுகின்றன. ஏரிகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நன்னீர் ஏரி மற்றொன்று உப்பு நீர் ஏரி.. இடத்துக்கு தகுந்தார்போல் இதன் அளவு மாறிக்கொண்டே இருக்கும். அப்படி சுற்றுலாத் தளமான ஏரிகள் பட்டியலில் இந்திய ஏரிகள் சிறப்பானவை. இவைகளுக்கு ஒரு சுற்றுலா சென்று வருவோமா?

புல்லா டால்

புல்லா டால்

புல்லா டால், லாண்ஸ்டவுனின் குதூகலம் நிரம்பிய, முக்கியமன சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட, செயற்கையாக உருவாக்கப்பட்ட, அழகான ஏரியாகும். கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்கள், புல்லா டால், கட்டுமானத்தின் போது உதவியதால், இது அவர்களுக்காக, ஒதுக்கப்பட்டது. இந்த ஏரியின் பெயரான புல்லா என்பது ஒரு கார்வாலி வார்த்தையாகும். இதற்கு 'தம்பி' என்று பொருள். இந்த ஏரியில் பயணிகளுக்கான படகு சவாரி வசதிகள் உள்ளன. இந்த ஏரியில், சிறுவர் பூங்கா, மூங்கில் குடில்கள், மற்றும் அழகான நீரூற்றுகள் ஆகியன உள்ளன.

நுழைவு கட்டணம் - 50ரூ

திறக்கும் நேரம் - 10 மணி

அடைக்கும் நேரம் - 5 மணி

எப்படி செல்லலாம்

லேன்ஸ்டவுன் நகரத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். நடந்தே செல்லமுடியும்.


அருகிலுள்ள ரயில் நிலையம் - கோட்வாரா ரயில் நிலையம்

விமான நிலையம் - ஜாலி கிராண்ட் விமான நிலையம்

Priyambada Nath

 தேவ்ரியா தால்

தேவ்ரியா தால்

தேவ்ரியா தால் எனும் ஏரியின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த ரம்மியமான சுற்றுலாத்தலம் ருத்ரபிரயாக் நகரிலிருந்து 49 கி.மீ தூரத்தில் உள்ளது. பசுமையான வனப்பகுதியால் இந்த இடம் சூழப்பட்டிருக்கிறது.

இந்த ஏரியில் சௌகம்பா மலைச்சிகரங்கள் மற்றும் கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் நீலகண்ட மலைச்சிகரங்கள் ஆகியவற்றில் பிம்பங்கள் துல்லியமாக விழுந்து பார்வையாளர்களை பிரமிக்க வைக்கின்றன.

கடல் மட்டத்திலிருந்து 2438 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி சொப்டா-உக்கிநாத் சாலையிலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மேலும், பறவை வேடிக்கை, படகுச்சவாரி மற்றும் தூண்டில் மீன் பிடிப்பு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 10 மணி

அடைக்கும் நேரம் - 5 மணி

Gtsenthilnath

பீம்தால் ஏரி

பீம்தால் ஏரி

கடல் மட்டத்திற்கு மேலே 4500 அடி உயரத்தில் உள்ள பீம்தால் ஏரி, நைனிடாலை சுற்றியுள்ள மிக பெரிய இயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இது பாண்டவர்களில் ஒருவனான பீமனின் பெயரால் அழைக்கப்படுகின்றது.

இந்த ஏரி, நைனிடாலில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் சிறிய துடுப்பு படகுகள், மற்றும் படகுகள் உள்ளன. எனவே, சுற்றுலா பயணிகள் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம்.

இந்த ஏரி, பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்கு ஒரு இயற்கையான இருப்பிடமாக விளங்குவதால், இமயத்தை தாண்டி இடம் பெயறும் பல்வேறு பறவைகளான கருப்பு கழுகுகள்(black eagle), சுவர் கொடி பறவைகள்(wall creeper birds), பழுப்பு மீன் ஆந்தைகள்(tawny fish owls), சின்னான்(bulbuls), மற்றும் மரகத புறாக்கள்(emerald doves) ஆகியவற்றை தன்னுள் ஈர்கிறது.

கரையில் இருந்து 91 மீ தூரத்தில், ஏரியின் மையத்தில் ஒரு பெரிய தீவு உள்ளது. சுற்றுலா பயணிகள் படகு மூலம் தீவை அடைந்து, அங்குள்ள அக்வேரியத்தில் சீனா, மெக்ஸிக்கோ, மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பல அரிய மற்றும் அற்புதமான மீன்களை கண்டு களிக்கலாம். இந்த ஏரியை சுற்றி குமானி மலைகள் உள்ளன.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 9மணி

அடைக்கும் நேரம் - 5 மணி

Anonymous

நச்சிக்கேத்தா தால்

நச்சிக்கேத்தா தால்

உத்தர்காஷியிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நச்சிக்கேத்தா தால், ஒரு அழகிய ஏரியாகும். இவ்வேரி, ஓக், பைன், ரோடோடென்ட்ரான் போன்ற மரங்களால் சூழப்பட்டுள்ளதால் மேலும் அழகுற காட்சியளிக்கிறது. இந்த ஏரி, உத்தலாக் முனிவரின் மகனாகிய நச்சிகேத்தாவினால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள், உத்தர்காஷியிலிருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சௌரங்கி காலில் இருந்து சுமார் 3 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு, நச்சிக்கேத்தா தாலை அடையலாம். நச்சிக்கேத்தா தாலில் தங்கும் வசதிகள் கிடையாது; அதனால் பயணிகள் சௌரங்கி கால் அல்லது உத்தர்காஷியில் தான் தங்க வேண்டி இருக்கும்.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 9 மணி

அடைக்கும் நேரம் - 5 மணி

 நைனா லேக்

நைனா லேக்

நைனா லேக் எனும் இந்த ஏரி நைனித்தால் சுற்றுலாத்தலத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த ஏரியில் சுற்றுலாப்பயணிகள் சொகுசுப்படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம். சிவபெருமான் தனது மனைவியான சதியை கைலாச பர்வதத்தை நோக்கி தூக்கி சென்றபோது சதியின் இடது கண் இப்பகுதியில் விழுந்து இப்படி கண் வடிவத்தில் ஏரியாக மாறியதாக ஐதீகக்கதைகள் வழங்கி வருகின்றன. மேலும் மும்முனிவர் தீர்த்தம் அல்லது திரி-ரிஷி சரோவர் என்ற பெயரிலும் இந்த ஏரி அழைக்கப்படுகிறது. இந்த ஏரியானது பழமையான ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த புராணத்தின்படி ஆதி ரிஷிகளாகிய அத்ரி, புலஸ்த்யா மற்றும் புலஹா ஆகிய மூவரும் தங்களது யாத்திரையின்போது தாக சாந்தி செய்து கொள்ள நைனித்தால் பகுதியில் தங்கியதாகவும், இங்கு குளம் ஏது இல்லாததால் ஒரு குழியை தோண்டி தங்களுடன் எடுத்து வந்த மானஸரோவர் புனித தீர்த்தத்தை அதில் நிரப்பியதாகவும் அதுவே இந்த நைனி ஏரியாக மாறியது என்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 9 மணி

அடைக்கும் நேரம் - 5 மணி

Sanjoy Ghosh

முசூரி ஏரி

முசூரி ஏரி

நகர கூட்டமைப்பும், முசூரி டெஹ்ராடூன் வளர்ச்சிக் கழகமும் இணைந்து முசூரி ஏரியை அழகிய சுற்றுலா மையமாக சமீபத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.

முசூரி டெஹ்ராடூன் சாலையில் அமைந்திருக்கும் ஏரியில் பயணிகள் படகு சவாரி செய்து மகிழலாம். டூன் பள்ளத்தாக்கு மற்றும் அருகில் உள்ள அழகிய கிராமங்களையும் இங்கிருந்து காண முடிகிறது

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 10 மணி

அடைக்கும் நேரம் - 6 மணி

எப்படி செல்லலாம்

Rajeev kumar

செனாப் ஏரி

செனாப் ஏரி


செனாப் ஏரி, டங் என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரியாகும். சரியாக செப்பனிடப்படாத ஓர் பாதை வழியே நடந்து சென்று இவ்வேரியை அடையலாம்.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 10 மணி

அடைக்கும் நேரம் - 5 மணி

euttaranchal.com

நந்தி குந்த் ஏரி

நந்தி குந்த் ஏரி

அழகிய பசுமையான புல்வெளிகள் மற்றும் பனி மூடிய சிகரங்களின் நடுவே அமைந்துள்ள இடம் தான் நந்தி குந்த் ஏரியாகும். இந்து கடவுள் சிவபெருமானுக்காக அமைக்கப் பட்டிருக்கும் இந்த ஏரிதான், அவருடைய வாகனமான நந்தி நீர் அருந்தும் இடமாகும்.

இந்த கோவிலின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இக்கோவிலுக்கு அருகிலிருக்கும் துரப்பிடித்த வாள் ஒன்றும் உள்ளது. புராணங்களின் படி, மகாபாரதத்தில் வரும் அரச குடும்ப வீரர்களான பாண்டவர்களில் ஒருவருடைய வாள் இது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ஏரியில் சௌகாம்பா சிகரத்தின் கண்கவரும் காட்சியினையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும். கோடைகாலத்திலும் கூட, இந்த ஏரியின் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மேலும், மத்யமகேஸ்வரர் கங்கை என்னும் நதியும் இந்த ஏரியிலிருந்து தான் உற்பத்தியாகிறது.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 10 மணி

அடைக்கும் நேரம் - 6 மணி

சோரபாரி தால்

சோரபாரி தால்

சோரபாரி தால் எனும் இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3900 மீ உயரத்தில் சோரபாரி பாமக் பனிமலையின் முகப்பில் அமைந்திருக்கிறது. கேதார்நாத் மற்றும் கீர்த்தி ஸ்தம்ப சிகரங்களின் அடிவாரத்தில் உள்ள இந்த இடத்திலிருந்து பிரமிக்க வைக்கும் இமலைமலைகளின் எழிற்காட்சிகளை தரிசிக்கலாம். இந்த ஏரியில் மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டதால் காந்தி சரோவர் என்றும் இது அழைக்கப்படுகிறது. புராணிகங்களின்படி இந்த ஏரியில் மூழ்கி பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் சொர்க்கத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த ஏரிப்பகுதியை 3 கி.மீ தூரத்திற்கு மலையேற்றம் செய்து அடையலாம். கேதார்நாத் பகுதியிலுள்ள இரும்புப்பாலம் இந்த ஏரிப்பகுதிக்கான பாதையாக பயன்படுகிறது. காந்தி சரோவருக்கு செல்லும் பாதை பாதி தூரத்திற்கு நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ஏரிக்கு செல்லும் வழியில் ஒரு நீர்வீழ்ச்சியையும் பயணிகள் காணலாம். இந்த இடத்தின் பருவநிலை அடிக்கடி மாறும் இயல்புடையது என்பதால் காலை நேரத்திலேயே இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்து விட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 10 மணி

அடைக்கும் நேரம் - 6 மணி

ஆலி செயற்கை ஏரி

ஆலி செயற்கை ஏரி

கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான இடத்தில் ஆலி செயற்கை ஏரி அமைந்திருக்கிறது. குறைவான பனிப்பொழிவு இருக்கும் நேரங்களில், பனிச்சறுக்கு செய்ய வசதியை ஏற்படுத்தும் பொருட்டாகவே அரசாங்கம் இந்த செயற்கை ஏரியை ஆலியில் உருவாக்கியது. பனிச் சறுக்கு செய்யும் சரிவுகளையொட்டி இருக்கின்ற ஸ்னோகன்களின் வழியாக இந்த பாதைக்கு ஏரித்தண்ணீர் செலுத்தப்படுகிறது. சரியான பனிச்சறுக்கு பாதையை ஏற்படுத்தி, பனிச்சறுக்கு சீசனின் காலத்தை அதிகரிக்க இந்த ஏரி மிகவும் பயன்படுகிறது.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 8 மணி

அடைக்கும் நேரம் - 5 மணி

uttarakhand-tourism.com

 நௌகுசியாடல் ஏரி

நௌகுசியாடல் ஏரி

அழகிய நீர் நிலையான நௌகுசியாடல் ஏரி கடல் மட்டத்திலிருந்து 3996 அடி உயரத்தில் உள்ளது. நௌகுசியாடல் என்பதற்கு ஒன்பது மூளைகள் உள்ள ஏரி என்று அர்த்தமாகும். இந்த ஏரியின் ஒன்பது மூளைகளையும் ஒரே நேரத்தில் பார்ப்பவருக்கு நிர்வாணம் கிட்டும் என்ற நம்பிக்கையுண்டு. இந்த ஏரிக்கு அடியில் ஊற்று இருப்பதால், இந்த ஏரியில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். இந்த இடத்தில் பல வகையான பறவைகள் இனம் இருப்பதால் இங்கு வருபவர்கள் அதனை கண்டு ரசிக்கலாம். மேலும் ஏரியில் படகு சவாரி, நீச்சல் மற்றும் மீன் பிடித்தல் போன்றவைகளில் ஈடுபடலாம். இது போக மலை ஏறுதல் மற்றும் பாராகிளைடிங் போன்ற தீர விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இந்த ஏரியை சுற்றி நடை பயணம் மேற்கொண்டால் சுற்றுலாப் பயணிகளுக்கு மன நிம்மதியை அளிக்கும்.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 10 மணி

அடைக்கும் நேரம் - 6 மணி

Dr Satendra

ராணி ஜீல்

ராணி ஜீல்

ராணி ஜீல் எனப்படும் இந்த பிரம்மாண்டமான ஏரி மழைநீரை சேமிக்கும் நோக்கத்துடன் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கேந்திரா வித்யாலயா பகுதி மற்றும் கனோஸா கான்வெண்ட் பள்ளி ஆகியவற்றுக்கு இடையே இயற்கையான எழும்பியிருக்கும் இரண்டு மலைப்பீடப்பகுதிகளுக்கு நடுவே இந்த ஏரி உருவாக்கப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏரியில் பயணிகள் படகுச்சவாரி செய்து மகிழலாம்.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 9 மணி

அடைக்கும் நேரம் - 5 மணி

Mrneutrino

ஸரியா தால்

ஸரியா தால்

ஸரியா தால் எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலம் நைனித்தால் நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு ஒரு சிறிய ஏரி மற்றும் ஒரு நீரூற்று ஆகியவை உள்ளன.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 10 மணி

அடைக்கும் நேரம் - 6 மணி

எப்படி செல்லலாம்

Incorelabs

குர்பதால்

குர்பதால்

குர்பதால் எனும் இந்த இடம் தூண்டில் மீன் பிடிப்பு பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடமாகும். இது நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த அழகிய கிராமமானது கடல் மட்டத்திலிருந்து 1635மீ உயரத்தில் அமைந்துள்ளது. இனிமையான பருவநிலை மற்றும் மனம் மயக்கும் ஏரி ஆகியவற்றுக்காக இந்த கிராமம் புகழ்பெற்றுள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிக்கும் பொழுதுபோக்கிலும் பயணிகள் ஈடுபடலாம். இரும்புப்பொருட்கள் தயாரிப்பிற்காக ஒரு காலத்தில் பிரசித்தமாக அறியப்பட்ட குர்பதால் இன்று பசுமையான காய்கறிப்பண்ணைகளுக்கு பெயர் பெற்று அறியப்படுகிறது.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 9 மணி

அடைக்கும் நேரம் - 5 மணி

euttaranchal.com

ஹேம்குந்த் ஏரி

ஹேம்குந்த் ஏரி

ஹேம்குந்த் ஏரி ஒரு புனிதமான ஏரியாக கருதப்படுகிறது. இந்த ஏரி வருடத்தில் எட்டு மாதங்கள் பனியில் உறைந்து போய் இருக்கும். ஹேம்குந்த் குருத்வாராவின் மிக அருகாமையில் உள்ள இந்த ஏரியை சுற்றி பனி படர்ந்த மலைகளை காண முடியும். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் இந்த ஏரிக்கரையில் தியானம் செய்தார் என்று நம்பப்படுகிறது. அவரைத் தவிர மெதசா போன்ற மற்ற போதகர்களும் இங்கு தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது.

நுழைவுக் கட்டணம் இல்லை

திறக்கும் நேரம் - 9 மணி

அடைக்கும் நேரம் - 6 மணி

எப்படி செல்லலாம்

Amareshwara Sainadh

Read more about: travel summer lake uttarakhand

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்