Search
  • Follow NativePlanet
Share
» » இணையத்தை கலக்கி வரும் அயோத்தி ராமர் கோயில் புகைப்படங்கள் - 2024 ஜனவரி முதல் தரிசனம்!

இணையத்தை கலக்கி வரும் அயோத்தி ராமர் கோயில் புகைப்படங்கள் - 2024 ஜனவரி முதல் தரிசனம்!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது தெரியுமா மக்களே! கோயில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 2.7 ஏக்கர் நிலத்தில் மிகவும் பிரமாண்டமாக ராமர் கோவில் எழுப்பப்பட்டு வருகிறது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் சமீபத்திய புகைப்படங்களின் தொடர் இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படங்களை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச்செயலாளர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கோவில் பணிகள் 2024ல் முடிவடையும் நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்தப் புகைப்படங்களை பார்த்தால் அசந்து போவீர்கள்!

Ayodhya ram mandir, Uttar Pradesh

2024 ஜனவரி முதல் ராமர் தரிசனம்

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ், ராம் லல்லாவின் மூர்த்தி அடுத்த ஆண்டு ஜனவரியில் கோவிலில் நிறுவப்படும் என்று கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே 70 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2024 ஜனவரி மூன்றாவது வாரத்தில், ராமர் சிலை நிறுவப்பட்டு, அன்றைய தினத்திலிருந்தே பக்தர்கள் தரிசனம் செய்யவும் பிரார்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.

Ayodhya ram mandir

அசுர வேகத்தில் நடந்து வரும் பணிகள்

சமீபத்தில், 17,000 கிரானைட் கற்கள் பரத்பூரின் பன்சி பஹத்பூர் பகுதியில் இருந்து பீடம் கட்டுமானத்திற்காக வந்தன. ராஜஸ்தானில் இருந்து தினமும் 80-100 கற்கள் அயோத்தியை அடைந்து கட்டிட வேலைகளை விரைவுபடுத்துகின்றன. ஒவ்வொரு கல்லின் எடை தோராயமாக 2.50 டன்கள். கோயில் வளாகத்தின் கண்காணிப்புக்கு நவீன பாதுகாப்பு கருவிகளை அறக்கட்டளை பயன்படுத்துகிறது.

Ayodhya ram mandir

இணையத்தில் வைரலாக ராமர் கோயில் புகைப்படங்கள்

முன்னதாக, கோயில் கட்டும் தளத்தின் இரண்டு புகைப்படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டன, இது தளத்தில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதைக் காட்டுகிறது. அதன் தோற்றத்தில், இந்த கோவில் நாட்டின் மதச் சுற்றுக்கு மற்றொரு கூடுதலாக இருக்கும். இது நிறைவடையும் நாளை பக்தர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பகவான் ராமர் பிறந்த இடத்தில், மீண்டும் அவர் சிலையாக நமக்கு காட்சி தருவதை பார்க்க நமக்கு ஆர்வம் இருக்காதா என்ன?

Ayodhya ram mandir

ராமர் கோயிலைப் பற்றி நாம் அறிந்திராத விஷயங்கள்

1. ராமர் கோயில் காட்டப்படும் இடம் சாகேத் என்று அழைக்கப்படும் ராமரின் பிறந்த இடம், இது இந்தியாவின் பண்டைய நகரம் மற்றும் இந்துக்களின் 7 புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

2. சடங்குகளுக்காக 2000 க்கும் மேற்பட்ட புனிதத் தலங்களில் இருந்து மண் மற்றும் 100 க்கும் மேற்பட்ட ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

3. இந்து நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு கோயில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

4. வலிமை மற்றும் நீண்ட ஆயுளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானில் உள்ள பன்சி மலைகளில் இருந்து வரும் கற்கள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

5. பிரதான அமைப்பைச் சுற்றி 4 சிறிய கோயில்கள் எழுப்படவுள்ளன.

6. அஸ்திவாரத்தை அமைப்பதற்காக 'ஸ்ரீ ராம்' என்று பொறிக்கப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

7. 3 தளங்கள், 1 ஷிகர் மற்றும் 5 குவிமாடம் வடிவ மண்டபங்களுடன் மிகவும் பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டு வருகிறது.

8. முதலில் உயரம் 141 அடியாக நிர்ணயிக்கப்பட்டு பின்னர் 161 அடியாக உயரம் அதிகரிக்கப்பட்டது.

9. ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 29 ஆண்டுகளுக்குப் பிறகு 2020 இல் அயோத்தி திரும்பினார்.

10. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் வாரம் முதல் பொதுமக்கள் ஸ்ரீ ராம பிரானை தரிசிக்க இக்கோவிலுக்கு வருகை தரலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+