Search
  • Follow NativePlanet
Share
» »அந்தமான், மாலத்தீவை ஓரம் போக சொல்லுங்க – தமிழ்நாட்டின் இந்த தீவுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!

அந்தமான், மாலத்தீவை ஓரம் போக சொல்லுங்க – தமிழ்நாட்டின் இந்த தீவுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!

தீவுகள், பவளப்பாறைகள், வண்ண வண்ண மீன்கள், படகு சவாரி போன்ற கடல் சார்ந்த சுற்றுலா அம்சங்களை அனுபவிக்க மாலத்தீவு, தாய்லாந்து, இந்தோனேசியா, குறைந்தபட்சம் அந்தமான் செல்ல வேண்டும் என்று பலர் யோசிக்கின்றனர். ஆனால் இந்த அனைத்து அம்சங்களும் தமிழ்நாட்டின் உள்ள ஒரு மிக அழகிய தீவில் கிடைக்கிறது தெரியுமா? இது மிகவும் பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் இது அதிகம் பிரபலமடையாமல் இருக்கிறது. இந்த இடத்திற்கு எப்படி செல்வது? ஏன் செல்ல வேண்டும் என்று இங்கே பார்ப்போம்!

அழகிய சுற்றுலாத் தலங்களால் நிரம்பியிருக்கும் தமிழகம்

தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலங்களுக்கு பஞ்சமே இல்லை. மலைப்பிரதேசங்கள் முதல் கோட்டைகள் வரை, கோவில்கள் முதல் அழகிய நகரங்கள் வரை அனைத்துமே இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அழகிய தீவுகளும் இருக்கின்றன என்று நம்மில் சிலருக்கு தான் தெரியும். ஆம் பத்துக்கும் மேற்பட்ட தீவுகள் இருந்தாலும், ராமேஸ்வரத்தின் குருசடை தீவு தான் முதன்மையான அழகுடன் முதல் இடத்தில் உள்ளது. அழகிய சுத்தமான தெளிவான நீர், பவளப்பாறைகள், அரிய கடல் உயிரினங்கள், படகு சவாரி என இந்த இடம் ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்றது.

kurusadaiisland

ராமேஸ்வரத்திற்குள் ஒளிந்திருக்கும் அழகிய குருசடை தீவு

ராமேஸ்வரத்திற்கு உள்ளே ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம் போல இந்த இடம் தனித்துவமான அழகுடன் ஜொலிக்கிறது. ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகி வருகிறது. பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இதில் பாம்பன் குந்துக்காலுக்கு வெகு அருகே உள்ள குருசடைதீவு, அனைத்து தீவுகளுக்குமான ஒரு மணிமகுடம் போல காட்சியளிக்கிறது.

ராமேஸ்வரம் பயணத்தில் கட்டாயம் குருசடை இருக்க வேண்டும்

செழுமையான பல்லுயிர் பெருக்கம் நிறைந்து சதுப்புநிலங்களால் சூழப்பட்டுள்ள இந்த அழகிய தீவு ஒரு நாள் பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடமாகும். வனத்துறையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகால் மற்றும் சின்னபாலம் பகுதி மக்களும் ஒன்றிணைந்து குருசடை தீவுக்கு படகு சேவையை இயக்குகின்றனர். அதனால் நீங்கள் ராமேஸ்வரம் செல்லும் போது கட்டாயம் இந்த அழகிய இடத்திற்கு பயணிக்க மறக்காதீர்கள்.

kurusadaiisland1

நீங்கள் மறக்க முடியாத படகு சவாரி

கடந்த மார்ச் 11, 2022 முதல் குருசடை தீவிற்கு சூழல் சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டது. வனத்துறையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகால் மற்றும் சின்னபாலம் பகுதி மக்களும் ஒன்றிணைந்து குருசடை தீவுக்கு படகு சேவையை இயக்குகின்றனர். படகில் பயணிக்கும்போது கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறை, கடல் குதிரை, துள்ளிக் குதிக்கும் டால்பின்கள், மீன்கள் மற்றும் இதர கடல்சார் உயிரினங்கள், தாவரங்கள் போன்றவற்றைக் கண்டு ரசிக்கலாம். மேலும், தீவில் உள்ள இயற்கை அழகுக் காட்சிகள் மற்றும் வலசை வரும் பறவைகளை சுற்றுலாப் பயணிகள் படம் பிடிக்கலாம்.

படகு சவாரிக்கான கட்டணம்

குருசடை தீவிற்கான படகு சவாரி தினந்தோறும் காலை 7 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இயக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பிற்காக லைப் ஜாக்கெட்டும், பயிற்சி பெற்ற லைஃப் கார்டு ஒருவரும் படகில் பணியமர்த்தப் பட்டுள்ளார். படகு சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

kurusadaiisland

நேரம் போவதே தெரியாது

தீவை அடைந்தவுடன் பயணிகள் அழகிய கடற்கரையும், பவளப்பாறைகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் கண்டு மகிழலாம். விவேகானந்தர் நினைவிடதிற்க்கு அருகில் உள்ள கடல் விளக்க மையத்தையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். இத்தீவில் உள்ள அழகிய கடற்கரை, பவள பாறைகள் மற்றும் படகில் செல்லும் போது துள்ளி குதித்து விளையாடும் டால்பின்களை கண்டு துள்ளி குதிக்கலாம். வெறுமனே தீவில் அமர்ந்துக் கொண்டு அதன் அமைதியான அழகைக் கண்டு மெய் சிலிர்க்கலாம்.

நீங்கள் எப்போது இந்த அழகிய இடத்திற்கு செல்லப் போகிறீர்கள்?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+