» »இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்ற அந்தமாறியான இடங்கள் எங்கே உள்ளது தெரியுமா ?

இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்ற அந்தமாறியான இடங்கள் எங்கே உள்ளது தெரியுமா ?

Written By:

நம் வாழ்நாளில் பல திட்டமிடக்குப் பின்பும், சரியான துணையுடனும் நாம் செல்லும ஒவ்வொரு சுற்றுலாவும் இன்பச் சுற்றுலாத் தான். ஹனிமூன் பயணமோ, நண்பர்களுடன் குதூகலமான ட்ரிப்போ, குடும்பத்துடன் விடுமுறைச் சுற்றுலாவோ நமக்கும நம் உடன் வருவோருக்கும் பிடித்தமான தலத்திற்கு அழத்துச் செல்வது நம் கடமையென்றே கூறலாம். செல்லும் இடம் கொஞ்சம் நிறைவற்றதாக இருந்தாலும், ஒட்டுமோத்தமுமாக சுற்றுலாவை வெறுக்க வைத்துவிடும். இந்தமாதிரியான பிரச்சனைகளைத் தவிர்த்து இன்பச் சுற்றுலாவிற்று ஏற்ற தலங்கள் இந்தியாவுல எங்ன இருக்கு தெரியுமா ?. உத்ரகாண்டிற்கு பயணம் சென்றீர்கள் என்றால் இத்தலங்களுக்கு எல்லாம் சென்று வாருங்கள். இவை அனைத்துமே உங்களது பயணத்தை இன்பமானதாக்கும்.

லேக் மிஸ்ட்

லேக் மிஸ்ட்


முசூரியில் இருந்து கெம்பப்டி சாலையில் அமைந்துள்ள லேக் மிஸ்ட் சிறந்த சுற்றுலாவிற்கான தலமாக இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. இயற்கை சூழ்நிலையை ரசித்தபடி இங்கு படகு சவாரி செய்து மகிழலாம். கெம்பப்டி நதிக்கு அருகில் ஏராளமான சிறிய நீர்வீழ்ச்சிகள் விழுந்து நதியில் சேரும் காட்சி, காதலியின் கைகோர்த்தபடி காண ஒட்டுமோத்தமுமாக மனதை சொக்கிவிடும். இங்குள்ள உணவகங்களிலும், தங்குமிடங்களும் உங்களை மேலும் குசிப்படுத்திவிடும்.

Rajeev kumar

ஜாரிபாணி நீர்வீழ்ச்சி

ஜாரிபாணி நீர்வீழ்ச்சி


முசிரியில் உள்ள மற்றுமொரு சுற்றுலாத் தலம் ஜாரிபாணி நீர்வீழ்ச்சி. பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்கும் ஜாரிபாணி நீர்வீழ்ச்சி மூசூரியில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அழகிய நீர்வீழ்ச்சிக்கு அருகில் செயிண்ட் ஜார்ஜ், ஓக் க்ரோவ் மற்றும் வைன் பெர்க் போன்ற பிரபலமான தங்குமிடங்கள் உள்ளன. மிக முக்கியமான சுற்றுலா தளமாக மட்டுமல்லாது பலவகை பூக்கள், செடிகள், புதர்கள் மற்றும் மூலிகைகள் சூழ அமைந்துள்ள இவ்விடத்தில் இருந்து பிரம்மாண்டமான ஷிவாலிக் மலைத் தொடர்களின் அழகைக் காணலாம். நீர்வீழ்ச்சியின் ஒருபுறம் அடுக்குத் தோட்டங்களும், மறுபுறம் அழகிய டூன் பள்ளத்தாக்கும் அமைந்துள்ளன.

Mohithdotnet

பட்டா நீர்வீழ்ச்சி

பட்டா நீர்வீழ்ச்சி


முசூரியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் முசூரியில் இருந்து டெஹ்ராடூன் சாலையில் உள்ள பட்டா கிராமத்தில் அமைந்துள்ளது பட்டா நீர்வீழ்ச்சி. முசூரியில் இருந்து வாடகை காரின் மூலம் இவ்விடத்தை எளிதில் அடையலாம். பட்டா கிராமத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் நடைபயணம் செய்தாலே சுலபமாக அடைய முடிந்த இந்நீர்வீழ்ச்சி நீர் விளையாட்டுகளுக்கு சிறந்த இடமாக திகழ்கிறது.

VinothChandar

கார்பெட் நீர்வீழ்ச்சி

கார்பெட் நீர்வீழ்ச்சி


60 அடி உயரத்திலிருந்து வெண்மை நிறத்தில் கொட்டிக் கொண்டிருக்கும் கார்பெட் நீர்வீழ்ச்சி ராம்நகரில் இருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமாகும். முகாமிடுதல், இன்பசுற்றுலா மற்றும் பறவைகளை கண்டு ரசிக்க மிகவும் ஏற்ற இடமாக இது உள்ளது. இன்பச் சுற்றுலா வருபவர்களுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் வனத்துறையினர் செய்து கொடுக்கின்றனர். இதனருகே உள்ள உள்ள ராம்நகர் வனச்சரகத்தைச் சேர்ந்த இடமாக இந்த நீர்வீழ்ச்சி விளங்குகிறது. பசுமையான நில அமைப்பு, நீர்வீழ்ச்சியின் ஆரவாரம், பறவைகளின் கீச்சிடும் குரல்கள் மற்றும் அமைதியான சுற்றுச்சூழல் ஆகியவற்றை வழங்கும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கையின் மீதான தொடர்புகளை விரிவு படுத்துவதாக இருக்கும். இந்த கண்கவரும் இடத்தை பார்வையிடுவதுடன், அருகிலுள்ள இயற்கை நடைபயண அருங்காட்சியகத்திற்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.

bobyfume

கலஹார் அணைக்கட்டு

கலஹார் அணைக்கட்டு


கார்பெட் தேசியப் பூங்காவில் அமைந்துள்ள தேசிய பூங்காவிற்கு தென்மேற்கில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் கலஹார் அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டிலுள்ள நீர்மின் சக்தி நிலையம் தேவையான மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது. இது மட்டுமல்லாமல், பறவைகளை கவனிப்பதற்கும் புகழ் பெற்ற இடமாக இந்த பூங்கா விளங்குகிறது. குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இடம் பெயரும் வாட்டர்பௌல் பறவையை இங்கே காணலாம்.

Arvind Iyer

பாலு டேம்

பாலு டேம்


பாலு டேம் எனப்படும் இந்த சிறிய ஏரித்தேக்கம் சௌபாத்தியா பழத் தோட்டத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் ராணிக்கேத் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரிப்பகுதியிலிருந்து பனிமூடிய இமயமலைச் சிகரங்களை பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம். ஏரிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் அழகிய தோட்டப்பூங்காக்களில் ஓய்வெடுத்தபடி சுற்றிலும் விரிந்திருக்கும் மலையழகை கண்களால் பருக முடிவது இந்த தலத்தில் விசேஷ அம்சம்.

Pulkit Tyagi

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்