Search
  • Follow NativePlanet
Share
» »நம்ம நாட்டுல இப்படியெல்லாமா விழா இருக்கு..! ஜூனை விழாக்களுடன் கொண்டாடுவோம்!

நம்ம நாட்டுல இப்படியெல்லாமா விழா இருக்கு..! ஜூனை விழாக்களுடன் கொண்டாடுவோம்!

நம் நாட்டில் சமவெளிப் பகுதிகளில் உயிரையே உறிஞ்சும் வெப்பத்தில் இருந்து தப்பித்து குளிர்ந்த, மலைப் பிரதேசங்களை நோக்கி ஓடிவிட பயண ஆர்வலர்களான நாம் தங்கள் பைகளை தயாராக்கிக் கொண்டு இருக்கிறோம். தற்சமயம், அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையையும் அடுத்து வரும் ஜூன் மாதத்தில் எதிர்பார்க்க முடியாது. அந்த 30 நாட்களில் எங்கே செல்வது? எந்த சுற்றுலாத் தலம் கூட்ட நெரிசலில் இருந்து விலகி, முழு ரசணையும் நமக்கு வழங்கும் என்ற நீண்ட தேடுதலுக்குப் பிறகு நம் கண்ணில் பட்டது, கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் நிறைந்த சில சுற்றுலாத் தலங்கள். ஜூன் மாதம் முழுக்க பல்வேறு வகைகளான, பாரம்பரியமான வழிகளில் புதுவித மாற்றங்களுடன் நம் நாட்களைக் கொண்டாட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்களை நோக்கி சுற்றுலா செல்வோம். சரி, வெயிலில் இருந்து தப்பித்து திருவிழா செல்வதா ? என்னங்க இது புதுசா இருக்கே என்றுதானே சிந்திக்கிறீர்கள். ஆமாங்க, ஜூன் மாதத்தில் நாம செல்லப் போற திருவிழா நடைபெற இடமேல்லாம் குளுகுளு காலநிலைகொண்ட, பசுமை நிறைந்த மலைப் பகுதிகள் தான். வாங்க, அது எங்க, என்ன திருவிழான்னு பார்க்கலாம்.

சிந்து தர்ஷன் விழா

சிந்து தர்ஷன் விழா

சிந்து நதிக்கரையோரம் நடைபெறும் சிந்து தர்ஷன் விழா ஜூன் உன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை நடைபெறும். லெஹ் நகரத்தில் சிந்து நதிக்கரையில் கொண்டாடப்படும் இந்த திருவிழா இந்தியாவின் பல்வேறு கலாச்சார பாரம்பரியங்களை புகழ்ந்து காட்டுகிறது. நம் நாட்டின் பிரதான ஈர்ப்பானது, நாட்டின் பல்வேறு நீர்த்தேக்கங்களிலிருந்து சிந்து நதியின் நீரோட்டத்தில் வரையப்பட்ட மண் பாத்திரங்களை மூழ்கடிப்பதுடன், இப்பகுதியில் பண்பாடுகளின் கலவையாகவும் இத்திருவிழா இருக்கும். ஒரு பெரும் வரவேற்பு விழா, பங்கேற்பாளர்களை முழுவதுமாக மூழ்கடித்து விடும். அதன்பிறகு உள்ளூர் நாட்டுப்புற குழுவின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இசையில் மகிழ்ந்துகொண்டே பழங்கால உணவுகளையும் ரசிக்க சிந்து தர்ஷன் விழா சிறந்த சுற்றுலா தான்.

anurag agnihotri

தர்மசாலா திரைப்பட விழா

தர்மசாலா திரைப்பட விழா

படைப்பாற்றால் மற்றும் திரைப்படங்களை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தர்மசாலாவில் திரைப்பட விழா நடைபெறுகிறது. வரும் ஜூன் 11 முதல் 13ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் இருந்து வெப்ப வேட்டையில் இருந்து தப்பித்து வருபவர்கள் அடைக்கலம் அடைவர். தர்மசாலா திரைப்பட திருவிழா கலையில் ஆர்வமுள்ள எவரையும் வரவேற்கும். இந்த 3 நாள் திரைப்பட விழாவானது தீவிரமான சுயாதீனமான திரைப்படங்களின் கலவையாகும். புதிய முயற்சி மற்றும் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த வியக்கும் வகையிலான திரைப்படங்களை படைத்தோறுக்கு பராட்டுக்களை வழங்கும் இந்த விழா பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் இருக்கும்.

Prashant Patel

சாகா தேவா

சாகா தேவா

சிக்கிமில் உள்ள கேங்டாக்கில் கஞ்சன்ஜங்காவின் அமைதியான மலைப் பள்ளத்தாக்கில் கொண்டாடப்படும் மஹாயான பௌத்தர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று சாகாதேவா. ஜூன் 15ம் தேதி முதல் புத்தரின் வாழ்க்கையின் மிக முக்கியமான மூன்று நிகழ்வுகள் (பிறப்பு முதல் இறப்பு) ஆகியவை ஒரு முழுமையான அரங்கிற்கு மத்தியில் கொண்டாடப்படுவதால் மாநிலத்தின் வேறுபட்ட அமைதியான தலைநகரமாக இது திகழ்கிறது. மேலும், ஆன்மீகம் நிறைந்த இசை காற்றில் நிறைந்து ஆழ்மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். இப்பகுதியின் குளிர்ந்த காற்றும், மேகக் காலடியில் உரசும் மேகக் கூட்டங்களும் சிறந்த சுற்றுலாவாகவும் சிக்கிம் இருக்கும்.

Premaram67

சிம்லா கோடை விழா

சிம்லா கோடை விழா

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கோடையை வரவேற்கும் விதமாக நடைபெறும் இந்த விழா சிம்லாவில் பிரசிதிபெற்றதாகும். ஜூன் முதல் வாரத்தில் ஏலம் விடப்படும் நிகழ்ச்சியில் துவங்கி, நாடு முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாவாசிகளைக் கவரும் ஆடல் பாடலுடன் கொண்டாடப்படுகிறது. சிம்லாவில் ரிட்ஜ் சாலை முழுவதுமே நீள நிறங்களால் அலங்கரிக்கப்படுவதுடன், நம்மை ஈர்க்கும் வகையிலான பேஷன் ஷோக்கள், மலர் கண்காட்சிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு மற்றும் பல்வேறு போட்டிகள் இந்த விழாவின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுகின்றன. இந்த விழாவில் கிராமிய கலாசாரத்தை காண்பதற்கு இதயப்பூர்வமான அர்ப்பணிப்பு வேண்டும்.

Gryffindor

ஹெமிஸ் விழா

ஹெமிஸ் விழா

ஜம்மு காஷ்மிரில் உள்ள பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமான லடாக்கில் ஹெமிஸ் விழா ஜூன் 26 மற்றும் 27ம் தேதியில் நடைபெறும். லடாக்கின் ஒட்டுமொத்த அழகும் குவித்து வைத்ததைப் போல காணப்படும் இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டவரும் கூட பங்கேற்பது வழக்கம். லடாக் பகுதியில் உள்ள பௌத்த மடாலயம் இந்த விழாவின் மையப்பகுதியாகும். உள்ளூர் கலைஞர்கர், பழங்கால நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவர். ஆன்மீக இசை மற்றும் ஆன்மீகத்தின் மீதான கலையுணர்வு மிக்கவர்களுக்கு இவ்விழா வரம் தான். லடாக்கின் கால நிலையும், இத்திருவிழாவும் நிச்சயம் உங்களது மனதில் ஒருவித உண்ணத மாற்றத்தை ஏற்படுத்தும்.

Bhavani

சாவ் ஜோவோ திருவிழா

சாவ் ஜோவோ திருவிழா

இந்த கோடை காலத்தை உங்களது காதலியுடன் அல்லது காதலனுடன் ஜில்லென்ற சீதோஷனத்தில் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டுமா உடனே கோவாவில் நடைபெறும் சாவோ ஜோவோவின் விருந்துக்கு தயாராகுங்கள். கோவாவில் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த விழாவில் உள்ளூர் மதுபானங்களைக் குடித்துவிட்டு தங்களது மனைவியை ஈர்க்கும் வகையில், மலர்களைச் சூழ்ந்து ஆடும் இந்நிகழ்ச்சி பார்ப்போரை சொக்கவைக்கும். சுவாரஸ்யமாக, விசித்திரமாக கொண்டாடப்படும் இந்த விழா நேரத்தில் புதுப் புது கடலோர உணவுகளையும் ருசிக்க முடியும். வருங்கால ஜோடியாக நீங்கள் இருந்தால் இந்த ஜூன் மாதமே உங்களது துணையை ஜூன் 24ம் தேதி நடைபெறும் இந்த விழாவிற்கு அழைத்துச் செல்லுங்கள்.

Skip

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more