» »குஜராத் மாநிலத்தின் காடுகளுக்கு ஒரு கலகல பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 14

குஜராத் மாநிலத்தின் காடுகளுக்கு ஒரு கலகல பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 14

Written By: Udhaya

கன்னிமை கெடாத தூய்மையுடன் ஒளிரும் அரபிக்கடல் கடற்கரைகள் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடர்களின் கம்பீரமான சரிவுகள், ஆரவல்லி மற்றும் சத்புரா மலைத்தொடர்களின் எழிற்தோற்றங்கள் மற்றும் வித்தியாசமான நில அமைப்பை கொண்டு காட்சியளிக்கும் கட்ச் ரான் வளைகுடாப்பகுதி ஆகியவை குஜராத் மாநிலத்தை ஒரு சுவாரசியமான சுற்றுலா பூமியாக அடையாளப்படுத்துகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய இயற்கைப்பூங்காக்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களில் 40 வகைகளுக்கும் மேற்பட்ட விலங்கினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அரிய வகை ஆசிய சிங்கம், காட்டுக்கழுதை, கருப்புமான் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. கிர் தேசிய பூங்கா, வன்ஸ்தா தேசிய பூங்கா, வெராவதார் பிளாக்பக் தேசிய பூங்கா, நாராயன் சரோவர் காட்டுயிர் சரணாலயம், தொல் ஏரி பறவைகள் சரணாலயம், கட்ச் காட்டு மயில் சரணாலயம் போன்றவை இந்த மாநிலத்திலுள்ள முக்கியமான காட்டுயிர் இயற்கைப்பூங்காக்களாகும்.

ராஜஸ்தான் காடுகளுக்குள் ஒரு கலாச்சார சுற்றுலா போகலாம்! #காட்டுயிர்வாழ்க்கை 13

 கிர் காடுகள்

கிர் காடுகள்

கிர்னார் எனும் காட்டு பகுதிக்கு அருகில் இருக்கிறது இந்த கிர் தேசிய பூங்கா. இந்த கிர்னார் மலைக்கு செல்லும் போது வழியில் சந்திப்பாக கரி காட்டினையும் நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்த தேசிய பூங்கா பாதுகாக்கப்பட்ட காடாகவும் வன விலங்கின் சரணாலயமாகவும் விளங்குகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட குறைந்து வரும் ஆசிய சிங்கங்களை இங்கே மட்டும் தான் காணலாம். அரிய வகை விலங்கினம் இங்கே பாதுகாக்கப்பட்டு வருவதால் ஆசியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

Kailash kumbhkar

 நதிகள்

நதிகள்

ஹிரன், ஷெட்ருஞ்சி, டடர்டி, ஷின்கோடா, மச்சுன்றி, கோதாவரி மற்றும் ரவல் ஆகிய ஏழு நதிகள் இந்த காட்டில் ஓடுவதால், இதன் வளத்திற்கும் குறை இல்லை. இங்கே ஆசிய சிங்கங்கள், காட்டுப் பூனைகள், இந்திய சிறுத்தை புலிகள், கரடிகள், வரிக் கழுதைப் புலிகள், இந்திய நல்ல பாம்புகள், நரிகள், புனுகுகள், இந்திய கீரிப்பிள்ளைகள் மற்றும் பாலைவன பூனைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். மானிட்டர் பல்லிகள், மார்ஷ் முதலைகள், இந்திய ஸ்டார் ஆமைகள் போன்ற அறிய வகை ஊர்வனதும் இங்கே உள்ளன.

A. J. T. Johnsingh,

தொல் ஏரி பறவைகள் சரணாலயம்

தொல் ஏரி பறவைகள் சரணாலயம்

அஹமதாபாத் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் இந்த தொல் ஏரி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள 7 ச.கி.மீ பரப்பளவு 1988ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு புகலிட பறவைகள் ஏராளமாக வருகை தருகின்றன. கொக்குகள், நாரைகள், நீர் வாத்துகள், கரண்டி வாயன், செந்நாரை, விசிலடிச்சான், பெருங்கொக்கு, வெண்கொக்கு போன்ற 100 வகையான பறவையினங்கள் இங்கு காணப்படுகின்றன. சிவப்பு கழுத்தும் நீண்ட கால்களையும் கொண்ட இந்திய சாரஸ் கொக்கு எனும் பறவையினம் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.
Emmanuel DYAN

ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயம்

ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயம்

தன்பாரி ஈகோ கேம்ப்சைட் எனும் இந்த கூடார வசிப்பு ஸ்தலம் ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பலவகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் நிறைந்துள்ளன. இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும் காட்டுப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்டு இயற்கைச்சூழல் பற்றி தெரிந்து கொள்ள இந்த ஈகோ கேம்ப்சைட் உதவுகிறது. வனச்சுற்றுலாவுக்கான முன் தயாரிப்பு பயிற்சி, சமையல் கூடம் மற்றும் உணவுக்கூடம், தங்கும் அறைக்குடில்கள் போன்ற வசதிகள் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

www.gujarattourism.com

கம்பாலிடா குகைகள்

கம்பாலிடா குகைகள்

நம் நாட்டிலுள்ள வேறு பல குகைகளைப் போலவே இந்த குகைகளும் ஒரு கட்டிடக்கலை அதிசயமாகவே உள்ளன. ராஜ்கோட்டில் உள்ள கோண்டல் பகுதிக்கு அருகில் உள்ள இந்த மூன்று குகைளில், மத்தியில் உள்ள குகைளில் 'சைத்யா' என்ற ஸ்தூபியும் உள்ளது. சுண்ணாம்புப் பாறைகளில் குடையப்பட்டுள்ள இந்த குகைகள் கி.பி.4 அல்லது 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாகும்.

Kaushik Patel .

போர்பந்தர் பறவைகள் சரணாலயம்

போர்பந்தர் பறவைகள் சரணாலயம்


வழக்கமான சரணாலயங்களைப் போலல்லாமல், போர்பந்தர் பறவைகள் சரணாலயம் இயற்கையோடு இயைந்த சூழலில் பறவைகள் வாழும் ஒரு அற்புதமான இடமாகத் திகழ்கிறது. அழகிய பசுமையான மரங்கள் மற்றும் செடிகளால் சூழப்பட்ட ஒரு நீர்நிலையாகக் காணப்படுகிறது. சாம்பல் நிற நாரைகள், வாலுடைய நீர்ப்பறவைகள், கரண்டிவாயன்கள், வாத்துகள், பெண்வாத்துகள், கிளுவை வாத்துகள், இலைக்கோழிகள், அரிவாள்மூக்கன்கள், பெருநாரைகள், பலவகை புள்ளினங்களையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது இந்த சரணாலயம்.
Emmanuel DYAN

 கப்பார் மலை

கப்பார் மலை

கப்பார் மலை குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ல அம்பாஜி கிராமத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தெய்வீகமான இடம் புனித அன்னை அம்பாஜியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இந்து மத புராணமான தந்த்ரா சூடாமணியில் தேவி சதியின் இறந்த உடலில் இருந்து ஒரு துண்டு இதயம் இந்த மலையில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மலை ஏறி கோவிலை அடைய உதவும் 999 படிகள் இங்கு இருக்கின்றன. மலை உச்சியில் இருந்து சூரியன் மறைவதைப் பார்த்து ரசிக்கும் அனுபவம் ஓவியம் போல நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்

KartikMistry

பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம்

பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம்

பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம் குஜராத் மாநிலத்தில் உள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தின் பெயர் இதன் எதிர் முனைகளில் அமைந்துள்ள இரண்டு கோயில்களான பல்ராம் மற்றும் அம்பாஜியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த சரணாலயத்தில் சோம்பல் கரடி, முள்ளம்பன்றி, கோடிட்ட கழுதை புலி, புல்புல், நரி, இந்திய புனுகு பூனை போன்ற விலங்குகள் உள்ளன. அவற்றைத் தவிர பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளான கடாயா, குகால் மற்றும் முஸாலி போன்றவைகளும் செழித்தோங்கி வளர்ந்திருக்கின்றன.

વિહંગ

 சூரிய அஸ்தமன முனை

சூரிய அஸ்தமன முனை

இது காந்தி சிகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து சாபுதாரா மலை வாழிடத்தின் அழகைக் காணலாம். நகரத்தின் மையப்பகுதியிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் சூரிய அஸ்தமன முனை உள்ளது.

சாபுதாரா மலை

சாபுதாரா மலை

சாபுதாரா மலை வாழிடமே மிகவும் எழில் கொஞ்சும் இடமாகவும், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடமாகவும் இருக்கும்போது, அதில் அமைந்துள்ள சாபுதாரா ஏரி அதற்கு மேலும் எழில் சேர்க்கிறது. அழகு ததும்பும் பசுமையான இயற்கைச் சூழலுக்கு மத்தியில் தெள்ளத்தெளிவான நீர் நிறைந்துள்ள சாபுதாரா ஏரியில் படகுச் சவாரி செய்வது ஆனந்தத்திலும் ஆனந்தமே.

Master purav

வன்ஸ்தா தேசியப் பூங்கா

வன்ஸ்தா தேசியப் பூங்கா

சாபுதாராவிலுள்ள வன்ஸ்தா தேசியப் பூங்கா வனவிலங்கு ஆர்வலர்களும், அமைதியை விரும்புபவர்களும் ரசிக்கும் இடம். 24 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்து கிடக்கும் இக்காடு முன்னர் வன்ஸ்தா மகாராஜாவின் தனிப்பட்ட சொத்தாக இருந்தது. சிறிதாக இருந்தாலும் அடர்ந்து காணப்படுவதால், இக்காட்டில், புலி, புள்ளிப்பூனை, பங்கோலின், ராட்சத அணில், சிறுத்தை, மலைப்பாம்பு போன்ற அரியவகை வனவிலங்குகளும் வசிக்கின்றன. இந்த தேசியப்பூங்காவினை ரசிக்கவிரும்பினால், நீங்கள் முதன்மை வனக் காப்பாளர் அல்லது மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.

સતિષચંદ્ર

 லாலா பர்ஜன் சரணாலயம்

லாலா பர்ஜன் சரணாலயம்


லாலா பர்ஜன் சரணாலயம் என்று அழைக்கப்படும் குட்ஜ் பஸ்டர்ட் சரணாலயம் 1992-ல் குட்ஜியில் இருக்கும் ஜக்கு என்ற கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டது. குறிப்பாக ஓட்டிடிடேயின் ஏவியன் குடும்பத்தைச் சேர்ந்த பறக்கும் மிக அதிக எடை கொண்ட கிரேட்ட இந்தியன் பஸ்டர்ட் என்ற பறவை இனத்தைப் பாதுகாப்பதற்காக இந்த சரணாலயம் அமைக்கப்பட்டது. இந்த கிரேட்ட இந்தியன் பஸ்டர்ட் ஒரு ஆபத்தான பறவையாகும். இந்தப் பறவை மிக எளிதாக சரணாலயத்தில் உள்ள புல்வெளியில் தன்னை மறைத்துக் கொள்ளும். சுற்றுலாப் பயணிகளை இந்தப் பறவை வெகுவாக கவரும். அதோடு இந்த சரணாலயத்தில் சின்கராக்கள், காட்டு பூனைகள் மற்றும் நைல்கைஸ் போன்ற விலங்குகளும் உள்ளன.

LRBurdak

காகா காட்டுயிர் சரணாலயம்

காகா காட்டுயிர் சரணாலயம்

1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த காகா காட்டுயிர் சரணாலயம் 332 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. கட்ச் வளைகுடாவை ஒட்டிய கரைப்பகுதியில் இந்த சரணாலயம் அமைந்திருக்கிறது. பசுமையான தாவரச்செழிப்புடன் இந்த வனப்பகுதிக்கு ஏராளமான புலம்பெயர் பறவைகள் வருகை தருகின்றன. கழைக்கடா, கரண்டிவாயன் மற்றும் நாரை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. பறவைகள் மட்டுமல்லாமல் நரி, ஓநாய், நீல எருது, காட்டுப்பூனை மற்றும் பலவகை வண்ணத்துப்பூச்சிகள், குளவிகள், சிலந்திகள், தேனீக்கள் போன்ற உயிரினங்களும் இந்த சரணாலயத்தில் மிகுதியாக வசிக்கின்றன.

Thomas Hardwicke

வெளாவடார் ப்ளாக் பக் தேசிய பூங்கா

வெளாவடார் ப்ளாக் பக் தேசிய பூங்கா

வெளாவடார் ப்ளாக் பக் தேசிய பூங்காவில் மிகவும் அரிய வகை ப்ளாக் பக் வகை மான்கள், கழுதைப் புலி, ஆண்ட்லோப் மான் வகைகள், நரி மற்றும் குள்ள நரி வகைகள், காட்டுப் பன்றி வகைகள் போன்ற மிருகங்களை காணலாம். இதுமட்டுமல்லாமல், வேகமாக அழிந்து வரும் விலங்கினங்களான வெள்ளை நாரைகள், ஹவ்புரா பஸ்டர்ட், பள்ளிட் ஹாரியர், சாரஸ் வெள்ளைக் கொக்குகல் போன்ற பறவை வகைகளையும் இங்கு பயணிகள் கண்டு ரசிக்கலாம். மேலும் வேட்டையாடும் பறவைகளான, பாம்புக் கழுகள், போனேலிக் கழுகள் போன்ற பல வகைக் கழுகுகளையும் இந்தப் பூங்காவில் முடியும்.

Chinmayisk

ஹமீர்ஸர் ஏரி

ஹமீர்ஸர் ஏரி

மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு, ஜடேஜாவின் ஆட்சியாளரான ராவ் ஹமீர் அவர்களின் பெயரில் வழங்கப்பட்டு வரும் இந்த ஏரி, புஜ் நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. புஜ் நகரின் பெரும்பாலான முக்கிய சுற்றுலா ஸ்தலங்களை தன் கிழக்குப்புறத்தே கொண்டுள்ள, இந்த 450 வருடப் பழமை வாய்ந்த ஏரியின் கரையோரத்தில் நடைப்பயணம் மேற்கொள்வது ஒரு இனிய அனுபவமாகும். இந்த நீர்நிலையின் மத்தியில் அமைந்துள்ள ஒரு வண்ணமயமான தோட்டம், இதனை மேலும் அழகுறச் செய்கிறது.

ராஜஸ்தான் காடுகளுக்குள் ஒரு கலாச்சார சுற்றுலா போகலாம்! #காட்டுயிர்வாழ்க்கை 13

Bhargavinf

Read more about: travel forest gujarat

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்