Search
  • Follow NativePlanet
Share
» »திப்பு சுல்தானின் ஒட்டுமொத்த குடும்பமும் புதைந்துகிடக்கும் கும்பாஸ்..! மர்மம் தெரியுமா ?

திப்பு சுல்தானின் ஒட்டுமொத்த குடும்பமும் புதைந்துகிடக்கும் கும்பாஸ்..! மர்மம் தெரியுமா ?

கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் மாநகரத்தில் இருந்து சுமார் 410 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் தான் திப்பு சுல்தானின் ஒட்டுமொத்த குடும்பமுமே புதைந்து உள்ளனர். ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கும்பாஸ் என்றழைக்கப்படும் திப்புவின் அரண்மனையில் திப்பு சுல்தான் மற்றும் அவரது பெற்றோரான ஹைதர் அலி, ஃபாத்திமா பேஹம் ஆகியோர் புதைக்கப்பட்ட இடமாக கருதப்படுகிறது. இதர ராஜாங்க முக்கியஸ்தர்களும், திப்புவின் உறவினர்களும் கூட இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சமாதி மண்டபத்தின் கூரை கிரானைட் தளத்தால் ஆக்கப்பட்டுள்ளது. வாருங்கள், பல்வேறு வரவாற்று சிறப்பு கொண்ட திப்புவின் குடும்பத்தின் மர்மம் நிறைந்த கும்பாஸ் கோட்டைக்கு ஒரு பயணம் சென்று வருவோம்.

கும்பாஸ்

கும்பாஸ்

அழகாக வடிவமைக்கப்பட்ட சுவர்களும் 36 கம்பீரமான தூண்களும் கும்பாஸ் மண்டபத்திற்கு அழகூட்டுகின்றன. 220 ஆண்டுகள் வயதுடைய இந்த பழைய கோட்டை ஒரு உயரமான மேடைமீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தோ- இஸ்லாமிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் உள்ள இங்கு தேக்கு மரத்தாலான கும்பாஸ் கதவுகளை டல்ஹௌசி பிரபு வழங்கிய தந்தங்கள் அலங்கரிக்கின்றன. தங்கத்தாலும் வெள்ளியாலும் உருவாக்கப்பட்ட மூன்று கதவுகள் ஆங்கிலேயர்கள் ஸ்ரீரங்கப்பட்டணாவை ஆக்கிரமித்தபின் லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவை தற்சயம் லண்டன் ஆல்பெர்ட் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மினுமினுக்கும் புலித்தோல் வண்ண வரிகள் பூசப்பட்ட உட்புறச்சுவர்களும், அரிதான கறுப்பு சலவைக்கல்லால் ஆன தூண்களும் இங்குள்ள மைய மண்டபத்தை அலங்கரிக்கின்றன. ரங்கநாதஸ்வாமி கோவில் மற்றும் ஜுமா மசூதி இரண்டுமே இந்த நினைவுச்சின்ன வளாகத்துள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pbm

மஹாதேவபுரா

மஹாதேவபுரா

ஸ்ரீரங்கபட்டணா செல்லும் பயணிகள் மஹாதேவபுரா தலத்தையும் மறக்காமல் பார்ப்பது அவசியம். அடர்ந்த காடுகளின் காவிரி ஓடும் பகுதியில் அமைந்துள்ள இந்த அழகிய கிராமம் ஒரு பிரசித்தமான சிற்றுலா தலமாக திகழ்கிறது. இதனருகே உள்ள தரியா தௌலத் பாக் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று. 1784ம் ஆண்டு எழுப்பப்பட்டுள்ள இந்த அரண்மனை திப்பு சுல்தானின் கோடைக்கால அரன்மணையாக பிரசித்தமாக அறியப்படுகிறது. ஹைதர் அலியால் துவங்கப்பட்ட இதன் கட்டமைப்பு அவர் மகன் திப்பு சுல்தானால் முடிக்கப்பட்டது.

Ashwin Kumar

வரலாறு

வரலாறு

கர்நாடகாவில் முக்கிய சுற்றுலாத் தலமாக புகழ் பெற்றுள்ள மஹாதேவபுரா அரண்மனை 1959-ஆம் ஆண்டு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு நினைவுச்சின்னமாக இது உள்ளது. தரியா தௌலத் பாக் இந்தோ-சராசனிக் கட்டிடக்கலை பாணியில் அழகான நுணுக்கமான ஓவியங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. வண்ண ஓவியங்கள், வார்ப்பு ஓவியங்கள், கோட்டோவியங்கள் போன்ற பலவிதமான ஓவிய வடிவங்கள் மற்றும் திப்பு சுல்தான் பயன்படுத்திய அற்புதமான துணிவகைகள் போன்றவற்றை இந்த அரண்மனையின் முதல் தளத்தில் பயணிகள் பார்க்கலாம். தரைத்தளத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான போர் சம்பவங்கள் சுவர் ஓவியமாக தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

Pbm

பாண்டவபுரா

பாண்டவபுரா

ஸ்ரீரங்கப்பட்டணாவிற்கு வரும் பயணிகள் இந்த பாண்டவபுரா தலத்தையும் பார்ப்பது அவசியமாகும். பாறைகளால் ஆன இரண்டு மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் இந்த நகரத்திற்கு பாண்டவர்கள் இங்கு வனவாசத்தின் போது சிறிது காலம் வசித்ததால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் தாய் குந்திதேவிக்கு இந்த தலம் மிகவும் பிடித்திருந்தது என்றும் தொன்நம்பிக்கைகள் நிலவுகின்றன. சுதந்திரத்துக்கு முந்தைய வரலாற்று காலத்தின்போது திப்பு சுல்தானுக்கு ஆங்கிலேயரை எதிர்த்து போரிடுவதில் உதவ வந்த பிரஞ்சு படையினர் இந்த மலையில் முகாமிட்டிருந்த காரணத்தால் இந்த நகரம் பிரஞ்ச் ராக்ஸ் என்றும் இது அழைக்கப்படுகிறது. பாண்டவபுரா கிராமம் நெல் வயல்கள் மற்றும் கரும்பு வயல்கள் சூழ இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது. விவசாயம் இந்த நகரத்தின் முக்கிய தொழிலாக உள்ளதால் பாண்டவபுரா வழியாக செல்லும் பயணிகள் பலவகையான விவசாயப்பொருட்கள், ஆயுர்வேதப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களைப் பார்க்க முடியும்.

Shyamal

ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில்

ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில்

மாநிலத்தின் பல்வேறு பகுதி மக்களையும் ஈர்க்கும் தன்மைகொண்ட ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில் ஸ்ரீரங்கபட்டணாவில் அமைந்துள்ளது. 9-ம் நூற்றாண்டில் கங்க வம்சத்தினரால் கட்டப்பட்ட மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கோவில் பின்னாளில் விஜயநகர வம்சம், ஹொய்சள வம்சம் போன்ற ராஜ வம்ச ஆட்சிகளில் பலவிதமாக புதுப்பிக்கப்பட்டு அழகூட்டப்பட்டுள்ளது.

Adam Jones Adam63

ரங்கநாத அவதாரம்

ரங்கநாத அவதாரம்

விஷ்ணு பகவானின் ரங்கநாத அவதாரத்திற்கான கோவிலான இது பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கருங்கல்லில் உருவாக்கப்பட்ட புன்முறுவலுடன் காட்சியளிக்கும் விக்கிரகத்தை இந்த கோவில் கொண்டுள்ளது. சன்னதியில் உள்ள விக்கிரகம் அனந்த சயன கோலத்தில் காட்சியளிக்கிறது. விஷ்ணுவின் 24 அவதாரங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்ட கலையம்சம் நிறைந்த தூண்கள் இந்தக் கோவிலில் வரிசையாக காணப்படுகின்றன. கோவில் உட்புறச்சுவர்களில் சீனிவாசக்கடவுள் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயரின் சிற்பங்களும் உள்ளன. கர்நாடக மாநிலத்தின் பெரிய கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கோவிலில் ஒரு உப்பரிகை, ஒரு பிரம்மாண்ட கோபுரம், தூண்களுடன் கூடிய ஒரு மண்டபம் ஆகியவை அடங்கியுள்ளன. இவை யாவுமே வெவ்வேறு காலகட்டத்தில் தனி இணைப்புகளாக கட்டப்பட்டுள்ளன. லட்சாத்வீபோத்சவம் எனும் 1 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும் சடங்குடன் கூடிய சங்கராந்தி திருவிழாவின் போது பயணிகள் இங்கு பயணம் செய்தால் கூடுதல் சிறப்பு. வருடம் முழுதும் திறந்திருக்கும் இந்தக்கோவிலின் நடை காலை 8 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். தற்கு ஏற்றவாறு பயணிகள் திட்டமிட்டு சென்றால் சிறப்பு தரிசணம் கிடைக்கும்.

abhishekwanderer

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more