Search
  • Follow NativePlanet
Share
» »காவிரிக்கு தண்ணீர் தரும் கபினி ஆறு பற்றிய இந்த விசயங்களை தெரியுமா?

காவிரிக்கு தண்ணீர் தரும் கபினி ஆறு பற்றிய இந்த விசயங்களை தெரியுமா?

காவிரிக்கு தண்ணீர் தரும் கபினி ஆறு பற்றிய இந்த விசயங்களை தெரியுமா?

By Udhaya

கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் மனந்தவதி ஆறு மற்றும் பனமரம் ஆறு இரண்டு கலந்து ஓடிவரும் இந்த கபினி ஆறு பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாகும். கபிலா என்ற பெயராலும் அறியப்படும் இந்த கபினி ஆறு 55 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியின் சூழலியல் சமநிலைக்கு உதவியாக உள்ளது. திருமாக்கூடல் நரசிப்புரா ஸ்தலத்தில் இந்த கபினி ஆறு காவிரி ஆற்றுடன் கலக்கிறது.1974ம் ஆண்டு இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணையை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இந்த அணை 2284 அடி (696 மீட்டர்) நீளமும், 190 அடி (58 மீட்டர்) உயரமும் கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பீச்சனஹள்ளி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள இந்த அணைக்கு ஹெக்கடதேவன கோட்டே என்ற இடத்திலிருந்து செல்லலாம். இந்த ஆறு காவிரியில் கலக்கும் ஆறுகளில் மிக முக்கியமானதாகும். இந்த ஆறு மற்றும் கபினி அணை பற்றிய பத்து முக்கியமான விசயங்களை இந்த தொகுப்பில் காண்போம்.

எங்கு உற்பத்தியாகிறது தெரியுமா?

எங்கு உற்பத்தியாகிறது தெரியுமா?

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு பின் கர்நாடக மாநிலத்துக்குள் நுழைந்து காவிரியில் கலந்து தமிழகத்துடன் பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது.

கபினி ஆறு என்பது பனமரம் மற்றும் மனந்தவதி எனும் இரு ஆறுகள் கலந்த ஆறு ஆகும். திருமாக்கூடல் நரசிபுரம் எனும் கிராமத்தில் இது காவிரியில் கலக்கிறது.

Vinodnellackal

 நாகர்ஹோலே

நாகர்ஹோலே

கபினி ஆற்றுப்பகுதி மற்றும் அணைக்கு பயணம் செய்யும் பயணிகள் இதன் அருகிலேயே உள்ள, யானைகளுக்கு புகழ்பெற்ற நாகர்ஹோலே தேசிய வனவிலங்குப்பூங்கா பகுதிக்கும் போய் வரலாம்.

கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியானது 55 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக அடர்ந்த காடுகள், மலைப்பிரதேசங்கள், ஏரிகள் மற்றும் ஓடைகளைக்கொண்டுள்ளது. இங்குள்ள கபினி அணையின் நீர்த்தேக்கம் மஸ்திகுடி ஏரி என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மறைந்துபோன மஸ்திகுடி எனும் கிராமத்தின் பெயரால் இந்த நீர்த்தேக்கம் (ஏரி) அழைக்கப்படுகிறது.

Ranjith Kumar 2016 Subramanya C K

காடு உலா

காடு உலா

கபினி வனப்பகுதிக்குள் காணப்படும் பலவகையான காட்டுயிர்களை நேரில் பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் ஜங்கிள் சபாரி எனப்படும் காட்டுப்பயணத்தை மேற்கொள்ளலாம். கபினியின் வனப்பிரதேசம் முழுவதும் பலவகையான தாவரங்களும் மரவகைகளும் செழிப்புடன் நிரம்பி காணப்படுகின்றன. இவற்றை நேரில் கண்டு ரசிக்க வசதியாக இந்த துணிகரமான ஜீப் சவாரியை தேர்ந்தெடுக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் சுற்றுலா நிறுவனங்கள் மறக்க முடியாத இயற்கை நடைப்பயணங்களுக்கும் வசதி செய்து தருகின்றன. வருடம் முழுவதுமே மிதவெப்பத்துடன் காணப்படும் இந்த கபினி வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் எப்போது வேண்டுமானாலும் ஜங்கில் சபாரி பயணம் செல்லலாம்.

Ranjith Kumar 2016

யானைச் சவாரி

யானைச் சவாரி

சுங்கடாகட்டி என்ற இடத்திலிருந்து கொடுக்கப்படும் யானைச்சவாரி ஏற்பாடுகள் பயணிகளுக்கு கபினி வனப்பிரதேசத்தின் உட்பகுதியை பார்க்க உதவியாக இருக்கும். ஜீப் செல்லமுடியாத காட்டு பகுதிகளுக்கு சென்று ரசிப்பதற்கு இந்த யானைச்சவாரி உதவியாக உள்ளது. இயற்கையை பார்த்து ரசிப்பதுடன் யானையின் மீது அமர்ந்து பிரயாணம் செய்யும் கிளர்ச்சியான அனுபவத்தை பயணிகள் பெற்று மகிழலாம். வரலாற்றுக்காலத்தில் அரசர்கள் யானை மீது இப்படித்தான் அமர்ந்து பயணித்திருப்பார்கள் என்று பயணிகள் கற்பனை செய்து இன்புறலாம். இந்த சவாரியின்போது யானையின் முதுகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மேடை போன்ற மிருதுவான இருக்கையின் மீது அமர்ந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் நாலாபுறமும் இயற்கை அழகை பார்த்து ரசிப்பதற்கேற்ப மெதுவாக நடந்து செல்லும்படி யானைகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன.

Vjgeorgeinn

JKDs

 கபினி காட்டுயர் வாழ்க்கை

கபினி காட்டுயர் வாழ்க்கை

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரத்திலிருந்து 163 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கபினி பிரதேசம் கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதிக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இது நாகர்ஹோலே இயற்கைப்பாதுகாப்பு வனப்பகுதியின் ஒரு அங்கமாகும். காட்டுயிர் அம்சங்கள் மற்றும் இயற்கை எழில் போன்றவற்றுக்காக இது சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் ஸ்தலமாக உள்ளது. இந்த கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதி இப்பிரதேசத்தின் வழி பாயும் கபினி ஆற்றின் அடையாளமாக கபினி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த ஆறு நாகர்ஹோலே இயற்கைப்பாதுகாப்பு வனப்பகுதியின் தென்கிழக்கு பகுதியை பிரித்து உருவாக்கியுள்ளது.

Yathin S Krishnappa

தன்மைக்கேற்ற தாவர இனங்கள்

தன்மைக்கேற்ற தாவர இனங்கள்

பல்வகையான மழைப்பொழிவினைப் பெற்றிருக்கும் இந்த கபினி பிரதேசத்தில் அந்த தன்மைக்கேற்றவாறு பலவகைத் தாவர இனங்கள் நிறைந்துள்ளன. குறைந்த மழைப்பொழிவைக் கொண்டுள்ள பகுதிகளில் வறண்ட இலையுதிர் தாவரங்களும் அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் ஈர இலையுதிர் தாவரங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இடையிடையே பசும் புல்வெளியும், புதர்க்காடுகளும் சதுப்பு நிலங்களும் காணப்படுகின்றன.

Manoj K Hermal jeyaraj

நாகர்ஹோலே காட்டுயிர் பாதுகாப்பு வனம்

நாகர்ஹோலே காட்டுயிர் பாதுகாப்பு வனம்

கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதி மற்றும் அதன் விரிவான தொகுப்பான நாகர்ஹோலே காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியில் ஏராளமான வன உயிரினங்கள் குறிப்பாக யானைகள் அதிகம் வசிக்கின்றன. ஆசிய யானைகள் அதிகம் வசிக்கும் வனப்பகுதியாக இந்த கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதி அறியப்படுகிறது. யானைகள் தவிர மான்கள், நான்கு கொம்பு மான்கள், சாம்பார் மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, குரைக்கும் மான், கருங்குரங்கு, இந்தியக்குரங்கு போன்றவையும் இங்கு ஏராளமாக வசிக்கின்றன.

Arron Menezes

 காட்டு விலங்குகள்

காட்டு விலங்குகள்

இவற்றை உணவாகக்கொண்டு வாழும் வேட்டை விலங்குகளும் இங்கு அதிகம் வசிக்கின்றன. புலி, சிறுத்தை மற்றும் இந்திய காட்டு நாய்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்த வனப்பகுதியில் சபாரி எனப்படும் காட்டு சுற்றுலாவை மேற்கொள்ளும் பயணிகள் காட்டுயிர் வாழ்க்கையை மிக அருகில் கண்டு ரசிக்கலாம்.

Puru150 Pradipta Majumder

நேரில் தரிசனம்

நேரில் தரிசனம்


யானைக்கூட்டங்கள், புள்ளிமான்கள் மற்றும் சாம்பார் மான்கள், குரைக்கும் மான், கருங்குரங்கு, மந்திக்குரங்கு, கரடி, காட்டெருமை, சிறுத்தை, முதலை, புலி மற்றும் காட்டு நாய் போன்ற மிருகங்களை பயணிகள் நேரில் தரிசிக்க வாய்ப்புண்டு. 300க்கும் மேற்பட்ட பறவை வகைகளை கொண்டிருக்கும் கபினி வனப்பகுதி பறவை ஆர்வலர்கள் மிகவும் விரும்பக்கூடிய ஸ்தலமாக புகழ்பெற்றுள்ளது. வல்லூறு, பழுப்பு மூக்கு மீன்கொத்தி, அரிவாள்மூக்கன், கொக்கு, நாரை மற்றும் மலபார் தீக்காக்கை போன்றவை இங்கு காணப்படுகின்றன.

Puru150

சாகச பயணம்

சாகச பயணம்


கபினி சுற்றுலா தலத்தின் முக்கிய சிறப்பு அம்சம் ஜீப்பில் காட்டுப்பயணம் மற்றும் காட்டுக்குள் யானை மீதமர்ந்து பயணிப்பது ஆகும். மேலும் இங்குள்ள நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரி செல்வதன் மூலம் கரையின் ஓரம் புள்ளிமான்கள் மற்றும் சாம்பார் மான்களை காணலாம். இதுதவிர கரையோரம் வெயில் காயும் முதலைகளையும் கண்டு ரசிக்கலாம். இயற்கை நடைப்பயணம், காட்டுவழி நடைப்பயணம், படகுச்சவாரி, சைக்கிள் சவாரி, ராத்திரி கூடார கேளிக்கை நிகழ்ச்சிகள், உள்ளூர் கிராம சுற்றுலாக்கள் என்று ஏராளமான பொழுதுபோக்கு அனுபவங்கள் இங்கு பயணிகளுக்காகவே காத்திருக்கின்றன. இந்தியாவின் முக்கியமான இயற்கை சுற்றுலா தலங்களில் ஒன்றான கபினி இங்குள்ள வளமான காட்டுயிர் அம்சங்களுக்கு இயற்கை எழிலுக்கு பிரசித்தி பெற்று அறியப்படுகிறது. கர்நாடகாவின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் இந்த கபினி வனப்பகுதி ஒன்று என்பதை பயணிகள் இங்கு ஒரு முறை வருகை தந்து பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

Manu gangadhar Mithilmja

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+