Search
  • Follow NativePlanet
Share
» » கபூர்தாலாவுக்கு ஓர் அழகிய பயணம் செல்லலாம்?

கபூர்தாலாவுக்கு ஓர் அழகிய பயணம் செல்லலாம்?

கபூர்தாலாவுக்கு ஓர் அழகிய பயணம் செல்லலாம்?

By Udhaya

அரண்மனை மற்றும் தோட்ட நகரம் என்றும் அழைக்கப்படும் கபூர்தாலா, இவ்விடத்தை 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த ராணா கபூர் என்ற ஜெய்சால்மர் கரானாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாமா?

கலாச்சாரம்

கலாச்சாரம்


கபூர்தாலா மாவட்டத்தில் தலைநகராக விளங்கும் இவ்வூர் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பெருமைக்கு புகழ்பெற்றதாகும். அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பலவகையான சுற்றுலாத் தலங்களின் கலவையாக கபூர்தாலா திகழ்கிறது.

MSharma

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

பஞ்ச் மந்திர் , கஞ்சிலி ஈரநிலங்கள், ஜகத்ஜித் அரண்மனை, குருத்வாரா பேர் சாஹிப், புஷ்பா குஜ்ரால் விஞ்ஞான நகரம் என பலவகையான தளங்கள் இங்கு உண்டு. கபூர்தாலாவிற்கு 21கிமீ தொலைவில் உள்ள ஜலந்தர், பஞ்சாபின் புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாகும்.

Sonuchahal1989

 திருவிழாக்கள்

திருவிழாக்கள்

அம்ரிஸ்டர், ஹோஷியாபூர், குர்தாஸ்பூர், ஃபெரோஸ்பூர், நவான்ஷாபூர் ஆகிய ஊர்களும் அருகிலேயே உள்ளன. ஹோலி, தீபாவளி, லோஹ்ரி ஆகிய பண்டிகைகள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வைகாசி மாதத்தில் பைசாகி என்ற அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

sdjaspal

 கட்டிடக்கலை

கட்டிடக்கலை

அதுமட்டுமல்லாமல் பிரஞ்சு மற்றும் இந்தோ-சாராசீனிய கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்று விளங்குகிறது. கபூர்தலா அடையும் வழிகள் பேருந்து, ரயில் வசதிகள் சிறப்பாக உள்ள இந்த நகருக்கு அருகில் ராஜா சான்சி விமானநிலையம் அம்ரிஸ்டரில் 82கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Jjsingh1981

வானிலை

வானிலை


பயணிக்க சிறந்த பருவம் மித வெப்ப மண்டல வானிலை நிலவுவதால் மற்ற வட இந்திய நகரங்களைப் போலவே இங்கும் சராசரி வானிலையே நிலவுகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை பயணிப்பது சிறப்பாக கருதப்படுகிறது

khinda singh

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X