Search
  • Follow NativePlanet
Share

கபூர்தாலா - அரண்மனை மற்றும் தோட்டங்களின் நகரம்!

25

அரண்மனை மற்றும் தோட்ட நகரம் என்றும் அழைக்கப்படும் கபூர்தாலா, இவ்விடத்தை 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த ராணா கபூர் என்ற ஜெய்சால்மர் கரானாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. கபூர்தாலா மாவட்டத்தில் தலைநகராக விளங்கும் இவ்வூர் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பெருமைக்கு புகழ்பெற்றதாகும்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

வரலாறு, கலாச்சாரம் மற்றும் பலவகையான சுற்றுலாத் தலங்களின் கலவையாக கபூர்தாலா திகழ்கிறது. பஞ்ச் மந்திர் , கஞ்சிலி ஈரநிலங்கள், ஜகத்ஜித் அரண்மனை, குருத்வாரா பேர் சாஹிப், புஷ்பா குஜ்ரால் விஞ்ஞான நகரம் என பலவகையான தளங்கள் இங்கு உண்டு.

கபூர்தாலாவிற்கு 21கிமீ தொலைவில் உள்ள ஜலந்தர், பஞ்சாபின் புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாகும். அம்ரிஸ்டர், ஹோஷியாபூர், குர்தாஸ்பூர், ஃபெரோஸ்பூர், நவான்ஷாபூர் ஆகிய ஊர்களும் அருகிலேயே உள்ளன.

ஹோலி, தீபாவளி, லோஹ்ரி ஆகிய பண்டிகைகள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வைகாசி மாதத்தில் பைசாகி என்ற அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிரஞ்சு மற்றும் இந்தோ-சாராசீனிய கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்று விளங்குகிறது.

கபூர்தலா அடையும் வழிகள்

பேருந்து, ரயில் வசதிகள் சிறப்பாக உள்ள இந்த நகருக்கு அருகில் ராஜா சான்சி விமானநிலையம் அம்ரிஸ்டரில் 82கிமீ தொலைவில் அமைந்துள்ளது.  

பயணிக்க சிறந்த பருவம்

மித வெப்ப மண்டல வானிலை நிலவுவதால் மற்ற வட இந்திய நகரங்களைப் போலவே இங்கும் சராசரி வானிலையே நிலவுகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை பயணிப்பது சிறப்பாக கருதப்படுகிறது

கபூர்தாலா சிறப்பு

கபூர்தாலா வானிலை

சிறந்த காலநிலை கபூர்தாலா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கபூர்தாலா

  • சாலை வழியாக
    கபூர்தாலா ஜலந்தர்-ஃபெரோஸ்பூர் சாலையில் உள்ளதால் பேருந்து வசதிகளுக்கு குறைவில்லை. மாநில போக்குவரத்து பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இங்கு பெருமளவில் உள்ளன. பஞ்சாப் உள்ளிட்ட இடங்களுக்கு தனியார் வாகன வசதிகளும் உண்டு.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கபூர்தாலாவில் ரயில்நிலையம் உண்டென்றாலும் கொஞ்ச எண்ணிக்கையிலேயே ரயில்கள் வருகின்றன. அருகிலுள்ள பெரிய ரயில் நிலையமாக ஜலந்தர் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ரயில் வசதி உண்டு.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராஜா சான்சி விமானநிலையம் கபூர்தாலாவில் இருந்து 82கிமீ தொலைவில் உள்ளது. பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இங்கு உள்ளன. அம்ரிஸ்டரில் உள்ள இந்த விமானநிலையத்தில் இருந்து தனியார் வண்டிகள் மூலம் கபூர்தாலா செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue