» »கர்ஜத் மலைக் காட்டில் சாகசப் பயணம் போலாமா...!

கர்ஜத் மலைக் காட்டில் சாகசப் பயணம் போலாமா...!

Written By: Sabarish

மகாராஷ்டிரா என்றாலே மும்பை நகரம் மட்டுமே நம்மில் பெரும்பாலானோருக்கு சட்டென நினைவில் தோன்றும். மும்பையை தவிர்த்து இன்னும் எத்தனையோ அற்புதங்கள் மகாராஸ்டிராவில் உள்ளன. இங்கிருக்கும் மலை குன்றுகள் பலவற்றிலும் புராதன கோட்டைகள், வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக உள்ளது. அவ்வாறாக அங்கு மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று கர்ஜத் மலைத் தொடர். வாருங்கள், அப்படி அங்கே என்னவெல்லாம் உள்ளது, எப்படிச் செல்வது என பார்க்கலாம்.

கர்ஜத் மலை

கர்ஜத் மலை


மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது கர்ஜத் நகரம். இந்த மலைப் பிரதேசம் கம்பீரமான சஹயாத்திரி மலைகள், மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் போர்காட் மலைகளை தன்னுள் கொண்டு காணப்படுகிறது. உல்லாஸ் ஆற்றின் கரையிலுள்ள இந்த கர்ஜத் நகரம் கொங்கணப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

Karunakar Rayker

சாகச மையம்

சாகச மையம்


கர்ஜத் நகரமானது பெரும்பாலும் சாகச விரும்பிகளை ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளது. உள்ளூர் வாசிகள் சின்னதாக ட்ரிப் போக விரும்பினால் அவர்களின் முதல் தேர்வு இந்த பசுமைக் காட்டு மலை தான். ரம்மியமான இந்த கர்ஜத் மலை பல சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

Alok Kumar

இருவேறு மலைப் பாதை

இருவேறு மலைப் பாதை


கர்ஜத் நகரம் மலையேற்றத்துக்கு பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. அனுபவமம் இல்லாதவர்களுக்கு ஏற்ற பல சுலபமான மலையேற்றப்பாதைகளும், அனுபவசாலிகளுக்கு ஏற்ற கடினமான பாதைகளும் இங்கு ஏராளம் அமைந்துள்ளன.

Dhananjay Odhekar

பசுமைக் காட்டின் ஊடாக...

பசுமைக் காட்டின் ஊடாக...


இந்த மலைப்பாதைகளில் பயணிக்கும்போது நம்மால் சுற்றியுள்ள இயற்கை வனத்தை மிக அருகில் கண்டு ரசிக்க முடியும். இவை மலையேற்ற ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இயற்கை ரசிகர்களுக்கும் ஏற்றதாக உள்ளன. புகைப்படக் கலைஞராக இருந்தால் இங்கு எடுக்கும் புகைப்படங்களை உங்கள் வாழ்நாளிலும் மறக்க முடியாது.

Coolgama

படகு சவாரி

படகு சவாரி


உல்லாஸ் ஆற்றில் மிதவைப்படகு சவாரி செல்வது இங்குள்ள மற்றொரு சாகச பொழுதுபோக்கு அம்சமாகும். மலை முகடுகள் சூழ ரம்மியமான ஆற்றில் மிதந்து கொண்டே இயற்கையை ரசிக்க யாருதான் விரும்ப மாட்டார்கள். கர்ஜத் சென்றால் தவறவிடக்கூடாத பகுதியாக இதை முதலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Rdglobetrekker

கோட்டைகள்

கோட்டைகள்


கர்ஜத்தில் அமைந்திருக்கும் புராதன சின்னமான பேத் கோட்டை மற்றும் புத்த கலையம்சங்களை கொண்டுள்ள கொண்டனா குகைகள் போன்றவையும் சுற்றுலாவிற்கு ஏற்ற தலங்களாகும். இந்த குகைகளில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் வரலாற்று மற்றும் சிற்பக்கலை ஆர்வலர்களை மிகவும் கவரும் முக்கிய அம்சங்களாகும்.

Nichalp

பேத் கோட்டை

பேத் கோட்டை


கோட்லிகாட் என்று அழைக்கப்படும் இந்த பேத் கோட்டை கர்ஜத் நகரத்துக்கு மிக அருகில் உள்ள பேத் எனும் சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பேத் மலைப்பகுதி மாத்தேரான் மலைகளை பின்னணியில் கொண்டுள்ளதால் அற்புதமான இயற்கைக்காட்சிகளுடன் காட்சியளிக்கின்றது.

A.Savin

பைரோபாவின் விக்கிரகம்

பைரோபாவின் விக்கிரகம்


பேத் கோட்டையில் இருந்து கொங்கணப்பிரதேசத்தின் இயற்கை எழிலை முழுமையாக ரசிக்க முடியும். இந்த கோட்டைக்கு அருகிலேயே உள்ள ஒரு சிறு குகையில் பைரோபா கடவுளின் விக்கிரகம் உள்ளது. பேத் கோட்டை தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும், இங்குள்ள நீர்த்தொட்டிகள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன.

Y.Shishido

அருகில் என்ன உள்ளது ?

அருகில் என்ன உள்ளது ?


இந்த கோட்டை மராத்தா ஆட்சியாளர்களால் எதிரிகளிடமிருந்து தங்கள் ராஜ்ஜியத்தை காப்பாற்றும் நோக்கில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இந்த கோட்டைக்கு அருகாமையில் நேதர்சோலே அணை மற்றும் பன்சாத் காட்டுயிர் சரணாலயம் போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களும் அமைந்துள்ளன.

Saumitra Newalkar

கொண்டனா குகைகள்

கொண்டனா குகைகள்


கொண்டனா குகைகள் கர்ஜத்திலேயே அமைந்துள்ளன. இவை வரலாற்றுக்கால பௌத்த மரபிற்கான சான்றுகளாய் காட்சியளிக்கின்றன. பாறைக்குடைவு கோவில்களான இவற்றின் உள்ளே பல சிற்பங்கள், ஸ்தூபிகள், விஹாரங்கள் மற்றும் சைத்யாக்கள் போன்றவை அமைந்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குடைவறைக் கோவில்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையை உடையன என்பது ஒரு மலைக்க வைக்கும் விசயமாகும்.

Dinesh Valke

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மகாராஸ்டிராவில் இருந்து புனே வழியாக 364 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பையில் வெகு அருகில் சுமார் 63 கிலோ மீட்டர் தொலைவிலும் கர்ஜத் மலை அமைந்துள்ளது. மும்மையில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் இதன் அருகில் அமைந்துள்ளதாகும்.

Shabbir "Leo" Ali

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்