» »அகத்தியர் நீராடிய பாண தீர்த்தம்...! அயல்நாட்டவரையே அசத்தும் மூலிகை அருவி...

அகத்தியர் நீராடிய பாண தீர்த்தம்...! அயல்நாட்டவரையே அசத்தும் மூலிகை அருவி...

Written By: Sabarish

கொட்டும் மழையானாலும் சரி, ஆர்ப்பரிக்கும் அலையானாலும் சரி, வெள்ளமோ, தேங்கி நிற்கும் குளமோ நீரென்றாலே இயற்கையின் வரம் தான். பிரம்மிப்பூட்டும் அருவியாக, தூவும் சாரலாக, சலசலவென ஓடும் ஏரியாக எப்படி வந்தாலும் கட்டி அரவனைக்கதோனும் அம்சங்களைக் கொண்டதுதான் இந்த தண்ணீர் என நாம் அறிவோம். இப்படி பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ள நீர் சில பகுதிகளில் தனக்கென தனியே பல சிறப்புகளையும் கொண்டுள்ளது. அப்படியொரு சிறப்பை சுமந்துநிற்பதுதான் பாண தீர்த்தம் என்றழைக்கப்படும் பாபநாசத்தின் வான தீர்த்தம். அப்படி அங்கே என்னதான் சிறப்பு என பார்க்கலாம் வாங்க...

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


எங்கு காணிணும் பசுமைக் காடுகளும், ஜில்லென்ற சீதோஷனமும் நிறைந்த பாபநாசத்தில் இருந்து தமிழக- கேரள எல்லைக் காடான அகத்தியர் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள காரையார் அணைக்கு அடுத்து உள்ளது இந்த பாண தீர்த்த அருவி.

K R Ramesh

பாண தீர்த்தமான வான தீர்த்தம்

பாண தீர்த்தமான வான தீர்த்தம்


பாண தீர்த்தத்தை சிலர் வான தீர்த்தம் என்றும் அழைக்கிறார்கள். ராமன் தனது தந்தையான தசரதருக்கு இங்கேதான் இறுதிச் சடங்கு செய்து திதி கொடுத்ததாக புராணங்கள் வாயிலாக தெரிகிறது. அகத்தியரும் கூட இங்கேதான் நீராடியதாகவும் அங்கு ஓர் சொல் வழக்கு இன்றளவும் நிலவுகிறது. இதன் காரணமாகவே பின்நாட்களில் வான தீர்த்தம், பாண தீர்த்தம் என்று அழைக்கப்பெற்றுள்ளது.

Sukumaran sundar

நோய் தீர்க்கும் மூலிகை அருவி

நோய் தீர்க்கும் மூலிகை அருவி


மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைவன காடுகளில் சிறுசிறு நீர்த்துளிகளாக சேகரமாகி காடுகளின் ஊடாக ஓட் காட்டாற்று வெள்ளமாக நீர் பாயும் இடம்தான் பாணதீர்த்தம். காட்டில் உள்ள மூலிகை செடி, மரங்களில் உரசிவந்து பாணதீர்த்தமாக கொட்டுவதால் என்னவோ இங்கே நீராடினால் நீண்ட நாட்களாக தீராத நோயும் விட்டு ஓடிவிடுகிறது என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

L.vivian.richard

தாமிரபரணியின் தாய்

தாமிரபரணியின் தாய்


இந்த அருவிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விசயம் தாமிரபரணியின் தோற்றம் இங்கேதான் துவங்குகிறது. இங்கிருந்து காரையாறு அணையில் தேங்கி, மலையில் பயணித்து பாபநாசத்தை அடைகிறது. அங்கிருந்து குறிஞ்சியிலும் முல்லையிலும் பாய்ந்த தாமிரபரணி அடுத்ததாக விவசாய நிலங்களான மருதத்துக்குள் நுழைகிறது.

Saravananreddy

ஆபத்து நிறைந்த அழகு அருவி..!

ஆபத்து நிறைந்த அழகு அருவி..!


பார்ப்பதற்கு மலைகல் சூழ ரம்மியமான அழகைக் கொண்டுள்ள பாண தீர்த்தம் அருவி ஆளைவிழுங்கும் ஆபத்தையும் கொண்டுள்ளது. கனத்த மலைக்காலத்தில் இங்கே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கோடை உள்ளிட்ட பிற நாட்களில் சென்றால் முழு அழகையும் ரசித்து வரலாம்.

tshrinivasan

சுற்றுவட்டாரம்

சுற்றுவட்டாரம்


பாணதீர்த்த அருவியைத் தோடர்ந்து சேர்வலாற்றை கடந்தால் கீழணையும், அதற்கும் கீழே கல்யாண தீர்த்தம் அருவியும் உள்ளது. இங்கே பழமையான ஓர் சிவன் கோவிலும் உள்ளது. இக்கோவிலுக்கு கீழ் பகுதியில்தான் அகத்தியர் அருவியும், தலையணை அணைக்கட்டும் இருக்கிறது.

Karthikeyan.pandian

தலையணை

தலையணை


பாபநாசப் பகுதி பொதுமக்களிடையே தலையணை குறித்த ஓர் ஆதிகாலக் கதையும் உள்ளது. பாண்டியரின் ஆட்சியின் கீழ் இருந்த பாபநாகத்தில் எதிரி நாட்டினர் போரிடுகையில் சிறுவனாக இருந்த பாண்டிய இளவரசன் தனது தலையை தானே வெட்டிவிட்டு தாமிரபரணியில் விழுந்தான். அவரது தலை தலை ஒதுங்கிய இடம் தலையணை என்றும், முண்டம் ஒதுங்கிய இடம் முண்டந்துறை என்றும் பெயர் பெற்றது என தற்போதும் சிலிர்க்கும் கதையை கூறுகின்றனர் இப்பகுதியினர்.

Sukumaran sundar

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


காரையார் அணை, மாஞ்சோலை மலை, முண்டந்துறை களக்காடு புலிகள் காப்பகம் உள்ளிட்டவை பாபநாசத்தை சுற்றுயுள்ள சுற்றுலாத் தலங்களாகும். நெல்லைக்கு பயணம் மேற்கொள்ளும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் வல்லமைகளையும் இப்பகுதிகள் கொண்டுள்ளன.

Jaseem Hamza

காரையார் அணை

காரையார் அணை


முண்டந்துறை புலிகள் காப்பக வட்டாரத்தில் அமைந்துள்ள காரையார் அணையில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி செயல்படுத்தப்படுகிறது.நீர்வீழ்ச்சியின் சாரல்களுக்கு மத்தியில் படகில் பயணிக்க யாருக்குதான் விருப்பமிருக்காது.

Arunsarv

மாஞ்சோலை

மாஞ்சோலை


மாஞ்சோலை என்ற மலைப் பகுதி தேயிலை தோட்டத்திற்கு பெயர் புகழ்பெற்றது. உதகை, வால்பாறைப் போலவே பல ரகத்து தேயிலைச் செடிகள் இங்கு வளர்க்கப்படுகிறது. இயற்கை எழிலுக்கும் புகழ் பெற்று விளங்கும் இந்த மலையின் அமைதியான சூழல் இங்கு வருபவர்களுக்கு மன அமைதியையும் ஓய்வையும் தரும். கக்கச்சியும், நலுமுக்கும் மாஞ்சோலை மலையின் அருகில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள்.

Mcasankar

முண்டந்துறை களக்காடு புலிகள் காப்பகம்

முண்டந்துறை களக்காடு புலிகள் காப்பகம்


மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள முண்டந்துறை களக்காடு புலிகள் காப்பகத்தில் புலிகளைத் தவிர சிறுத்தைகள், நரிகள், கழுதைப் புலிகள், காட்டுப் பூனைகள் மற்றும் மான்களையும் பார்க்க முடியும். மிருகங்களைத் தவிர இந்த சரணாலயத்தில் ஈர்க்கப்படும் மற்றொரு சிறப்பு மலைகளில் மற்றும் காட்டுப் பாதையில் நடை பயணம் செய்ய 24 விதமான பாதைகள் உள்ளன. இந்த சரணாலயத்திற்கு வாரத்தில் 7 நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்று வரலாம்.

John and Karen

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில், சோழன் எக்ஸ்பிரஸ், ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சிறப்பு ரயில், திருச்செந்தூர், மன்னை எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் என பல ரயில் சேவைகள் பாபநாசத்திற்கு செல்ல உள்ளது. திருவணந்தபுரம் சர்வதேச விமான நிலையம் இதன் அருகில் உள்ளதாகும்.

Binai Sankar

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்