Search
  • Follow NativePlanet
Share
» »பூஞ்ச் கோட்டைக்கு ஒரு வரலாற்று பயணம் போகலாமா?

பூஞ்ச் கோட்டைக்கு ஒரு வரலாற்று பயணம் போகலாமா?

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த பூஞ்ச் எனும் நகரமாகும். இந்த நகரத்தில் இருக்கும் பூஞ்ச் கோட்டை மிகவும் சிறப்பு வாய்ந்துது. அதுமட்டுமில்லாமல் இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்

By Udhaya

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த பூஞ்ச் எனும் நகரமாகும். இந்த நகரத்தில் இருக்கும் பூஞ்ச் கோட்டை மிகவும் சிறப்பு வாய்ந்துது. அதுமட்டுமில்லாமல் இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன வாருங்கள் சுற்றிவிட்டு வரலாம்.

 பூஞ்ச் கோட்டை

பூஞ்ச் கோட்டை


பூஞ்ச் கோட்டை அல்லது பூஞ்ச் கிலா, பூஞ்ச் நகரில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். இது 16 ஆம் நூற்றாண்டு முதல் உள்ள ஒரு பண்டைய கோட்டை. பூஞ்ச் ராஜா ரஸ்தம் கான் மூலம் 1713 ல், முகலாயர்களின் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது. பூஞ்ச் கோட்டையின் கட்டுமான பணி முடிக்க பல ஆண்டுகள் பிடித்தன.

Sawerkar Sharma

கோட்டையில் மாற்றங்கள்

கோட்டையில் மாற்றங்கள்

சீக்கியர்கள் ஆட்சி காலத்தில், கோட்டையின் பிரதான பகுதிகளின் கட்டிடக்கலையில் சீக்கிய பாணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பூஞ்சில் உள்ள டோக்ரா ராஜை நிறுவிய ராஜா மோடி சிங், கோட்டையின் முன் தடுப்பு அமைப்பை அழகுபடுத்த ஐரோப்பாவில் இருந்து கட்டிடக்கலை நிபுனர்களை வரவழைத்தார்.
Sawerkar Sharma

செயிண்ட் இல்லாஹி பக்ஷ் சாஹிப்

செயிண்ட் இல்லாஹி பக்ஷ் சாஹிப்

சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப், செயிண்ட் இல்லாஹி பக்ஷ் சாஹிப் என அறியப்படும் ஒரு பிரபலமான சூஃபி செயிண்டின் கோவிலாக‌ உள்ளது. இது பூஞ்சில் இருந்து 37 கி.மீ. தொலைவில் பட்டல்கோட் கிராமத்தில் அமைந்துள்ளது.

நைன் சுக் மற்றும் நந்தி ஷூல் என்ற இரண்டு ஊற்றுகள் சங்கமிக்கும் இடத்தில் பிர் பஞ்சால் மலைத்தொடர் மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமம்,பட்டல்கோட்.

இந்த இடத்தை சுற்றி அடர்ந்த‌ காடுகள், அழகிய மலைகள், மக்காச்சோள வயல்கள் மற்றும் நீர் நிலைகள் எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

1948 இல் இங்கு வந்த சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப் , தனது வாழ்நாள் முழுவதும் இங்கு வாழ்ந்து , மே 16 , 1976ல் இறந்தார். அவரது மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் , அவர் விரைவில் இறந்து போவார் என்று அவரது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார்.

அவரது இறப்பிற்கு முன் அவரே தன்னை புதைப்பதற்கான‌ இடத்தையும் தேர்வு செய்தார். மூன்று நாட்கள் பொது பார்வையில் அவரது உடலை வெளிப்படுத்தக் கோரினார். ஒரு சூஃபி துறவியாக, ஒரு போதகராக, அவர் தொடர்ந்து சகோதரத்துவம், சமாதானம் மற்றும் அன்பைப் பரப்பும் வேலையை செய்துவந்தார்.

ஒவ்வொரு ஆண்டும்,மே மாதம் செயிண்ட் சாஹிப் நினைவாக நடைபெறும் உர்ஸில் பெரிய எண்ணிக்கையில் பக்தர்கள் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகள் இன்றி பங்கேற்கின்றனர்.

பெஹ்ரம்கலா

பெஹ்ரம்கலா

பெஹ்ரம்கலா, பூஞ்ச் மாவட்டத்தின் பிரம்பு பீக்கில் 8600 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். அழகிய மலைகளும் அடர்ந்த‌ காடுகளும் சூழ, பர்னை மற்றும் தட்டாபானி எனும் இரண்டு நீரோடைகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது.

ராம்குந்த் மந்திர்

ராம்குந்த் மந்திர்

ராம்குந்த் மந்திர், பூஞ்ச்சில் உள்ள மந்தார் கிராமத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ராம் குந்த், சீதா குந்த் லக்ஷ்மன் குந்த் என இந்தக் கோவிலில் மூன்று ஊற்றுகள் உள்ளன. சித்திரை மாதம் , பெரிய எண்ணிக்கையில் பக்தர்கள் இந்த நீர் நிலைகளில் நீராடுகின்றனர்.

ஸ்ரீ தஷ்னாமி அக்கார‌ மந்திர்

ஸ்ரீ தஷ்னாமி அக்கார‌ மந்திர்

ஸ்ரீ தஷ்னாமி அக்கார‌ மந்திர் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள மிக பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். 1760 போது, மத குரு சுவாமி ஜவஹர் கிரி ஜி இங்கே வந்தார். அப்போது பேரரசர் ரஸ்தம் கான், சுவாமி ஜிக்கு அஞ்சலி செலுத்த இங்கே விஜயம் செய்தார். அவரது நினைவாக, ராஜா இந்த இடத்தில் இன்னும் நிலங்களை சேர்த்தார். சுவாமி ஜி இங்கே வாழ்ந்து 1787 ல் சமாதியானார். கோவில் வளாகத்தில் உள்ள அவரது சமாதியை பக்தர்கள் பார்க்க முடியும். பின்னர் ஷமயா நந்த ஜி என்ற ஒரு பெரிய அறிஞர் உட்பட பல குருக்கள் இங்கே வந்தனர். ஷமயா நந்த ஜி, கோவிலில் ஒரு சமஸ்கிருத பள்ளி தொடங்கினார் . சுவாமி ஷங்கரய்ய‌ நந்த கிரி ஜி, சுவாமி பர்மா நந்த ஜி, மற்றும் சுவாமி சத்ய நந்த சரஸ்வதி ஆகியோர் இங்கே தங்கிய மற்ற ஆன்மீக குருக்கள். இந்த நேரத்தில், ஸ்ரீ தஷ்னாமி அக்கார‌ மந்திரின் தலைமை இருக்கை சுவாமி சத்ய தேவ் ஜியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சாரி முபாரக் அல்லது புனித தண்டாயுதம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் அன்று பெரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிர்கன் தோக்

கிர்கன் தோக்


ஏழு ஏரிகள் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் கிர்கன் தோக், பூஞ்சில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் கும்சாகர், கல்டாக்னிசர், நந்தன்சர், பக்சர், நீல்சர், கடோரசர் மற்றும் சுக்சர் ஆகிய ஏழு ஏரிகள் கொண்ட இந்த அழகான அற்புதமான பள்ளத்தாக்கை கண்டிப்பாக பார்க்க வேண்டும். கடல் மட்டத்தில் இருந்து 12000 அடி உயரத்தில் பஃப்லியாஸ் பெல்டில் இந்தப் பள்ளத்தாக்கு உள்ளது. 1 மைல் நீளம் மற்றும் அரை மைல் அகலம் கொண்ட நந்தன்சர் ஏரியே இவற்றில் மிகப்பெரியது. பார்வையாளர்கள் பெரிய அளவில் இங்கு வந்து, இந்த இடத்தின் கண்ணுக்கினிய அழகை கண்டு ரசிக்கின்றனர்.

poonch.gov.in

நந்தி ஷூல் நீர்வீழ்ச்சி

நந்தி ஷூல் நீர்வீழ்ச்சி


நந்தி ஷூல், லோரன் கிராமத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகான நீர்வீழ்ச்சி . பிர் பஞ்சாலில், 150 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. ஊரக மேம்பாட்டு துறை இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகே சுற்றுலா குடிலை உருவாக்கியுள்ளது

More News

Read more about: travel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+