» »ராஜஸ்தான் காடுகளுக்குள் ஒரு கலாச்சார சுற்றுலா போகலாம்! #காட்டுயிர்வாழ்க்கை 13

ராஜஸ்தான் காடுகளுக்குள் ஒரு கலாச்சார சுற்றுலா போகலாம்! #காட்டுயிர்வாழ்க்கை 13

Written By: Udhaya

ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ள மௌண்ட் அபு ஒரு பிரசித்தமான மலைவாசஸ்தலம் எனும் புகழை பெற்றுள்ளது. இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும் ஏரிகள், கலையம்சம் கொண்ட கோயில்கள் மற்றும் பல ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்கள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. 1200 மீட்டர் உயரத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்தில் இந்த மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது. இத்துடன் சேர்த்து நிறைய இடங்கள் ராஜஸ்தானின் காடுகளில் காண்பதற்கு இருக்கிறது. வாருங்கள் செல்லலாம்.

ஒடிசா காட்டுக்குள்ள ஒய்யாரமாய் ஓர் பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 12

சூரிய மறைவு முனை

சூரிய மறைவு முனை

மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் பிரசித்தமான மாலைநேர பொழுதுபோக்குத்தலமாக இந்த சன்செட் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளம் பிரசித்தி பெற்றுள்ளது. இது நக்கி ஏரிக்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சுற்றிலுமுள்ள மலைக்காட்சிகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகு போன்றவற்றை ரசிப்பதற்கான பொருத்தமான அமைப்பினை இந்த இடம் பெற்றுள்ளது.கோடைக்காலத்தில் அதிகமான சுற்றுலாப்பயணிகளை இந்த மலைக்காட்சி தளம் ஈர்க்கிறது. இக்காலத்தில் இந்த இடத்தில் நிலவும் குளுமை பயணிகள் பெரிதும் ரசிக்கும் அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும், இந்த இடத்துக்கு அருகிலேயே உள்ள ஹனிமூன் பாயிண்ட் எனுமிடத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. பயணிகள் இங்கு நினைவுப்பொருட்கள், மரப்பொம்மைகள், கொலுசுகள் மற்றும் பொம்மைகள் போன்றவற்றை வாங்கலாம்.
unknown

 தூத் பாவ்ரி

தூத் பாவ்ரி

ஆதார் தேவி கோயிலின் படிக்கட்டுகளில் அமைந்திருக்கும் இந்த தூத் பாவ்ரி எனும் புனிதக்கிணறு மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலுள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கிணற்றின் நீர் பால் போன்ற நிறத்தைக் கொண்டிருப்பதால் இது பால்கிணறு என்ற பொருள்படும் தூத் பாவ்ரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த கிணற்றின் நீர் வெண்ணிறமாக காணப்படுவது குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஒருகாலத்தில் இந்த கிணறு கடவுள்களுக்கு பால் வழங்கிய ஆதாரமாக இருந்ததாக புராணிக நம்பிக்கை நிலவுகிறது.
unknown

ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில்

ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில்

மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தின் முக்கியமான ஆன்மிக அம்சமாக இந்த ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில் திகழ்கிறது. இது நக்கி ஏரியின் கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமானந்த் எனும் இந்து யோகியால் 14ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டுள்ளது. விஷ்ணு கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு வைணவ பக்தர்கள் ஏராளமான எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.சுவர் கல்வெட்டுகள் மற்றும் நுட்பமான சிற்பவடிப்புகள் ஆகிய அம்சங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோயில் மேவார் வம்ச கட்டிடக்கலை மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

unknown

ஆச்சால்கர் கோட்டை

ஆச்சால்கர் கோட்டை

மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள ராஜ்மச்சி எனும் சிறு கிராமத்தில் இந்த பிரசித்தமான ஆச்சால்கர் எனும் கோட்டை அமைந்துள்ளது. மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைக்கு தவறாமல் விஜயம் செய்கின்றனர். ஆதியில் பர்மாரா ராஜவம்சத்தினரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பின்னர் 1452ம் ஆண்டில் மேவார் மன்னர் ராணா கும்பாவால் புதுப்பித்து உருவாக்கப்பட்டுள்ளது.
unknown

மூல் சாகர்

மூல் சாகர்


ஜெய்சல்மேரிலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த மூல் சாகர் ஆகும். சாம் மணற்குன்றுகளுக்கு செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. ஒரு அழகிய தோட்டம் மற்றும் தடாகத்தை உள்ளடக்கிய இந்த ஸ்தலம் அக்காலத்தில் ராஜ குடும்பத்தினர் கோடைக்காலத்தில் விஜயம் செய்து ஓய்வெடுக்கும் இடமாக திகழ்ந்துள்ளது. இத்தோட்டத்தினுள் ஒரு சிவன் கோயிலையும் பயணிகள் காணலாம். இக்கோயில் இரண்டு பெரிய மணற்பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மஹரவால் மூல்ராஜ் இந்த மூல் சாகர் வளாகத்தை 1818ம் ஆண்டில் உருவாக்கியுள்ளார்.
unknown

 கோபா சௌக்

கோபா சௌக்

சூரிய அஸ்தமனத்தின் அழகுக்காட்சிகளை கண்டு ரசிப்பதற்கு மிகவும் பிரசித்தமான ஸ்தலம் இந்த கோபா சௌக் ஆகும். இது ஜெய்சல்மேர் நகரின் பிரதான ‘மார்க்கெட்' பகுதியாக ஜெய்சல்மேர் கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும், கோபா சௌக்கிற்கு மேற்குப்புறத்தில் காந்தி சௌக் அமைந்துள்ளது. ஜெய்சல்மேர் கோட்டையின் முதல் வாசலான ‘அகாய் போல்' கோபா சௌக்கிற்கு நேர் எதிரில் உள்ளது.
unknown

ஜெய்சல்மேர் நாட்டுப்புறக்கலை அருங்காட்சியகம்

ஜெய்சல்மேர் நாட்டுப்புறக்கலை அருங்காட்சியகம்


ஜெய்சல்மேர் நாட்டுப்புறக்கலை அருங்காட்சியகம் காட்ஸிஸார் ஏரியில் கரையில் அமைந்துள்ளது. இது என்.கே.ஷர்மா அவர்களால் 1984ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் ஜெய்சல்மேரின் செழுமையான பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜெய்சல்மேர் நகரின் பரிணாம வளர்ச்சியை இங்குள்ள அருங்கலை பொருட்கள் மற்றும் புராதன சான்றுகள் மூலம் பயணிகள் அறிந்து கொள்ளலாம்.
unknown

டாசியா டவர்

டாசியா டவர்

ஐந்து அடுக்குகளால் ஆன இந்த டாசியா டவர் ஜெய்சல்மேர் நகரத்தில் பாதல் அரண்மனை வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. முஸ்லிம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம் ராஜா ‘மஹரவால் பெரிசால் சிங்' கிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கோபுர அமைப்பின் கட்டிடக்கலை பாணியானது முகர்ரம் பண்டிகையின்போது எடுத்துச்செல்லப்படும் டாசியா (கர்பாலாவில் பின்பற்றப்பட்ட சடங்கு) எனும் மூங்கில் அல்லது மரத்தால் ஆன புனிதப்பொருளை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

unknown

சரிஸ்கா தேசியப்பூங்கா

சரிஸ்கா தேசியப்பூங்கா

சரிஸ்கா தேசியப்பூங்கா என்றும் அழைக்கப்படுகிற சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம்' ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் டெல்லி-அல்வர்-ஜெய்ப்பூர் சாலைக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி அக்காலத்திய அல்வர் ராஜவம்சத்தினருக்கு வேட்டைக்களமாக திகழ்ந்துள்ளது. இந்த தேசிய இயற்கைப்பூங்கா இயற்கை வனப்புடன் காட்சியளிக்கும் ஆரவல்லி மலைத்தொடரில் 800 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இது புல்வெளிப்பகுதி, வறண்ட இலையுதிர்காடுகள், செங்குத்தான சிகரங்கள் மற்றும் பாறைப்பிரதேசங்கள் என்று பலவகை நிலப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலும் இக்காட்டுப்பகுதியில் தோக் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன.
voa

சரிஸ்கா அரண்மனை

சரிஸ்கா அரண்மனை

சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் உள்ள இந்த சரிஸ்கா அரண்மனை 1902ம் ஆண்டில் கட்டப்பட்டு அல்வர் மஹாராஜாக்களின் வேட்டை மாளிகையாக பயன்பட்டுள்ளது. பலவிதமான கட்டிடக்கலை அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அரண்மனை தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
unknown

பன்கர் கோட்டை

பன்கர் கோட்டை

ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் இந்த பன்கர் கோட்டை எனும் புராதன கோட்டை உள்ளது. ஆம்பேர் நகரைச் சேர்ந்த கீர்த்தி பெற்ற முகலாய தளபதியான மான் சிங் என்பவரின் மகன் மாதவ் சிங் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. சிதிலமடைந்து காணப்படும் இந்த கோட்டையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சுவரும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த கோட்டை வளாகத்தில் இயற்கை நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகள், பூங்காத்தோட்டங்கள், ஹவேலிகள் மற்றும் ஆல மரங்கள் போன்றவை காணப்படுகின்றன.

ஒடிசா காட்டுக்குள்ள ஒய்யாரமாய் ஓர் பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 12

Shahnawaz Sid

Read more about: travel forest rajasthan summer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்