» »நவீன கட்டிட தொழில்நுட்பத்திற்கு சவால்விடும் 4 நூற்றாண்டு கடந்த பாலம்...

நவீன கட்டிட தொழில்நுட்பத்திற்கு சவால்விடும் 4 நூற்றாண்டு கடந்த பாலம்...

Written By: Sabarish

மனித நாகரிக வளர்ச்சியின் ஓர் மைல்கல்லாக பாலம் விலங்குகின்றது. பல்வேறு தேவைகளுக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உருவாக்கப்பட்ட பாலங்கள் காலப்போக்கில் பல்வேறு பரிநாம வளர்ச்சிகளைக் கண்டது. இந்தியாவில் பிரித்தானிய காலனி ஆதிக்கத்துக்கு முன்பு, முந்தைய காலகட்டத்தில் கட்டப்பட்ட பாலங்கள் பல இருப்பினும், பல விரிவாக்கத்துடன் பிரித்தானிய அரசு கட்டமைத்த பாலங்கள் இன்றளவும் நம்மாள் காண முடியும். இதனைத் தவிர்த்து இந்தியாவில் பல்வேறு வரலாற்றுகளைச் சுமந்து நிற்கும் கலைக்கலஞ்சிய பாலம் குறித்து அறிவீர்களா ?

ஷாஹி பிரிட்ஜ்

ஷாஹி பிரிட்ஜ்


ஷாஹி பிரிட்ஜ், அக்பரி பிரிட்ஜ், முனீம் கான் பிரிட்ஜ் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த பாலமானது ஜௌன்பூரில் உள்ளது. இது முனிம் கான் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. அப்சல் அலி எனும் ஆப்கானிய கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்ட இந்த பாலம் கோமதி ஆற்றின் குறுக்கே 1568- 1569ம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது ஜௌன்பூரில் முகலாயர் கால கட்டிடக்கலையின் முக்கிய சான்றாக இந்த புராதனமான பாலம் வீற்றுள்ளது.

Sayed Mohammad Faiz Haider

விசித்திர கலையம்சம்

விசித்திர கலையம்சம்


ஒரு வித்தியாசமான கட்டிடக்கலை படைப்பான இந்த பாலம் அரண்மனை வாயில்களில் காணப்படும் பிரம்மாண்ட விதானவளைவைப் போன்ற தூண் அமைப்புகளின் தொகுப்பு பாலமாக அமைந்திருக்கிறது.

Varun Shiv Kapur

தொழில்நுட்பத்திற்கே சவால்

தொழில்நுட்பத்திற்கே சவால்


இந்தப் பாலத்தை நேரில் பார்க்கும்போது இப்படி ஒரு பாலத்தை கற்பனை செய்ய முடிந்த அந்த கலைஞனின் திறமையை நம்மால் வியக்காமல் இருக்க முடியாது. அதுமட்டுமல்ல, சீர்மை கெடாத கட்டுமான நேர்த்தி இன்று நவீன சாதனங்களுடன் எழுப்பப்படும் கட்டிடங்களுக்கே சவால் விடும்படியாக இந்த புராதன பாலத்தில் ஒளிர்கிறது.

Sayed Mohammad Faiz Haider

நுணுக்கங்கள்

நுணுக்கங்கள்


காலத்தின் சீற்றம் கூட சீண்டிப்பார்க்காத இந்த பாலத்தின் வலிமை வியப்புக்குரியது. பாலத்தில் இருபுறமும் கலைநயத்துடன் கூடிய காட்சி மாடங்கள் நுணுக்கமான அலங்கார அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Faizhaider

ஆழமான அறிவியல்

ஆழமான அறிவியல்


தூண்கள் அமைந்திருக்கும் கோணம், அவற்றின் பிரம்மாண்ட பருமன் போன்றவை இதனை வடிவமைத்த கலைஞர்களின் ஆழமான அறிவியல் தொழில் நுட்ப அறிவை புலப்படுத்துகின்றன. இன்றும் இந்த பாலம் முழுமையாக போக்குவரத்திற்கு பயன்படுகிறது என்பது மிக வியப்புக்குரிய ஒன்றாகும். வெளிநாட்டு விஞ்ஞானிகளும் இங்கே வந்தால் வாயப்பொழக்கவைக்குது இந்த பாலம் என்றே சொல்லலாம்.

Faizhaider

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


ஜௌன்பூரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பாலம் இந்தியாவிலுள்ள வரலாற்று ஆர்வலர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், வடிவமைப்புக்கலை மாணவர்கள் போன்றோர் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். முகலாயர் கலை பாரசீகக்கலை இந்துக்கலை எனும் வரையறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு சுமார் 440 வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு கட்டுமானம் நம்மண்ணில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.

Anabeel12

அருகில் என்ன உள்ளது ?

அருகில் என்ன உள்ளது ?


அடாலா மசூதி, ஷாகி குயிலா, ஜமா மஸ்ஜித், லால் தர்வாசா மஸ்ஜித் உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாத் தலங்கள் ஷாஹி பிரிட்ஜின் அருகருகே அமைந்துள்ளன. ஷாஹி குய்லா என்று அழைக்கப்படும் ராஜ கோட்டையானது கோமதி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள ஷாஹி பிரிட்ஜ்'க்கு அருகிலேயே உள்ளது. முகாலயப்படைகளால் சூறையாடப்பட்ட கோவில்களில் கிடைத்த பொருட்களை கொண்டு இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Prithwiraj Dhang

போக்குவரத்து வசதிகள்

போக்குவரத்து வசதிகள்


விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் ஆகிய மூவழி போக்குவரத்து அம்சங்கள் மூலமும் எளிதாக இந்த ஜௌன்பூர் நகரத்தை அடையலாம். டெல்லியிலிருந்து இந்நகருக்கு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

Athlur

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்