» »கொஞ்சம் சைலன்டா வாங்க பாஸ்... நாம போகபோறது சைலன்ட் வேலி..!

கொஞ்சம் சைலன்டா வாங்க பாஸ்... நாம போகபோறது சைலன்ட் வேலி..!

Written By: Sabarish

ஒவ்வொரு முறையும் நான் கடவுளின் சொந்த தேசம்தான் என பட்டா ஆவணமின்றி நிறுபித்து வருகிறது நம் அண்டை மாநிலமான கேரளா. கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமைக்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரில் உயர்ந்து நிற்கும் பனை மரங்களும், அடர்ந்த வெப்ப மண்டல காடுகளும், மலைக் குன்றுகளும் சூழ அமைந்திருக்கும் பேரழகை நாள்பூராவும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இத்தகைய பசுமை நிறைந்த பாலக்காட்டில் திகிலூட்டும் ஓர் அற்புத வனக்காடு இருப்பது பெரும்பாலானோர் அறியாத ஒன்று.

அதுவும் நம்ம ஊர்தான் பாஸ்..!

அதுவும் நம்ம ஊர்தான் பாஸ்..!


பாலக்காடு நகரில் அமைந்திருக்கும் பாலக்காடு சுரம், கேரளாவின் மற்ற நகரங்களிலிருந்து வருபவர்களுக்கும், தமிழ்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கும் நுழைவாயிலாக திகழ்ந்து வருகிறது. அதோடு கேரளாவின் மற்ற மாவட்டங்களை போல் அல்லாமல் பாலக்காடில் அதிக அளவில் தமிழ் பேசும் மக்கள் வசித்து வருவதால் தனித்துவமான கலாச்சாரத்தினை இந்த நகரம் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லைங்க, தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் பாலக்காடில் நீங்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கலவையில் மாறுபட்ட உணவு வகைகளை ருசிக்கலாம்.

Raj

அப்படி என்னதான் இங்க இருக்கு?

அப்படி என்னதான் இங்க இருக்கு?


பாலக்காடில் கோட்டைகள், கோவில்கள், அணைகள், வனவிலங்கு சரணாலயங்கள், அருவிகள், பூங்காக்கள் என்று பயணிகளுக்கு எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் காத்துக்கிடக்கின்றன. இவற்றில் பாலக்காடு கோட்டையும், ஜெயின் கோவிலும் வரலாற்றுப் பிரியர்களை அதிகமாக ஈர்க்கும் தலங்கள். இதைத்தவிர மலம்புழா அணை மற்றும் தோட்டத்துடன் கூடிய கேளிக்கை பூங்கா புகழ்பெற்ற பிக்னிக் தலமாக விளங்கி வருகிறது.

Animish Phatak

நெல்லியம்பதி

நெல்லியம்பதி


நெல்லியம்பதி மலைப்பிரதேசம், பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்டவை இயற்கை ரசிகர்களுக்கும், காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடங்களாக இருப்பதுடன், மறக்க முடியாத விடுமுறை அனுபவமாகவும் இருக்கும். மேலும், காஞ்சிரப்புழா, தோணி அருவி, ஒட்டப்பாலம், கொல்லேன்கோடு அரண்மனை, தென்குருசி போன்ற இடங்களும் நீங்கள் பாலக்காடு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

Baburajpm

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கேரள மாநிலம், பாலக்காடு நகரை ரயில் மற்றும் சாலை மூலமாக எளிதாக அடைந்து விடலாம். அதோடு இந்த நகரின் வெப்பநிலை கோடை காலத்தை தவிர மற்ற காலங்களில் மிகவும் இதமானதாகவே இருக்கும். இந்த மாவட்டத்தின் பாரம்பரியமும், இயற்கை காட்சிகளும், வண்ணமயமான திருவிழாக்களும் பாலக்காடு மாவட்டத்தை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கின்றன.

Dilshad Roshan

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம்

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம்


பாலக்காடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சமான பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு தெற்கு பகுதியில், சங்கம் மலை தொடர்களுக்கு குறுக்காக அமைந்திருக்கிறது. இந்த புத்துணர்ச்சியூட்டும் கவர்ச்சிகரமான காட்டுப் பகுதியில் ஏராளமான விலங்குகளையும், எண்ணற்ற தாவர வகைகளையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.

PP Yoonus

புகைப்பட கலைஞர்களே..!!

புகைப்பட கலைஞர்களே..!!


பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் மையப்பகுதி, இடைப்பகுதி, சுற்றுலாப்பகுதி என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் புலி, சிறுத்தை, ஆசிய யானை, காட்டெருமை, கண்ணாடி விரியன், நீலகிரி நீலவால் குரங்கு, சாம்பார் மான், புள்ளி மான், இந்திய காட்டு நாய், ஆமை போன்ற ஜீவ ராசிகளை கண்டு ரசிக்கலாம். மேலும், இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் சலீம் அலி பேர்ட் இன்டெர்பிரட்டேஷன் சென்டர் மற்றும் சலீம் அலி கேல்லி போன்ற இடங்கள் பறவை காதலர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் பொருத்தமான இடமாக இருக்கும்.

Gowthaman k.a

பரம்பிக்குளம்

பரம்பிக்குளம்


பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் நடைபயணம் செல்வதற்கு மிகவும் ஏற்ற இடம். அதோடு இயற்கையின் மறைத்துவைக்கப்பட்ட அற்புதங்களை ஆழமாக உள்ளே சென்று அறிய விரும்பும் சாகச நெஞ்சங்களின் வருகைக்காக ஜங்கிள் கேம்ப்ஸ், நைட் பேக்கேஜஸ், நேச்சர் எஜுகேஷன் பேக்கேஜஸ், போட் குரூசஸ், டிரீ ஹௌசஸ் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன.

Parambikulam

தோணி அருவி

தோணி அருவி


தோணி அருவி பாலக்காடு நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோணி எனும் சிறிய மலைப்பாங்கான குக்கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகளின் காலடி அதிக அளவில்படவில்லை என்றாலும், பசுமையான அடர் வனங்களின் மத்தியில் காட்சியளிக்கும் அருவியின் கவின் தோற்றம் காண்போரை சொக்கவைத்து விடும். அதோடு இயற்கையின் அற்புதப் படைப்பை அருகில் காணும் அலாதியான அனுபவத்தை அடைய விரும்புவர்கள் தோணி அருவியை கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டும்.

Karthiksoman2014

உஸ்ஸ்ஸ், சைலன்ட்..!

உஸ்ஸ்ஸ், சைலன்ட்..!


கேரளாவில் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் மாசுபடாத அடர் வனப்பகுதி சைலன்ட் வேலி. இங்கு, குடிகொண்டிருக்கும் அழகும், வனத்துறையினரின் கடுமையான பாதுகாப்பும் கொஞ்சம் திகில் நிறைந்த வனக்காடாகவே காட்சியளிக்கும். கோவையில் இருந்து சுமார் 161 கிலோ மீட்டர் தொலைவில், கேரள எல்லையில் உள்ள சைலன்ட் வேலிக்குச் செல்ல வேண்டுமென்றால், மனதிலும், உடலிலும் நல்ல தெம்பு வேணும் பாஸ்.

Lijo Lawrance

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


பேருந்து, பெரிய அளவிலான சுற்றுலா வாகனம் எல்லாம் இங்க போக உதவாது. கார், பைக் வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த ட்ரிப்புக்கு திட்டமிடுவது நல்லது. சென்னையில் இருந்து இப்பகுதிக்கு விமானம் மூலம் வர திட்டமிட்டீர்கள் என்றால் கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து 161 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக பயணம் செய்ய வேண்டும். அல்லது, கொச்சின் விமான நிலையத்தில் இருந்து பாலக்காட்டிற்கு 112 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.

Ashwin Kumar

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?


காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் அனுமதி. ஒரு ஜீப் ஓட்டுநர், ஒரு வனத்துறை அதிகாரியின் பாதுகாப்புடன் நம்மை அழைத்துச் சென்றுவர, ஒரு ஜீப்புக்கு 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். கேரளக் காடுகளில், யானைகளின் வழித்தடத்தின் இறுதி எல்லை சைலன்ட் வேலி என்பதால், செல்லும் வழியில் நிச்சயம் யானைகளைக் காணும் வாய்ப்பு உள்ளது. மலபார் அணில்கள், நாகப் பாம்புகள், மலைப் பாம்புகள், சிறுத்தைகள், புலி என்று இயற்கையுடன் நாமும் ஒன்றிணைந்து பயணிக்கலாம்.

Jaseem Hamza

கோர் ஃபாரஸ்ட்

கோர் ஃபாரஸ்ட்


ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியா எல்லையின் முடிவில், கோர் ஃபாரஸ்ட் எனும் அடர்ந்த காட்டுப் பகுதி ஆரம்பமாகிறது. இங்கிருந்து நடந்துதான் செல்ல வேண்டும். மனதில் திடமும், கால்களில் வேகமும் உள்ளவர்களுக்கான பகுதி இது. குறிப்பாக, தண்ணீர் எடுத்துச் செல்ல தவறவிட்டுராதீங்க.

Lijo Lawrance

உல்லாச விடுதிகள்

உல்லாச விடுதிகள்


சைலன்ட் வேலியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், பிக்னிக் விரும்பிகளுக்காகவும் உள்ளாச விடுதிகள் அகிம் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதிலும் உங்களுக்கு நல்ல சாய்ஸ் இருக்கு. உங்களின் வசதிக்கேற்ப ஆயிரம் ரூபாயில இருந்து மரத்தினாலான தங்கும் வசதிகொண்ட அறைகள் என கொஞ்சம் காஸ்ட்லியான ரூம்கூட இருக்கு. அப்புறம் என்ன அடுத்துவர வார விடுமுறையில ஜாலியா, பாதுகாப்பா சைலன்ட் வேலிக்கு ஒரு ட்ரிப் போய்ட்டு வாங்களேன்.

Nuveen60

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்