» »விளம்பி புத்தாண்டில் 12ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறதாம் பணமழை! - 2

விளம்பி புத்தாண்டில் 12ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறதாம் பணமழை! - 2

Written By: Udhaya

அதிர்ஷ்டத்தை மட்டும் நம்புபவன் முட்டாள் என்பார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். கடவுள் ஒருவனுக்கு அதிர்ஷ்டத்தை அளிப்பது அவனை தோல்வியில் துவலவிடாமல் அவனைக் காத்து மென்மேலும் அவனது முயற்சியை அதிகரிக்கவேயாகும். இதனால் அவன் ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டு வெறுமனே எந்த முயற்சியும் எடுக்காவிட்டால் எப்படி கடவுளின் அணுக்கிரகம் கிடைக்கும் அவனுக்கு. நம்புங்கள் கடவுள் சோம்பேறிகளுக்கு உதவமாட்டார். நாம்தான் மதம், சாதி ரீதியாக பிரிந்துகிடக்கிறோமே தவிர்த்து கடவுள் ஒருவரே. அவர் எல்லாரையும் சமமாகவே பார்க்கிறார். மேலும் நீங்கள் அவரது சன்னதியைத் தேடி சரணடைந்தால் அவர் உங்களைக் காப்பார். கடவுளின் சன்னதிக்கு செல்வதும் ஒரு வகையில் சுற்றுலாதானே. கோயிலுக்கு எதற்காக போகிறோம். மகிழ்ச்சியை தரவேண்டி, நிம்மதி தேடி அல்லவா. அப்போது அதுவும் சுற்றுலாவுக்கு நிகர்தானே. அதனால்தான் அதனை ஆன்மீக சுற்றுலா என்கின்றனர்,. வாருங்கள் உங்கள் ராசிக்கு எந்த கோயிலுக்கு செல்லலாம் என்பதை காண்போம்.

வரசித்தி விநாயகர் கோயில்

வரசித்தி விநாயகர் கோயில்

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அமைந்துள்ளது காணிப்பாக்கம் எனும் ஊர். இங்கு அமைந்துள்ள விநாயகர் கோயில் மிகவும் சிறப்புவாய்ந்தது. இந்த கோயிலில் விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த கோயிலுக்கு சென்று வருவதால் கணவன் மனைவி பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட கால நோய் தீரும். துலாம் ராசிக்காரர்கள் இந்த கோயிலுக்கு சென்றால் தொட்டது எல்லாம் பொன்னாகும். உடல்நல பாதிப்பு போன்ற ஒரு சில கஸ்டங்களையும் இந்த ஆண்டு உங்களுக்கு தரப்போகிறது என்பதால் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் பாதிப்பு குறையும்.

Ssriram mt

உக்கடம் அருள்மிகு ஹரிவரதராஜப் பெருமாள்

உக்கடம் அருள்மிகு ஹரிவரதராஜப் பெருமாள்

துலாம் ராசியுடையோருக்கு சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் போட்டியாளர்களிடம் வெற்றிபெருவீர்கள். இருப்பினும், ராகு, கேதுவுன் பார்வை அதிகமாக உள்ளதால் ஆளுமை திறன் குறைந்து பகை வளரும சூழல் ஏற்படும். இதில் இருந்து விடுபட கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடத்தில் உள்ள ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

கோயம்புத்தூரிலிருந்து நான்கு கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.

ஏரி காத்த ராமர் கோயில்

ஏரி காத்த ராமர் கோயில்

சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் அமைந்துள்ளது இந்த ஏரி காத்த ராமர் கோயில். ராம நவமி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஐந்து வித அலங்காரங்களுடன் சிறப்பாக கொண்டாடப்படும்.

Ssriram mt

 உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்

உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்

விருச்சிகம் ராசிக்குள்ளேயே குரு வருவதால் அனாவசிய அலைச்சல் குறைந்து பங்குதாரர்கள் மூலம் வரவு பெருகும். மேலும், ராகு 9ல் உள்ளதால் குடும்ப பெரியவர்களின் உடல்நலன் குறையும். இதில் இருந்து விடுபட திருச்சியில் உள்ள அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பரிகார பூஜை செய்து வர ஆரோக்கியம் பெருகும்.

பஞ்சமுக அனுமன் கோயில்

பஞ்சமுக அனுமன் கோயில்

சென்னை கவுரிவாக்கத்தில் அமைந்துள்ள பஞ்சமுக அனுமன் கோயிலுக்கு சென்று வந்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு பலவீனம் கூட பலமாகும். வீண் அலைச்சல் ஏற்படும். உடல் உபாதைகள், முயற்சிகளில் தடை ஏற்படலாம் என்பதால் பஞ்சமுக அனுமன் கோயிலுக்கு சென்று வருவது சிறந்தது. மேலும் இதனால் பொன், பொருள் சேரும், புதிய வீடு வாங்குவீர்கள், வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள்.

திருவாரூரில் தியாகராஜர் கோவில்

திருவாரூரில் தியாகராஜர் கோவில்


ஏப்ரல் 14 அன்று சுக்கிரன் மறைந்து ராகுவும், கேதுவும் ராசிக்குள் நுழைவதால் அனாவசியமான வாக்குவாதம், சந்தேகம், மன அமைதியின்மை உள்ளிட்டவை அதிகளவில் காணப்படும். திருவாரூரில் தியாகராஜர் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வர தேடிவந்த ராகு தெறித்து ஓடும்.

துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா? .. #Astrotemple3

துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா? .. #Astrotemple3

துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா? .. #Astrotemple3

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த இருக்கன்குடி மாரியம்மன் கோயில். இங்கு செல்வதால் மகர ராசிக் காரர்களுக்கு முயற்சிக்கு ஏற்ற வளர்ச்சி கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து நீங்கள் எளிதில மீண்டு வருவீர்கள். இதற்கு நீங்கள் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் வீட்டில் செல்வம் நிலைபெறும். வியாபாரம் செழிக்கும். வாழ்க்கை வளமாகும். வெளியூர் பயணம் , அலைச்சல் ஏற்படலாம். அதை மட்டும் பொறுத்துக்கொண்டால் இந்த ஆண்டு உங்களுக்கு நன்மை சேர்க்கும்.

wiki

மதுரை வீரராகப் பெருமாள்

மதுரை வீரராகப் பெருமாள்

மகர ராசி உடையோரே உங்களது ராசியில் குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத வகையில் தொழிலில் லாபம் பார்ப்பீர்கள். இறுப்பினும், ஏப்ரல் 14 முதல் 2019 பிப்ரவரி வரை ராசிக்குள் கேது நுழைவதால் தேவையற்ற வம்புகள், வீன் சலசலப்பு வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து தப்பிக்க, தேடி வரும் பொற்செல்வத்தை தக்கவைக்க மதுரையில் உள்ள வீரராகப் பெருமாளை வழிபட்டு வருவது யோகத்திற்கு வழிவகுக்கும்.

லட்சுமி நரசிம்மர் கோயில்

லட்சுமி நரசிம்மர் கோயில்

திருநெல்வேலி கீழப்பாவூரில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோயில். இங்கு கும்ப ராசிக்காரர்கள் சென்று வர வாழ்வில் வசந்தம் வீசும். துன்பங்கள் பறந்தோடி செல்வம் நிலைபெறும். இங்குள்ள மூலவர் 16 கரங்களுடன் உக்ரமாக காட்சிதருகிறார். இந்த கோயிலுக்கு சென்று வந்தால் வாங்கிய கடன்கள் தீரும். வரவேண்டிய கடன்கள் விரைவில் வந்துசேரும். நெய்தீபம் ஏற்றி பதினாறு முறை வலம் வந்தால் உங்கள் வாழ்வில் பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்.

Jean-Pierre Dalbéra

தர்மபுரி மல்லிகார்ஜூனேசுவரர் கோயில்

தர்மபுரி மல்லிகார்ஜூனேசுவரர் கோயில்

குரு, கேது, ராகு என ஒட்டுமொத்த சக்கரமும் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வருடம் இந்த தமிழ்புத்தாண்டு. பொருட்செல்வம் மட்டுமில்லைங்க, மக்கள் செல்வமும், நோய்நொடியற்ற வாழ்க்கைச் செல்வமும் வந்து குவியப் போகுது. இந்த வருடத்தை மேலும், மகிழ்விக்க, அவ்வப்போது ஏற்படவுள்ள சிறுசிறு இன்னல்களை துரத்தியடிக்க தர்மபுரியில் அமைந்துள்ள மல்லிகார்ஜூனேசுவரர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று புத்தாடை சாற்றி வழிபட்டு வருவது சிறந்தது.

திருபுவனம் கம்பகரேசுவரர் கோயில்

திருபுவனம் கம்பகரேசுவரர் கோயில்

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் அமைந்துள்ளது இந்த திருபுவனம் கம்பகரேசுவரர் கோயில். இது ஒரு சிவன் கோயில் ஆகும். மீன ராசி காரர்களுக்கு வெற்றி தேடி தரும் கோயில். குருவின் பார்வை செல்வங்களை அள்ளித் தட்டும். உங்களுக்கு போதும் போதுமெனும் அளவுக்கு இந்த ஆண்டு தரவிருக்கிறது. மேலும் மூத்தோர் ஆலோசனையை பின்பற்றி நடந்தால் வெற்றி உங்களுக்குத்தான்.
Subramanian

தேனி அருள்மிகு சுருளிவேலப்பர் ஆலயம்

தேனி அருள்மிகு சுருளிவேலப்பர் ஆலயம்

இந்த தமிழ்புத்தாண்டு உங்களுக்கான ஜாக்பாட் வருசங்குறதுல எந்த மாற்றமும் இல்லை. காரணம் பத்தாம் வீட்லேயே சனிபகவான் குடிகொண்டுள்ளார். தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் இந்த வருசத்துல தொழில் முன்னேற்றம், செல்வாக்கு அதிகரிப்பு, நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் என கூறைய பிச்சுக்கிட்டு வரப்போகுது வரம் உங்களுக்கு. இந்த அதிகப்படியான வாய்ப்புகளை தட்டிப் பறிக்க நினைக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் ஆதிக்கம் உங்களை விட்டு விலக தேனி மாவட்டத்துல உள்ள ஸ்ரீசுருளிவேலப்பரை வணங்குவது கட்டாயம்.

மகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்கே இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4

மகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்கே இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4

மகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்கே இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்