Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு நாள் சுற்றுலாவில் நிறைவேறும் பேராசை..!

ஒரு நாள் சுற்றுலாவில் நிறைவேறும் பேராசை..!

அனைத்துவிதமான அழகையும், பொழுதையும் மன நிறைவோடு ரசித்து வர ஒரு சுற்றுலாத் தலம் இருந்தால் அது நிறைவேறும் பேராசை தானே. அப்படிப்பட்ட இடம் தென்னிந்தியாவுல எங்க இருக்கு தெரியுமா ?

என்னடா இது, தலைப்புலேயே பேராசை இருக்குதுன்னு பாக்குறீங்களா.. ஆமாங்க, சிறு வயதில் இருந்தே நாம் கற்றுக் கொண்டு வருவதில் இந்த பேராசையும் ஒன்று. பேராசை பெரு நஷ்டம். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொள் என்று தான் அனைவரும் அறிவுரை வழங்குவர். அதையே, வாழ்நாள் முழுவதும் நாமும் கடைபிடித்து வருவோம். ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில இதுதான் கிடைக்கும் என நமக்குத் தெரிந்தும் அந்த தொகையை விட கூடுதலான மதிப்புடைய பொருளையே நா தேடிச் செல்வது பேராசையாக உள்ளது. சரி, அதுக்கும் இந்த பயணக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு இருக்கு ?. இருக்குங்க, ஒரே நாளில், ஒரு குறிப்பிட்ட தொகையில் ஆனால், அனைத்துவிதமான அழகையும், பொழுதையும், உணவையும் மன நிறைவோடு ரசித்து வரும்படியான ஒரு சுற்றுலாத் தலம் இருந்தால் அது நமக்கு நிறைவேறும் பேராசை தானே.அப்படி ஒரு இடம் நம்ம ஈஸியா போகுறமாதிரி இருந்தா நீங்க அத மிஸ் பண்ணுவீங்களா என்ன? வாங்க, அப்படிப்பட்ட இடம் நம்ம தென்னிந்தியாவுல எங்க இருக்குதுன்னு பாக்கலாம்.

கோவை - கேரளா

கோவை - கேரளா


கேரளா என்றாலே சுற்றுலாத் தலங்கள் நிறைந்த மாநிலம் தான். இங்குள்ள ஒவ்வொரு மாவட்டமும், எல்லைகளும் கடல், மலை, கோவில் என பல சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில், தமிழகத்தின் கோயம்புத்தூரில் இருந்து கேரளாவில் வார இறுதி நாளில் சென்று வர ஏற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று நெல்லியம்பதி மலைப் பிரதேசம்.

FlickrWarrior

நெல்லியம்பதி

நெல்லியம்பதி


பாலக்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது நெல்லியம்பதி. நின்மாறவில் இருந்து பனி மூட்டமும், மேகக் கூட்டங்களும் நிறைந்த நெல்லியம்பதி மலைப் பிரதேசத்தைக் கண்டு ரசிப்பதே கண்கொள்ளாக் காட்சியாகத் தான் இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 467 மீட்டர் முதல் 1,572 மீட்டர் வரை உயரத்தில் உள்ள நெல்லியம்பதிச் சென்றடை நின்மாறவில் இருந்து பாத்துண்டி அணை நோக்கி செல்லும் சாலை எளிதானது. மலைக் காட்டின் இருபுறமும் பசுமை நிறைந்த மரங்களை ரசித்த படியும், ஈரத்துளிகளுடன் நனைந்த இலையின் வாசனையும் நம் மனதை சொக்க வைத்திடும்.

Jaseem Hamza

பாத்துண்டி அணை - நெல்லியம்பதி

பாத்துண்டி அணை - நெல்லியம்பதி


படகு சவாரிக்கு ஏற்ற வசதிகளைக் கொண்ட அழகிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று பாத்துண்டி அணை. கேரளக் கணவாயில் ஒன்றான பாத்துண்டி அணையில் இருந்து நெல்லியம்பதி வரை வளைந்து, நெளிந்து செல்லும் சாலையில் இன்னும் எண்ணற்ற இயற்கைக் காட்சிகள் உங்களை வரவேற்கும். மலை முகடின் சற்று மேலே சென்றால் தனியாருக்குச் சொந்தமான பயிர்ப் பண்ணைகளையும், வெவ்வேறு வேளாண் குழுமங்களால் மேலாண்மை செய்யப்படும் பரந்த தேயிலைத் தோட்டங்களையும் காண முடியும். குறிப்பாக, நெல்லியம்பதி மலையில் பெரும்பாலாக பயிரிடப்பட்டிருக்கும் ஆரஞ்சு பழங்களையும் அப்படியே ருசிக்க வாய்ப்புகள் உள்ளது.

Zuhairali

காட்சி முனைகள்

காட்சி முனைகள்


நெல்லியம்பதி குன்றுகளுக்கு செல்லும் வழியில், பல இடங்களில் காட்சி முனைகள் உள்ளன. இவற்றின் அருகிலேயே உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் அமைந்திருப்பது தனச் சிறப்பு. சுற்றியும் தோட்டங்களும், வானுயர்ந்த மரங்களும் கொண்டு நடுவே அமைக்கப்பட்டுள்ள விடுதிக் குடில்கள் இரவில் மலைக் காட்டை ரசிக்க ஏற்றதாகும்.

Baburajpm

பிரிட்டிஸ் பங்களா

பிரிட்டிஸ் பங்களா


நெல்லியாம்பதியில் பலாகபாண்டி எஸ்டேட்டில் உள்ள உயரமான காட்சி முனைக்கு செல்லும் வழியில் பல்வேறு இயற்கை காட்சிகளை பார்க்கலாம். இந்த எஸ்டேட்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட புதுமையான பங்களாவும் உள்ளது. தற்போது இது தனியாருக்கு சொந்தமான ஒரு தங்கும் விடுதியாக மாறியுள்ளது. சாகச விரும்பிகளுக்காகவே கை காட்டி என்னும் பகுதியில் மலை ஏறுதலுக்கு ஏற்ற தலமும் உள்ளது.

Nuveen60

சீதக்குண்டு மலைச் சாரல்

சீதக்குண்டு மலைச் சாரல்


தேயிலை எஸ்டேட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ளது சீதக்குண்டு மலை. இங்கிருந்து கேரளத்தின் அருமையான பள்ளத்தாக்கு காட்சியைக் கண்டு மகிழலாம். மேலும், இங்குள்ள சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி, இதன் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. பலாகபாண்டியில் இருந்து வளத்துறை அல்லது உள்ளூர் மக்களின் வாகனத்தில் சென்றால் நெல்லியம்பதியின் நெஞ்சை அள்ளும் மம்பாறாவைச் சென்றடையலாம். இங்குள்ள காட்சி முனையில் இருந்து பசுமைச் சூழலில் சுற்றித் திரியும் யானைகள், சிறுத்தைகள், ராட்சத மலை அணில்கள் உள்ளிட்ட வனவிலங்குகளைக் கண்டு ரசிக்கலாம். புகைப்படக் கலைஞராக இருந்தால் உங்களுக்கு தனி விருந்துதான்.

Zuhairali

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


நெல்லியம்பதி மலைப் பகுதியில் மட்டுமே பல கோட்டைகள், ஆன்மீகத் தலங்கள், அணைகள், அருவிகள், சரணாலயங்கள் மற்றும் பூங்காக்கள் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல சுற்றுலா அம்சங்கள் குவிந்து கிடக்கின்றன. நீங்கள், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சென்றுள்ளீர்கள் என்றால் அவர்களது மனதைக் கவரும் வகையில் அணை மற்றும் தோட்டத்துடன் கூடிய கேளிக்கை பூங்கா உங்களுக்கு ஏற்ற பிக்னிக் தலமாகவும் இருக்கும்.

Kjrajesh

எப்போது, எப்படிச் செல்லலாம் ?

எப்போது, எப்படிச் செல்லலாம் ?


நெல்லியாம்பதி மலைப் பிரதேசம், வெப்பநிலை கோடை காலம் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் மிகவும் இதமானதாக இருக்கும். கோயம்புத்தூரில் இருந்து 107 கிலோ மீட்டர் கஞ்சிக்கோடு, நின்மாறா வழியாக அணைக் கடந்தால் மலைப் பாதை வழியாக நெல்லியாம்பதியை அடையலாம். மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் நெல்லியம்பதியை ரயில் மற்றும் சாலை மூலமாக எளிதாக அடைந்து விடலாம்.

Jaseem Hamza

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X