» »மகாராஷ்டிராவுல காட்டுயிர் வாழ்க்கை தேடி போகலாமா..!

மகாராஷ்டிராவுல காட்டுயிர் வாழ்க்கை தேடி போகலாமா..!

Written By:

மகாராஷ்டிராவில், ஆன்மீகத் தலங்கள், கோட்டைகள், கடற்கரைகள் என பல சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதற்காகவே ஆண்டுதோறும், இப்பகுதியை நோக்கி பயணிகள் படையெடுப்பர். எந்நேரமும் சுற்றுலாப் பயணிகளால் அலைமோதும் இப்பகுதிகளில் இருந்து விலகி, சற்று ஓய்வெடுக்க, இயற்கையுடன் ஒன்றிணைந்து ரசிக்க நீங்கள் திட்டமிட்டால் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த சரணாலயங்களுக்கு எல்லாம் சென்று வரலாம். இவை, உங்களது பயணத்தால் ஏற்படும் சோர்வை நீக்கி, மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சரி வாருங்கள், மகாராஷ்டிராவில் இந்த கோடை காலத்தில் எந்த சரணாலயங்களுக்கு எல்லாம் சென்றால் முழு இயற்கை அழகையும் ரசிக்கலாம் என பார்க்கலாம்.

திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம்

திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம்


யாவத்மால் மாவட்டத்தில் பந்தகவாடா தாலுக்காவில் அமைந்துள்ளது திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம். சுமார் 140 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த சரணாலயத்தில் தெற்குப்பிரதேச வறண்ட ஈரக்காடுகளும் மலைப்பாங்கான பசுமைச் சமவெளிப் பகுதிகளும் புதர்க் காடுகளும் காணப்படுகின்றன. அயோலா, அயின் மற்றும் தேக்கு மரங்கள் இங்குள்ள மரங்களில் குறிப்பிடத்தக்கவை. கறுப்புமான், புள்ளிமான், குரங்கு, சாம்பார் மான், முயல் போன்றவை இந்த சரணாலயத்தில் வசிக்கும் சில குறிப்பிடத்தக்க விலங்குகளாகும். கோடைகாலம் இந்த சரணாலயத்திற்கு பயணம் செய்ய ஏற்ற காலமாகும். யாவத்மால் ரயில் நிலையம் வழியாக இந்த சரணாலயத்தை சுலபமாக சென்றடையலாம்.

PJeganathan

நவேகாவ்ன் பந்த்

நவேகாவ்ன் பந்த்


நாக்பூர் அருகில் விதர்பா பிரதேசத்தில் காணப்படும் இந்த அணைக்கட்டு அருகில் உள்ள கானகப்பகுதி அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும சுற்றுலாத் தலமாகும். இங்குள்ள அணை கட்டப்படுவதற்கு கொலு படேல் கோஹ்லி என்பவர் மூல காரணமாக இருந்ததாக வரலாறு. ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அணைக்கட்டு அருகில் டாக்டர் சலீம் அலி பெயரில் பிரசித்தி பெற்ற பறவைகள் சரணாலயமும் வனவிலங்குப் பூங்காவும் உள்ளது. இங்கு கரடி மற்றும் புள்ளி மான்கள் போன்றவற்றை காணலாம். இந்த அணைக்கட்டு அருகில் ரிசார்ட் ஒன்றும் உள்ளது. பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றை கொண்ட இந்த ரிசார்ட் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது.

Vijaymp

தான்சா வனவிலங்கு சரணாலயம்

தான்சா வனவிலங்கு சரணாலயம்


தானேவில் அமைந்துள்ள தான்சா வனவிலங்கு சரணாலயம் வாடா, மோக்கதாஸ் மற்று ஷாஹாபூர் போன்ற மூன்று தாலுக்காக்களில் சுமார் 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த சரணாலயம் எந்த ஒரு இயற்கை மற்றும் காட்டுயிர் ரசிகரையும் மகிழ்ச்சியூட்டக் கூடியது. இதில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த அரிய தாவரங்களும், விலங்கினங்களும் காணப்படுகின்றன. 200 வகையான பறவைகளும் 50 வகையான விலங்குகளும் இங்கு உள்ளன. சாம்பார் மான், கழுதைப்புலி, எலி மான், சிறுத்தைப்புலி, குரைக்கும் மான், கருஞ்சிறுத்தை, காட்டுப்பன்றி, நரிகள் மற்றும் புலி போன்றவை இந்த சரணாலயத்தில் உள்ள பிரசிதிபெற்ற விலங்குகள் ஆகும். மேலும், கடம்ப மரம், ஓலிவ் மரம், கருங்காலி மரம், புளிய மரம், தேக்கு மற்றும் காட்டு மூங்கில் போன்ற பல்வகை மரங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த சரணாலயத்துக்கு அருகில் உள்ள சூர்யமால் பகுதியில் பல தங்குமிட வசதிகள் உள்ளன. தான்சா ஏரியும் மஹாதேவ் கோயிலும் இங்கு அருகிலுள்ள இதர சுற்றுலா அம்சங்களாகும். மே மாதத்தில் இருந்து நவம்பர் வரையிலான காலம் இங்கு பயணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.

Adrita Ghosh 94

பைன்கங்கா காட்டுயிர் சரணாலயம்

பைன்கங்கா காட்டுயிர் சரணாலயம்


யாவத்மால் நகர், உமர்கேத் தேசில் வட்டத்தில் அமைந்துள்ள பைன்கங்கா காட்டுயிர் சரணாலயத்தின் மூன்று புறமும் பைன்கங்கா ஆறு சூழ்ந்திருப்பதால் அந்த ஆற்றின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. தோராயமாக 325 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தாவர வகைகளும் உயிரினங்களும் நிறைந்துள்ளன. தாவர வகைகளில் இங்கு உலர் தேக்கு மரக்காடுகள் மற்றும் தெற்குப்பிரதேச கலவையான இலையுதிர்காடுகள் காணப்படுகின்றன. உயிரினங்களில் சிங்காரா மான், பிளாக் பக் மான், சாம்பார் மான், நான்கு கொம்பு கலை மான், குள்ள நரி, முயல், நரி, சிறுத்தை போன்றவை இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. இவை தவிர பலவகை பறவை வகைகளையும் பறவை ரசிகர்கள் இங்கு காணலாம்.

Photofrapher

சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம்

சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம்


சாங்க்லி நகரத்தின் அருகில் உள்ள இந்த சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக உள்ளது. இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடிக்கும்படியாக இங்கு பலவகை தாவரவகைகளும் உயிரினங்களும் காணப்படுகின்றன. சாங்க்லி நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் மனித முயற்சியில் காட்டுப்பிரதேசங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பரந்துவிரிந்து காணபடும் இந்த சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயத்தில் சிறுத்தைகள், மான்கள், காட்டுப்பசு, மயில் மற்றும் முயல்கள் போன்றவை வசிக்கின்றன. பலவகை பூச்சி வகைகள் மற்றும் ஊர்வன விலங்குகளையும் இங்கு காணலாம். இந்த சரணாலயத்திற்கு அருகிலேயே சங்கமேஷ்வர் கோவிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hari Priya

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்