Search
  • Follow NativePlanet
Share
» »16 அடி துப்பாக்கி! பத்மநாபபுரத்துக்கு சுரங்கப் பாதை..! உதயகிரியின் மர்மம் என்ன ?

16 அடி துப்பாக்கி! பத்மநாபபுரத்துக்கு சுரங்கப் பாதை..! உதயகிரியின் மர்மம் என்ன ?

கன்னியாகுமரி தமிழ்நாட்டின் தென்கோடியில் மூன்று‌ பக்கமும் கடல் சூழ்ந்த கடைசி நகரமாகும். உலக புகழ்ப்பெற்ற சுற்று‌லா நகரமான கன்னியாகுமரியை சுற்றி விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோவில், வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, கோதையார், பேச்சிப்பாறை அணைக்கட்டு, திருவட்டாறு‌என முக்கிய சுற்று‌லா தலங்கள் உள்ளன. கன்னியாகுமரியில் 3 கடல்கள் சங்கமிக்கும் காட்சியும், ஒரே நாளில் சூரியன் மறைவதும், சந்திரன் எழுவதும் காணக் கிடைக்காத அரிய காட்சிகள். இங்குதான் உள்ளது 410 ஆண்டுகள் பழமை வாய்ந்த‌ உதயகிரிக் கோட்டை. நாகர்கோவிலிருந்து‌ 14 கிலோ மீட்டர் தூரத்தில் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து‌ள்ள புலியூர்குறிச்சியில் உள்ளது‌.

உதயகிரி கோட்டை

உதயகிரி கோட்டை

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு முன்பு வரை திருவிதாங்கூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. எனவே இந்த மாவட்டத்தை சுற்றி ஏராளமான கோட்டைகளை இன்றும் காண முடியும். அதில் ஒன்றுதான் தக்கலைக்கு அருகில் உள்ள உதயகிரி கோட்டை. சுமார் 81 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையைச் சுற்றிலும் 16 அடி உயர கருங்கல் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை உருவான வரலாறு மிக சுவாரஸ்யமானது.

Sugeesh

துப்பாக்கிகளை பாதுகாக்கும் கோட்டை

துப்பாக்கிகளை பாதுகாக்கும் கோட்டை

உதயகிரி கோட்டை திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், அந்த சாலை வழியாக பயணிக்கும் யாரும் இதைப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள். இந்தக் கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனால் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா இக்கோட்டையை 18-ஆம் நூற்றாண்டில் மறுகட்டுமானம் செய்தார். துப்பாக்கிகளை வைப்பதற்காகவே இந்த கோட்டை கட்டப்பட்டது.

Sugeesh

வழிநெடுகிலும் மூங்கில் காடுகள்

வழிநெடுகிலும் மூங்கில் காடுகள்

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த காலம். திருவிதாங்கூரை மார்த்தாண்ட வர்மா ஆட்சி செய்து கொண்டிருந்தார். மார்த்தாண்ட வர்மாவிற்கும் டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் பகை தலைதூக்கியிருந்த போது குளச்சல் கோட்டை டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு ஏராளமான வீரர்கள் தங்கியிருந்தனர்.

Infocaster

கோட்டையை கைப்பற்றிய மார்த்தாண்டன்

கோட்டையை கைப்பற்றிய மார்த்தாண்டன்

போதிய இடமும், உணவும் இல்லாததால் தொற்று வியாதிகள் மூலம் டச்சு படை வீரர்கள் பலர் உயிரிழக்கத் தொடங்கினர். இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு குளச்சலில் இருந்த டச்சுக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த மார்த்தாண்ட வர்மா திட்டமிட்டார். இந்தத் தாக்குதலை டச்சுக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. டச்சு வீரர்கள் மார்த்தாண்ட வர்மாவால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உதயகிரிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

Appusviews

16 அடி உயர கருங்கல் கோட்டை

16 அடி உயர கருங்கல் கோட்டை

கோட்டையைச் சுற்றிலும் உள்ள கோட்டைச் சுவர் 16 அடி உயரத்தில் மிக கம்பீரத் தோற்றத்துடுன் காட்சியளிக்கிறது. இங்கு தான், கைது செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராக டச்சுத் தளபதி யுஸ்டேஷியஸ் டிலனாய் அடைத்தும் வைக்கப்பட்டார்.

YVSREDDY

துப்பாக்கி தொழிற்சாலை

துப்பாக்கி தொழிற்சாலை

90 ஏக்கர் பரப்பளவில் அமைந்து‌ள்ள இந்த கோட்டையை முன்னின்று‌ கட்டியவர் டி லனோய் என்ற கடற்படைதளபதி ஆவார். இந்தக் கோட்டைக்குள் 200 அடி உயரமலைக் குன்று‌ ஒன்று‌ அமைந்து‌ள்ளது‌.முழுவது‌ம் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை தில்லாணைக் கோட்டை என்று‌ம் அழைக்கப்படுகிறது‌. இந்தக் கோட்டைக்குள் து‌ப்பாக்கி வார்ப்படம் செய்யும் உலை ஒன்று‌ உள்ளது‌. மன்னர் காலத்தில் இங்கு து‌ப்பாக்கிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது‌.

Sugeesh

16 அடி நீள துப்பாக்கி

16 அடி நீள துப்பாக்கி

இந்தக்கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணு‌வ படைகள் 19-ம் நூற்றாண்டு இடைப்பகுதியில் நிறு‌த்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது‌. கோட்டையினு‌ள் அமைந்த தூப்பாக்கி வார்ப்பட தொழிற்சாலையில் கண்டெடுக்கப்பட்ட 16 அடி நீள து‌ப்பாக்கியை அங்கிருந்து‌ எடுத்து‌ச் செல்ல முடியாமல் பல ஆண்டுகள் வீரர்கள் தவித்ததாக கதைகள் உண்டு. பின்னர், 1200 வீரர்கள் மற்று‌ம் 19 யானைகளின் உதவியுடன் அங்கிருந்து‌ அந்த துப்பாக்கி எடுத்து‌ச் செல்லப்பட்டதாக சான்றுகள் உள்ளன.

Ssriram mt

விசித்திரமூட்டும் அமைதி

விசித்திரமூட்டும் அமைதி

கோட்டையினு‌ள் பழைய மாதா கோவில் போன்று‌ அமைந்த ஒரு கட்டிடம் இடிந்த நிலையில் உள்ளது‌. இங்கு தான் தளபதி டி லனோய் அவரது‌ மனைவி, மகன் ஆகியோரது‌ கல்லறைகளும் உள்ளன. கோட்டையினைச் சுற்றிவரும்போது‌, ஒரு அமைதியான சூழல் இருப்பதை உணர முடியும். விசித்தரமான தனிமை உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது‌. கோட்டையினு‌ள் பெரிய அரண்மனையோ, கோவிலோ இல்லை.

YVSREDDY

இரகசிய சுரங்கப்பாதை

இரகசிய சுரங்கப்பாதை

இந்தக் கோட்டை ஒரு காலத்தில், கைதிகளை காவலில் வைத்திருக்கும், களமாகவும் விளங்கியுள்ளது‌. திப்புசுல்தானு‌க்கு எதிராக கிழக்கிந்திய கம்பெனி போரிட்டபோது‌ பிடிபட்ட கைதிகளை கிழக்கிந்திய கம்பெனி இங்கு பாது‌காப்பாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது‌. அண்மையில் தொல்பொருள் ஆய்வுத் து‌றையினர் கோட்டையின் அருகே ஒரு சுரங்கப்பாதையினை கண்டுபிடித்து‌ள்ளனர். அந்தப் பாதை கோட்டையிலிருந்து ‌பத்மநாபபுரம் அரண்மனைக்கு ரகசியமாக செல்லு‌ம் வகையில் அமைந்து‌ள்ளது‌ குறிப்பிடத்தக்கது.

YVSREDDY

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

உதயகிரி கோட்டை தற்போது‌ தமிழக வனத்து‌றையின் கட்டுப்பாட்டில் உள்ளது‌. மான்பூங்கா, மயில்பூங்கா, விருந்தினர் விடுதி என புதுப்பொலிவு பெற்று சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் பேருந்தில் ஏறி புலியூர்க்குறிச்சியில் இறங்கி, அங்கிருந்து ஒரு சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த உதயகிரிக்கோட்டை.

srithern

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more