Search
  • Follow NativePlanet
Share
» »வால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..!

வால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..!

தென் இந்தியாவின் மேன்செஸ்டர், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகையில் அபரிவித அளவு என கோயம்புத்தூர் மாவட்டம் பல வளர்ச்சிகளைக் கண்டாலும், இன்றளவும் கோயம்புத்தூருக்கு உட்பட்ட பல மலைப் பிரதேசத் தலங்கள் தனது பொழிவை இலக்காமல் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பெருமை கொண்டுள்ளது. இந்த வகையில் கோயம்புத்தூர்க்கு உட்பட்ட வால்பாறை எந்த கால சூழ்நிலையும் தனது குழுமை குறையவிடாமல் ஜில்லென்ற காலநிலையைக் கொண்டுள்ளது. கோடையை பயணத்தில் கழிக்க விரும்வோர் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்ல எந்த சாலை சிறந்தது என தெரியுமா ?

பசுமைக் காடுகள்

பசுமைக் காடுகள்

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்புத்தூரை தனியாக பிரித்து வைக்கும் இயற்கைக் கோடு மேற்குத்தொடர்ச்சி மலை எனலாம். சுமார் 1600 கிலோமீட்டர்கள் பரந்துவிரிந்து உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் பசுமைக் காடுகள், வனவிலங்குகள், கொட்டும் நீரோடை என ஆண்டுதோரும் பசுமை நிறைந்து காணப்படும்.

Vinay Robin Antony

பொள்ளாச்சி - வால்பாறை

பொள்ளாச்சி - வால்பாறை

பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் வழியாக சுமார் 65 கிலோ மீட்டர் பயணித்தால் தேயிலைத் தோட்டங்கள் நிறம்பிய பசுமைக் காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது வால்பாறை. இந்த இடைப்பட்ட தூரத்தில் பொள்ளாச்சியில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழியார் அணை, இதனை அடுத்துள்ள குரங்கு அருவி உங்களது பயணத்தை உற்றாகத்துடன் துவக்கி வைக்கும். நீங்கள் மீன் விரும்பியாக நீங்கள் இருந்தால் ஆழியார் அணையின் வெளிப்புறத்தில் வரிசையாக இருக்கும் மீன் கடைகளில் ஒரு வெளுவெளுத்துட்டு வாங்க.

Sivavkm

வால்பாறை - சோலையாறு

வால்பாறை - சோலையாறு

வால்பாறையில் இருந்து 25 கிலோ மீட்டர் காட்டு வழி சாலையில் பயணித்தால் மலை முகடுகளின் நடுவே உள்ள சோலையாறு அணையை அடையலாம். இந்த சாலை சற்று கறடுமுறடான சாலை என்பதால் அதற்கு ஏற்றவாறு வாகனங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இதன் இடைப்பட்ட தூரத்தில் பெட்ரோல் நிலையங்களும் இல்லாத காரணத்தால் முன்கூட்டியே பெட்ரோல் நிறப்பிக்கொள்வது நல்லது. சக்கரத்தில் காற்றையும் சரிபார்த்துக்கொள்ள தவறிவிடாதீர்கள்.

Unknown

சோலையாறு அணை

சோலையாறு அணை

ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படும் சோலையாறு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கம் ஆகும். 160 அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், சுற்றியுள்ள மலைக் காடுகள் புகைப்பட விரும்பிகளை பெரிதும் ஈர்க்கக் கூடிய தன்மைகொண்டது.

Dilli2040

தொட்டபுரா காட்சி முனை

தொட்டபுரா காட்சி முனை

சோலையாறு அணையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அடர் வனப்பகுதியின் நடுவே உள்ளது தொட்டபுரா காட்சி முனை. ஆனைமலை- சாலக்குடி சாலையில் உள்ள இதன் அருகிலேயே சோலையாறு நீர்த்தேக்கமும் உள்ளது. சோலைவனக் காடுகளில் பெருக்கெடுத்து வரும் நீர் இப்பகுதியிலேயே இணைந்து பெரிய அணைபோல காட்சியளிக்கிறது. புகைப்படக் கலைஞராக இருந்தால் இந்தக் காட்டின் சற்று உட்புறத்தில் சுற்றித்திரியும் மான், முள்ளம்பன்றி, யானை, சாம்பார் மான் உள்ளிட்ட எளிதில் கண்களுக்குப்படும் விலங்குகளை புகைப்படம் எவ்வித இடையூறுமில்லாமல் புகைப்படம் எடுக்கலாம். ஆனால், வனப்பகுதியின் உட்புறத்தில் நீண்ட தூரம் செல்வதை தவிக்க வேண்டும்.

Jaseem Hamza

தொட்டபுரா - வழச்சல் நீர்வீழ்ச்சி

தொட்டபுரா - வழச்சல் நீர்வீழ்ச்சி

தொட்புராவில் இருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக- கேரள எல்லையில் சோலயார் மலைப்பகுதியில் உள்ளது வழச்சல் நீர்வீழ்ச்சி. இது சாலக்குடி காடுகளிலிருந்து 36 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர் வனப்பகுதியாகும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைப்போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் வேகமாக ஓடும் ஆறு போன்றே இந்த நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு நயாகரா போன்றே இதுவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

Ashujnmc

யானை வனச்சரகம்

யானை வனச்சரகம்

வழச்சல் நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதிகள் ஆற்றங்கரை பசுமைத்தாவரங்களை மிகுதியாக கொண்டுள்ளன. மேலும் இப்பகுதி முக்கியமான பறவைகள் சரணாலயமாகவும் இந்தியாவின் சிறந்த யானைப்பாதுக்காப்பு வனச்சரகமாகவும் அறியப்படுகிறது. பொதுவாக குறைந்த நீர் மட்டத்துடன் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து மிக பிரம்மாண்டமான அகலமான ஆக்ரோஷமான வேகத்துடன் நீர் வழியும் நீர்வீழ்ச்சியாக மாறி விடுகிறது.

Jan Joseph George

வழச்சல் - அதிரப்பள்ளி

வழச்சல் - அதிரப்பள்ளி

வழச்சலில் இருந்து சாலக்குடி ஆற்றங்கரையை ஒட்டியவாறே சுமுர் 5 கிலோ மீட்டர் பயணித்தால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடையலாம். இதன் இடையில் வழச்சலில் இருந்ழ ஒரு சிலை கிலோ மீட்டர்களிலேயே சப்ரா நீர்வீழ்ச்சியும் உள்ளது. இதனையடுத்து கேரள எல்லையான திருச்சூர் மலைப்பிரதேசத்தில் கொச்சியிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது.

Dilshad Roshan

ரம்மியமான வனப்பகுதி

ரம்மியமான வனப்பகுதி

தென்னிந்தியாவின் மிகப்பிரசித்தமான நீர்வீழ்ச்சிக்கும் ரம்மியமான வனப்பகுதிகளுக்கும் இந்த அதிரப்பள்ளி புகழ்பெற்று விளங்குகிறது. பல்லுயிர் பெருக்கத்துக்கான இயற்கை வளத்தை பெற்றிருக்கிறது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்ற பிரசித்தமான நீர்வீழ்ச்சியோடு வழச்சல் மற்றும் சர்ப்பா என்ற துணை நீர்வீழ்ச்சிகளும் சேர்ந்து மொத்தம் மூன்று நீர்வீழ்ச்சிகள் இந்த அதிரப்பள்ளி கிராமப்பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதியின் இயற்கை வளம் கேரளாவில் வேறெங்கும் காணமுடியாத தனித்தன்மையான செழிப்பை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Smartsweet32632

பசுமைவனக் காடு

பசுமைவனக் காடு

மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் இப்பகுதி அடர்த்தியான தாவரங்களுடனும் பலவகைப்பட்ட உயிரினங்களுடனும் காட்சியளிக்கிறது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி அதிரப்பள்ளி வழச்சல் வனப்பகுதி என்று அழைக்கப்படுகிறது. அருகி வரும் பல உயிரினங்களும் பறவைகளும் இந்த காடுகளில் வசிக்கின்றன. இந்திய காட்டுயிர் அறக்கட்டளை அமைப்பு இந்த அதிரப்பள்ளி வனப்பகுதியை இந்தியாவிலேயே மிகச்சிறந்த யானைகள் பாதுகாப்பு தலமாக குறிப்பிட்டுள்ளது.

Jaseem Hamza

அதிரப்பள்ளி- சாலக்குடி

அதிரப்பள்ளி- சாலக்குடி

அதிரப்பள்ளியில் இருந்து சாலக்குடி ஆற்றங்களை ஓரமாக சுமார் 24 கிலோ மீட்டர் பயணித்தால் சாலக்குடியை அடைந்துவிடலாம்.

Jaseem Hamza

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X