Search
  • Follow NativePlanet
Share

வால்ப்பாறை - தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி!

23

தமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வால்ப்பாறை, கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் ஆணைமலை மலைத்தொடரின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. வால்ப்பாறையில் முதன் முதலில் மனிதன் குடிபுகுந்து 170 ஆண்டுகள் நிறைவு அடைந்த பிறகும், இந்த மலைப்பிரதேசத்தின் கீழ் வரும் பெரும்பான்மையான மலை இடங்கள் இன்னும் மக்கள் வசிப்பதற்கு உகந்ததாக இல்லை. அடர்ந்த காடுகள், காட்டு அருவிகள் மற்றும் மெல்லிய ஓசையெழுப்பும் ஓடைகளுடன் தேனீர் மற்றும் காபி தோட்டங்களும் இந்த மலைப்பிரதேசத்தில் காணப்படுகின்றன.

வால்ப்பாறையில் இருந்து ஆழியாறு வரை ஏறத்தாழ 40 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. வால்ப்பாறையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் பொள்ளாச்சி நகரம் அமைந்துள்ளது. அதோடு கோயம்புத்தூர் வால்ப்பாறையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

வால்ப்பாறையிலும் அதை சுற்றிலும் இருக்கும் சுற்றுலா தளங்கள்

வால்ப்பாறையின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, நீரார் அணை, கணபதி கோவில், அன்னை வேளாங்கன்னி ஆலயம், சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் இன்னும் சுற்றுலாப் பயணிகளால் அணுக முடியாத இடத்தில் இருக்கின்றன.

மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக 'தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி' என்று வால்ப்பாறை அழைக்கப்படுகிறது. இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான சின்னக்கல்லாரை இதற்கு ஒரு உதாரணம். இவ்விடம் தோட்டங்களுக்கும், தேனீர் தொழிற்சாலைகளுக்கும், அணைகளுக்கும் பெயர்பெற்றதாக இருக்கின்றது.

தேனீர் தோட்டங்களின் வழியாக காலையில் நடைபயில்வது உங்கள் ஆன்மாவை இயற்கையின் மடியில் விழித்தெழச் செய்யும் அற்புத உணர்வு. இவ்விடத்தின் காட்டு வாழ்க்கையும், இயற்கை அழகும் புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

வால்ப்பாறையை எப்படி அடைவது?

சாலைவழியாகவும், தொடர்வண்டி வழியாகவும் வால்ப்பாறை நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. வால்ப்பாறைக்கு நெருக்கமான விமானநிலையம், 120 கி.மீ. தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் விமானநிலையம்.

சாலை வழியாக வால்ப்பாறைக்கு செல்வது மிகவும் சுலபம். கோயம்புத்தூரில் இருந்து சொகுசு வாகனங்கள் ஏற்கக்கூடிய கட்டணத்தில் உங்களை வால்ப்பாறைக்கு அழைத்துச் செல்லும்.

வால்ப்பாறையின் பனிக் காலங்களிலும், மழைக் காலங்களிலும் குளிர் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்தக் காலங்களிலும் நீங்கள் வால்ப்பாறைக்கு சுற்றுலா வரலாம். எனினும் கோடை காலங்களில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை சுற்றுலாவுக்கு மிகவும் பொருத்தமானது.

வால்ப்பாறை சிறப்பு

வால்ப்பாறை வானிலை

சிறந்த காலநிலை வால்ப்பாறை

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது வால்ப்பாறை

  • சாலை வழியாக
    வால்ப்பாறைக்கு நெருக்கமாக இருக்கும் இடங்கள், 108 கி.மீ. தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் மற்றும் 65 கி.மீ. தொலைவில் இருக்கும் பொள்ளாச்சி. தேசிய நெடுஞ்சாலை 83 மற்று மாநில நெடுஞ்சாலை 78 வழியாக இந்த நகரங்களை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    வால்ப்பாறைக்கு மிகவும் நெருக்கமான ரயில் நிலையம் பொள்ளாச்சியில் இருக்கின்றது. அடுத்தது கோயம்புத்தூர் சந்திப்பு. கோயம்புத்தூர்-பொள்ளாச்சி பாதையில் எண்ணற்ற ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலமாக பொள்ளாச்சியை அடைந்து, பிறகு அங்கு இருந்து சாலை வழியாக வால்ப்பாறைக்குச் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    வால்ப்பாறைக்கு நெருக்கமான விமானநிலையம் 120 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் விமானநிலையம். நாட்டின் முக்கிய நகரங்களில் ஏதாகிலும் ஒன்றில் இருந்து கோயம்புத்தூருக்கு விமானத்தில் வந்து (கோயம்புத்தூர் விமானநிலையத்தில் இன்னும் எண்ணிக்கையில் சர்வதேச விமானங்களின் வரத்து அதிகமாக இல்லை), அங்கிருந்து பேருந்து அல்லது சொகுசு வாகனம் மூலமாக வால்ப்பாறைக்கு பயணிக்கலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue