Search
  • Follow NativePlanet
Share
» »விஜய்கர் கோட்டைக்கு ஒரு வியப்பூட்டும் பயணம் போலாமா?

விஜய்கர் கோட்டைக்கு ஒரு வியப்பூட்டும் பயணம் போலாமா?

விஜய்கர் கோட்டைக்கு ஒரு வியப்பூட்டும் பயணம் போலாமா?

By Udhaya

400 அடி உயரமுடைய இந்த 5ம் நூற்றாண்டு கோட்டை உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் கோல் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தைப் பற்றியும் அருகிலுள்ள இடங்கள் பற்றியும் நாம் காணலாம் வாருங்கள்.

எங்குள்ளது

எங்குள்ளது


ராபர்ட்ஸ்கஞ்ச் எனும் இடத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் ராபர்ட்ஸ்கஞ்ச் சர்ச் சாலையில் மாவ் கலான் எனும் கிராமப்பகுதியில் அமைந்துள்ளது.

Nandanupadhyay

கரடுமுரடான பாறை

கரடுமுரடான பாறை


இந்தகோட்டையின் பாதியளவு பகுதி கைமர் மலைகளின் கரடுமுரடான பாறைப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

Nandanupadhyay

வரலாற்று சுவடுகள்

வரலாற்று சுவடுகள்

இந்த கோட்டையின் தனித்தன்மையான அம்சங்களாக குகை ஓவியங்கள், சிலைகள், பாறை எழுத்துப்பொறிப்புகள் மற்றும் வற்றாத நான்கு தடாகங்கள் ஆகியவற்றை சொல்லலாம்.

Nandanupadhyay

உருஸ் திருவிழா

உருஸ் திருவிழா


பிரதான நுழைவாயிலுக்கு அடுத்ததாக சையத் ஜைனுலாபுதீன் மீர் சஹீம் என்பவரின் கல்லறை அமைந்துள்ளது. இவரது நினைவாக ஒரு உருஸ் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் எல்லா மதத்தாரும் கலந்து கொள்கின்றனர்.
Nandanupadhyay

 நீர்த்தேக்கங்கள்

நீர்த்தேக்கங்கள்

கோட்டைக்கு அருகிலேயே மீரா சாகர் மற்றும் ராம் சாகர் எனப்படும் நீர்த்தேக்கங்களும் அமைந்துள்ளன. இவற்றுக்கு மத்தியில் ரங் மஹால் பேலஸ் எனும் மாளிகையும் அமைந்துள்ளது. இதனுள்ளே அழகிய பாறைப்பொறிப்பு சித்திரங்கள் காணப்படுகின்றன.

Nandanupadhyay

ராம் சாகர் தீர்த்தம்

ராம் சாகர் தீர்த்தம்

கன்வாரியா என்று அழைக்கப்படும் சிவபக்தர்கள் இந்த ராம் சாகர் தீர்த்தத்திலிருந்து நீர்க்குடங்களை ஏந்தி தங்கள் இருப்பிடம் வரை நேர்த்தி கால்நடை யாத்திரை மேற்கொள்கின்றனர்
Nandanupadhyay

Read more about: travel fort
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X